Home
News

IIT மெட்ராஸ் உருவாக்கிய பறக்கும் டாக்ஸி! இனி Ola.. Uber-லாம் வானத்தில பறக்கும் போலயே?

இந்தியாவில் Ola, Rapido, Uber என்ற போக்குவரத்துக்குச் சேவைகள் மிகவும் பிரபலமாகியுள்ளன. இன்றைய காலகட்டத்தில், எல்லோரிடமும் இதில் எதாவது ஒரு மொபைல் ஆப்ஸ் (Mobile Apps) ஆவது இருக்கிறது. ஆட்டோ கேப், கார், பைக் என தேவைக்கேற்ப மக்கள் புக் செய்து பயணிக்கின்றனர்.

இனி வரும் காலத்தில், இந்திய மக்கள் மிக விரைவில் பறக்கும் டாக்ஸிகளை புக் செய்து பயணிக்கப்போகிறார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே.! அது தான் உண்மை. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நாம் இந்தியாவில் சொந்தமாகத் தயாரிக்கப்படும் பறக்கும் டாக்ஸிகள் மூலம் விரைவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக பயணிக்கப் போகிறோம்.

IIT மெட்ராஸ் உருவாக்கிய பறக்கும் டாக்ஸி! இனி Ola.. Uber-லா பறக்க போது!

IIT Madras உருவாக்கியுள்ள புதிய பிறகும் டாக்ஸி!

சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-Madras) உதவியுடன் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் புது பறக்கும் டாக்ஸியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உருவாக்கப்பட்ட பறக்கும் டாக்ஸியின் முன்மாதிரி சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ப்ரோட்டோடைப் பறக்கும் டாக்ஸியின் முன்மாதிரியானது ஒரு பயணத்திற்கு சுமார் 50 கிலோகிராம் பேலோடை எடுத்துச் செல்லக்கூடியது என்று கூறப்படுகிறது.

IIT மெட்ராஸ் உருவாக்கியுள்ள இந்த புதிய பறக்கும் டாக்ஸியானது ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 200 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. IIT மெட்ராஸ் உடன் இணைந்து, ePlane என்ற நிறுவனம் மூலம் இந்த பறக்கும் டாக்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேட் இந்த இந்தியா பறக்கும் டாக்ஸி ஆனது 10 மடங்கு வேகமான பயண அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

IIT மெட்ராஸ் உருவாக்கிய பறக்கும் டாக்ஸி! இனி Ola.. Uber-லா பறக்க போது!

60 நிமிட தூரத்தை இனி வெறும் 14 நிமிடத்தில் கடக்கலாமா?

இந்த பறக்கும் டாக்ஸி, 5x5 மீட்டர் கால்தடத்துடன், மின்சார சக்தியில், செங்குத்தாகப் புறப்படும் மற்றும் தரையிறங்கும் (eVTOL) அம்சத்துடன், ஒரு பறக்கும் வாகனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு SUV கார் அளவுவுடன் நெருக்கமாகப் பயணிக்கிறது. இதில் ஒரு மனித பைலட் உட்பட, இரண்டு பேர் அமர்ந்து பயணிக்க முடியும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனமாகும்.

சாதாரணமாக ஒரு நான்கு சக்கர காரில் 60 நிமிடம் மேற்கொள்ளப்படும் பயணத்தை, இந்த பறக்கும் கார் மூலம் நாம் வெறும் 14 நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும் என்று ePlane நிறுவனம் கூறுகிறது. இந்த பறக்கும் வாகனத்தில், நான்கு குழாய் மின்விசிறிகள் உந்துவிசைகளாகச் செயல்படுகின்றன. e200 தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இது இரண்டு வகைகளில் உருவாக்கப்படுகிறது. இதில் ஒன்று சரக்கு மற்றும் மற்றொன்று நகரப் பயணத்திற்காக உருவாக்கப்படுகிறது.

IIT மெட்ராஸ் உருவாக்கிய பறக்கும் டாக்ஸி! இனி Ola.. Uber-லா பறக்க போது!

இந்த பறக்கும் டாக்ஸியின் விலை என்னவாக இருக்கும்?

இந்த பறக்கும் டாக்ஸி வணிக ரீதியாகத் தொடங்கப்படுவதற்கு முன், இதன் முன்மாதிரி விமான ஒழுங்குமுறை இயக்குநரகம் சிவில் ஏவியேஷன் (DGCA) மூலம் அனுமதி பெற வேண்டும். ரோட் டாக்சிகளை அதே விலையில் ஏர் டாக்சிகளாக வணிகமயமாக்குவது தான் நிறுவனத்தின் நோக்கம் என்று ePlane கூறுகிறது. இந்த பறக்கும் டாக்ஸியின் அறிமுகம் அடுத்த ஆண்டு நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தான், இதன் விலைக் குறியீட்டைக் வெளியிட முடியுமென்று நிறுவனம் கூறியுள்ளது.

ePlane இன் படி, அவர்களின் பறக்கும் டாக்ஸி டெலிவரிகளுக்கான சரக்கு மற்றும் தொழில்துறை பயன்பாட்டுச் சேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. கூடுதலாக, பறக்கும் வாகனங்களை "சொகுசு கார்களாக மாற்றவும் நிறுவனத்திற்கு சில திட்டங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில், மக்கள் கார் வாங்குவதற்கு பதிலாகப் பறக்கும் கார்களை வாங்கி பயன்படுத்தினாலும் அதை கண்டு ஆச்சரியப்பட எதுவுமில்லை மக்களே.

இந்த பறக்கும் கார் பற்றி உங்களுடைய கருத்து என்ன? நீங்கள் ஒரு பறக்கும் காரை வாங்க ஆசைப்படுவீர்களா? இல்லை இது ஆபத்தானதா? என்று கமெண்டில் கருத்துக்களை பதிவிடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
IIT Madras Made a Prototype Of a New Flying Taxi Partnered With ePlane Startup in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X