இனி விஷவாயு தாக்கி ஒரு உயிரும் போகாது: ஐஐடி மெட்ராஸ் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு.!
குறைந்த வருவாய் குழுக்களை சேர்ந்த சுமார் 8,00,000 பேர் துப்பரவு பணியாளர்களாக பணியாற்றி வருவதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட 23,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் இறக்கிறார்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
உலகின் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கழிவுநீர் குழாய்கள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வது மிகவும் ஆபத்தான வேலையாகும்.ஏனெனில் இதை செய்வதற்கு நம்மிடம் எவ்விதமான திறமையான முறைகளும் இல்லாததால், ஆபத்தான சூழ்நிலைகளில் கைகளால் கழிவுகளை சுத்தம் செய்ய மனித பணியாளர்களை நம்பியிருக்கிறோம்.

குறைந்த வருவாய் குழுக்களை சேர்ந்த சுமார் 8,00,000 பேர் துப்பரவு பணியாளர்களாக பணியாற்றி வருவதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட 23,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் இறக்கிறார்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொழிலாளர்கள் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் குழாய்களுக்குள் அனுப்பப்படுவதால், அவர்கள் இறுதியில் மூச்சுத்திணறல் அல்லது விஷவாயுக்கள் தாக்குதலால் இறக்கின்றனர்.

ஐ.ஐ.டி. மெட்ராஸை சேர்ந்த மாணவர்கள்
தற்போது ஐ.ஐ.டி. மெட்ராஸை சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று இந்த பணியை ஆட்டோமேட் செய்வதன் மூலம் இத்தொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்றமுடியும் என நம்புகிறது.'சேப்பாய் செப்ட்டிக் டேங்க் ரோபோட்' என அழைக்கப்படும் இது அடுத்த மாதம் மூலம் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படவுள்ளது. உண்மையான சாக்கடைகளில் ஜூலை மாதத்தில் சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ உண்மையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டால், ஒருவேளை மாநில அரசாங்கங்களால் பயன்படுத்தப்படலாம்.

"தி பன்டிகோட்"
உண்மையில் இந்த ரோபோ கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "தி பன்டிகோட்" என்ற ரோபோவால் ஈர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. கேரளாவில் உள்ள ஜெனோரோபாட்டிக்ஸின் தயாரிப்பான அந்த ரோபாட் கழிவுப்பொருட்களை எடுத்து அதை கொள்கலின் சேகரித்து கழிவுநீர் குழாயிலிருந்து அதை வெளியேற்றி தூய்மைசெய்யும்.
அதன் இயந்திர பார்வை மூலம், பன்டிகோட் சுற்றுப்புறத்தில் நகர்ந்து தூய்மைசெய்யும். வெளியே இருக்கும் ஆபரேட்டர் அதை கட்டுப்படுத்தமுடியும்.

திடக்கழிவுகளை எளிதில் கையாளும் ..
எனினும் சேப்பாய் ரோபோட்டில், சிறிய பாட்-ஐ தேர்வு செய்வதற்கு பதிலாக, கழிவுகள் முழுவதையும் கையாளும் வகையில் வடிவமைக்க மாணவர்கள் விரும்பினர். மேலே உள்ள திரவ வடிவிலான கழிவுகள் எளிதில் பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டாலும், அடிப்பகுதியில் உள்ள திடக்கழிவுகளை அகற்றவே மனித தொழிலாளர்களை பொதுவாக பயன்படுத்துகின்றனர்.
திடக்கழிவுகளை எளிதில் கையாளும் வகையில், இந்த ரோபோட்டில் உள்ள வெட்டும் இயந்திரங்கள் அவற்றை வெட்டி கொள்கலனுக்கு அனுப்பும். சாக்கடை குழாய் திறப்பில் சரியாக பொருந்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக முன்மாதிரி நிலையில்
இக்குழு தற்போது சாபாய் கரம்சாரி ஆந்தோலன் (SKA) உடன் பங்குதாரராக இணைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தற்போதைக்கு இச்சாதனம் இன்னும் தொழில்நுட்ப ரீதியாக முன்மாதிரி நிலையில் இருந்தாலும், ஒரு வருடத்திற்குள் இறுதி தயாரிப்பை உருவாக்க முடியும் என நம்புகிறார்கள். பரிசோதனையை வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில் தெலுங்கானா அரசாங்கம் ஏற்கனவே அதை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.

நச்சுப் பொருள்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை
இருப்பினும் இந்த ரோபோ வடிவமைப்பில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது ரோபோக்கள் நச்சுப் பொருள்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் அவை தீப்பொறியை சமாளிக்கும் வகையிலும், திரவங்கள் உட்புகா வகையிலும், இருக்கவேண்டும். மேலும் சுற்றுப்புறங்களில் நகரக்கூடிய திறன் மற்றும் வயர்லெஸ் தகவல்தொடர்பு அமைப்பும் வடிவமைப்பில் உள்ளது. இந்த அனைத்து செலவுகளையும் சேர்த்தால், சேப்பாய் ரோபோவின் வடிவமைப்பு செலவு ரூ10 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை இருக்கலாம்.

மேம்பட்ட ரோபோ நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்
நாம் மனித உயிர்களை காப்பாற்ற விரும்பினால், துப்புரவு தொழிலாளர்களுக்கு மாற்றாக திறன் கொண்ட மலிவான ஆட்டோமேடன்களை உருவாக்க மேம்பட்ட ரோபோ நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications