"வேலை வேண்டும்" - தன்னை தானே 'ப்ளிப்கார்ட்டில்' விற்கும் ஐஐடி பட்டதாரி..!

|

படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வேலையே செய்யாமல் இருக்கும் நண்பர்களை பார்த்திருப்போம், வேறு வேலை செய்யும் பிழைக்கத்தெரிந்தவர்களை பார்த்திருப்போம், அவ்வளவு ஏன் - வேலை கிடைக்காமல் நொந்து போய் தற்கொலை செய்து கொன்றவர்களை பற்றிக்கூட கேள்வி பட்டிருப்போம்.

அப்படியாக, வேலையில்லா திண்டாட்டத்தில் வாழ்ந்தும்-நொந்தும் கொண்டிருக்கும் அனைவருக்குமே, ஆகாஷ் நீராஜ் மீட்டல் - ஒரு விசித்திரமான எடுத்துக்காட்டு ஆவார்..!

விற்பனை :

விற்பனை :

ஸ்மார்ட்போன் பற்றிய சிறப்பம்சங்களை விளக்கி விற்பனை செய்வது போல ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான ப்ளிப்கார்ட்டில் வேலை வேண்டும் என்று விளம்பரம் செய்து தன்னை தானே விற்கிறார் - ஆகாஷ் நீராஜ் மீட்டல்..!

ஐஐடி பட்டதாரி :

ஐஐடி பட்டதாரி :

ஆகாஷ் நீராஜ் மீட்டல் - ஒரு இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) பட்டதாரி என்பதும், இது ஒரு நிஜமான ப்ளிப்கார்ட் விளம்பரம் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெம்ப்லேட் :

டெம்ப்லேட் :

தன்னை தானே சுயவிளம்பரம் செய்துகொள்ள ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளத்தில் பொருட்கள் விற்கப்படும் அதே பாணியிலான டெம்ப்லேட் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

விலை :

விலை :

உடன் இந்த விளம்பரத்தில் தனக்கான விலையை ரூ. 27 லட்சத்து அறுபதாயிரத்து நானூறு என்று நிர்ணயம் செய்துள்ளார். மேலும், இனி இதுபோன்ற விற்பனை நடக்க வாய்ப்பே இல்லை, வாழ்நாள் வாரண்டி மற்றும் இலவச டெலிவரி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

5 ஸ்டார்கள் :

5 ஸ்டார்கள் :

தனக்கான மதிப்பாய்வுரையில் தனக்கு தானே 5 ஸ்டார்கள் கொடுத்திருக்கும் ஆகாஷ், "நாட்டிலுள்ள பெரும்பாலான மூளைகோடு போட்டிப்போட்டு ஒரு வேலையில் அமர்வதென்து மிகவும் கடினம்" என்றும் இந்த விளம்பரம் சார்ந்த தனது கருத்தை கூறியுள்ளார்.

கிறுக்குத்தனம் :

கிறுக்குத்தனம் :


மேலும், "கிறுக்குத்தனமாக ஏதாவது செய்தால் தான் கூட்டத்தில் இருந்து தனியாக நிற்க முடியும்" என்று கூறியது மட்டுமின்றி "இதை எனது ரெஸ்யூமாக கருதிகிறேன்" என்றும் ஆகாஷ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உங்கள் 'ரெஸ்யூம்' நிராகரிக்கப்பட 10 வாய்ப்புகள் இருக்கின்றன..!!


வெற்றியாளர்கள் 'ஒருபோதும்' செய்ய விரும்பாத 9 விஷயங்கள்..!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
IITian Looking For A Job At Flipkart Sells Himself On The Website. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X