ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியின் இறுதிச்சுற்றில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் அணி.!

தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் பல்வேறு துறைகளில் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதில் மஸ்க் நிறுவனங்கள் முன்னோடியாக இருக்கின்றன.

|

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தங்கள் அடுத்த தலைமுறை மற்றும் எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கு தூண்டுகோளாக இருக்கின்றன. தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் பல்வேறு துறைகளில் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதில் மஸ்க் நிறுவனங்கள் முன்னோடியாக இருக்கின்றன. அவ்வாறு அடுத்த தலைமுறை போக்குவரத்து சார்ந்த முறையை கண்டறிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சவால்மிக்க போட்டியை நடத்துகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் அணி.!

ஹைப்பர்லூப் பாட் என அழைக்கப்படும் இந்த போட்டி 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த போட்டியின் மூலம் மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அல்லாத குழுவினர் உருவாக்கும் சீராக இயங்கக்கூடிய ப்ரோடோடைப் போக்குவரத்து வாகனங்களை அடையாளம் காண திட்டமிடப்பட்டது. இதுவரை மூன்று முறை இந்த போட்டி வெற்றிகரமாக நிறைவுற்றிருக்கிறது. இதன் நான்காவது போட்டி இந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்குகிறது.

அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழு

அவிஷ்கர் ஹைப்பர்லூப் குழு

இதில் சாதிக்க நூற்றுக்கணக்கான குழுவினருடன் போட்டியிட்ட சேர்ந்த அவிஷ்கர் ஹைப்பர்லூப் ஐ.ஐ.டி. மெட்ராஸ் குழு இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது. இந்த குழு கடந்த ஆண்டும் போட்டியில் கலந்து கொண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. எனினும், விடாமுறயற்சியுடன் போராடிய அவிஷ்கர் குழு வெற்றிகரமாக ஹைப்பர்லூப் குறியீடு கண்டறியும் முயற்சியில் வெற்றி வாய்ப்பை நெருங்கி இந்த ஆண்டிற்கான இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

 800 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் ..

800 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் ..

ஐ.ஐ.டி. மெட்ராஸ்-இல் எம்.டெக் இறுதியாண்டு பயிலும் சுயாஷ் சிங் மூலம் கண்டறியப்பட்ட இக்குழுவில் அன்கித் குகாடியா மற்றும் வினித் சர்மா ஆகியோர் குழுவின் இணை தலைவர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களுடன் பல்வேறு மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் பணியாற்றுகின்றனர். இக்குழு ஒன்றிணைந்து போட்டியில் காட்சிப்படுத்த சீராக இயங்கும் ஹைப்பர்லூப் வாகனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இவர்களது கூட்டு முயற்சியில் உருவாகும் ஹைப்பர்லூப் பாட் மும்பையில் இருந்து சென்னைக்கு மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கும்.

இறுதிச்சுற்றில் ஒவ்வொரு குழுவும் உருவாக்கும் பாட் அதிவேகம் மற்றும் வெற்றிகரமாக செயல்படுத்துவதை பொருத்து வெற்றி நிர்ணயிக்கப்படும்.

 கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்ட சேசிஸ் மீது இருக்கும்

கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்ட சேசிஸ் மீது இருக்கும்

"ஹைப்பர்லூப் பாட் வடிவமைப்பை மேம்படுத்த குழு உறுப்பினர்கள் பல மாதங்களாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். நடைபெறும் போட்டியில் எங்களது குழு சக்கரங்களால் இயங்கும் வாகனத்தை காட்சிப்படுத்த இருக்கிறது. எங்களது பாட் சக்கரங்களாலேயே இயங்கும். இவை மோட்டார்கள் மற்றும் பேட்டரி பேக்குகள் மூலம் இயங்கும். இது மொத்தம் 2.7 எம்.எம். அளவு நீலமாக இருக்கும். இது கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்ட சேசிஸ் மீது இருக்கும். எங்களது பாட் 1.5 கிலோமீட்டர் நீலமுள்ள வாக்யூம் டியூபில் மணிக்கு 300-350 கிலோமீட்டர் வேகத்தில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இறுதிச்சுற்றில் காட்சிப்படுத்த எங்களது பாட் ஜூன் மாத மத்தியில் தயார்படுத்த திட்டமிட்டுள்ளோம்." என சுயாஷ் சிங் தெரிவித்தார்.

ஹைப்பர்லூப் என்றால் என்ன?

ஹைப்பர்லூப் என்பது ஐந்தாவது வகையான போக்குவரத்து முறையாகும். ஹைப்பர்லூப் முறையில் காந்த சக்தி மற்றும் லீனியர் இன்டக்‌ஷன் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாக்யூம் டியூப்களில் அதிவேகமாக பயணம் செய்யலாம். இதுபோன்ற சூழல்களில் காற்றோட்டம் குறைவாக இருக்கும் கேப்சியூல்களில் டியூப் மூலம் மணிக்கு அதிகபட்சம் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். வாக்யூம் நிலைகளை பொருத்து மெக்கானிக்கல் டிராக் மற்றும் ஏர் டிராக் போன்றவற்றால் இது சாத்தியமாகிறது. தற்சமயம் வரை இந்த பாடில் சுமை வைக்கும் படி உருவாக்கப்படவில்லை. வரும் போட்டிகளல் இக்குழு சுமையுடன் ஹைப்பர்லூப் பாடை முழு வீச்சில் இயக்க வைக்கும் பணிகளில் ஈடுபட இருக்கிறது. இத்துடன் எதிர்காலத்தில் இதே திட்டத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தவும் இக்குழு திட்டமிட்டுள்ளது.

"அதிவேகத்தில் செயல்படுத்த வைக்கும் ஒரே குறிக்கோளாடு எங்களது குழுவினர் பல்வேறு எடை, கோணம், கண்ட்ரோல் மற்றும் உபகரணங்களை பொருத்துவது என பல்வேறு கட்டங்களில் கடும் சூழ்நிலைகளை கடந்து வந்திருக்கின்றனர். எங்களது பாட் அதிவேகமாக செயல்படுத்த குறைந்த எடை மற்றும் சீரான கோணங்களை கொண்டிருப்பது முக்கியமாகும். மேலும், சரியான திட்டமிடல் மற்றும் பாடில் கண்ட்ரோல்களை சரியாக பொருத்துவது அதிக சவாலாக இருந்தது. எங்களது ஆசிரியர்களான டாக்டர். எஸ்.ஆர். சக்கரவர்த்தி, டாக்டர், பாபி ஜார்ஜ் மற்றும் துறையின் முன்னாள் மாணவர்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றனர். அவர்களது தொடர் கண்காணிப்பு எங்களுக்கு உத்வேகத்தை வழங்குகிறது." என சுயாஷ் தெரிவித்தார்.

இந்தியாவில் ஹைப்பர்லூப் சாத்தியப்படுத்துவது

இந்தியாவில் ஹைப்பர்லூப் சாத்தியப்படுத்துவது

திட்டத்தை செயல்படுத்துவதில் மற்ற சவால்களை விட இதற்கு முதலீடு பெறுவதற்கே அதிக கடினமாக இருந்தது. இதற்கென இக்குழு கெட்டோ மூலம் கூட்டு நிதி சேர்ப்பு பிரச்சாரம் செய்தது. மேலும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய சந்தை சார்ந்து பலர் நிதி வழங்க முன்வந்தனர். இதுவரை இல்லாத அளவு விஷயங்கள் மாறிவரும் நிலையில், இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டத்திற்கு அதிகளவு வரவேற்பு கிடைக்கும் என இக்குழு நம்புகிறது. ஏற்கனவே மகாராஷ்டிரா அரசாங்கம் விர்ஜின் ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மும்பையில் இருந்து பூனேவிற்கு ஹைப்பர்லூப் திட்டம் சோதனை செய்யப்படுகிறது. அவிஷ்கர் குழு இத்திட்டத்தை வணிகப்படுத்த முயற்சிக்கவில்லை என்றாலும் தற்சமயம் போட்டியில் சாதிக்கவே முழு கவனம் செலுத்துகிறது.

 ஹைப்பர்லூப் திட்டம் சாத்தியமாகும்

ஹைப்பர்லூப் திட்டம் சாத்தியமாகும்

"இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டம் சாத்தியமாகும் என்பதற்கு பல்வ்று காரணிகளை பார்க்கிறோம். அதிகளவு மக்கள் தொகை கொண்ட நம் தேசத்தில் பலர் திட்டமிட்ட வாழ்க்கைய வாழ்கின்றனர். இந்த வகையில் ஹைப்பர்லூப் வேகமான மற்றும் எளிமையான போக்குவரத்தாக மக்களுக்கு பயன்தரும். மேலும், தற்போதைய சுற்றுச்சூழலை பார்க்கும் போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஹைப்பர்லூப் போன்ற போக்குவரத்தே இப்போதைய தேவையாக இருக்கிறது. ஹைப்பர்லூப் கட்டமைக்க அடிப்படை முதலீடு அதிகமாக இருக்கலாம், எனினும் நீண்ட காலத்தில் இது படிப்படியாக குறையும்." என சுயாஷ் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
IIT Madras Team To Compete At SpaceX Hyperloop Pod Competition In 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X