சரியான நேரத்தில் புதிய கருவியை கண்டுபிடித்த சென்னை ஐ.ஐ.டி

|

அன்மையில் வெளிவந்த தகவலின் அடிப்படையில், சென்னையை விட பிற மாவட்டங்களின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் முதலில் ஜலதோஷம், உடல் வலி, இருமல், தும்மல், காய்ச்சல், நெஞ்சுவலி கடைசியில் மரணம் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இது லேசான காய்ச்சலில்தான் இது துவங்கும் எனக் கூறப்படுகிறது.

இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால்

கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருந்தால் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை நேரடியாக சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு

குறிப்பாக கொரோனா தொற்றுக்கு உள்;ளானவர்களிடம் இருந்து மற்ற நபர்களுக்கு நோய் தொற்று எளிதாக பரவுகிறது. இதனால் கொரோனா நோய் தெர்ற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள், செவிலியர்கள் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் புதுப்பிப்பு: புதிய விலை மற்றும் சலுகைகள்!பிஎஸ்என்எல் வழங்கும் இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் புதுப்பிப்பு: புதிய விலை மற்றும் சலுகைகள்!

இருந்தபோதிலும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள்

முன்னெச்சரிக்கையாக இருந்தபோதிலும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சையில் இருப்பவர்களிடம் டாக்டர்கள்,செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதை தவிர்க்க சென்னை ஐ.ஐ.டி ஒரு புதிய முயற்சியை
கொண்டுவந்துள்ளது.

 ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும்

அதன்படி சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் உடல் ஆரோக்கியம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மையம் ஆரோக்கியம் தொடர்பாக ஐ.ஐ.டி நடத்தி வரும் புதியதொழில் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஹைலிக்சன் நிறுவனம் ஆகியவை புதிய கருவியை கண்டுபிடித்து உள்ளது.

கொரோனா தொற்றுக்கு

மேலும் இந்த கருவியை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விரலில் பொருத்தினால் போதும், அந்த கருவியில் பொருந்தப்பட்டுள்ள ரிமோட் சென்சார் மூலம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, சுவாசம் போன்ற முக்கியமான அளவீடுகளை மற்றொரு அறையில் இருந்து செல்போன் மூலமாகவோ அல்லது மருத்துமனைகளின் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமோதுல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்.

அடிப்படையில் இந்த கருவி

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த கருவி ஆனது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும்,வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வரும் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் இதை ஒரு நோயாளிக்கு பொருத்திய கருவியை மற்றொரு நோயாளிக்கும் பொருத்தி கொள்ளலாம். குறிப்பாக புதிய கருவியை ஓராண்டு வரை பயன்படுத்தலாம்.

ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள

மேலும் சென்னை ஐ.ஐ.டி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இதேபோல தெற்கு ரெயில்வேயின் சிக்னல் மற்றும் தொலைதொடர்பு துறையின் சார்பில் கொரோனா நோயாளிகளை தொடாமல் அவர்களுக்கு தேவையான மருந்துகள், உணவு,தண்ணீர் வழங்க ரெயில் மித்ரா என்ற ரோபோ வடிவமைக்கப்பட்டு உள்ளது, பின்பு இந்த ரோபோ நோயாளிகளை தொடாமலேயே அவர்களுக்கு காய்ச்சல்
உள்ளதா? என்பதை அறிந்து கொள்ளும் தன்மை கொண்டது.

சென்று அப்புறப்படுத்தும்

பின்பு இந்த ரோபோவில் உள்ள கேமரா மூலம் கொரோனா நோயாளிகளுடன் பேச முடியும். மேலும் கொரோனா நோயளிகள் பயன்படுத்திய தண்ணீர் பாட்டில்கள்,முககவங்களைநோயாளிகள் பயன்படுத்திய தண்ணீர் பாட்டில்கள், முககவசங்களை எடுத்துசென்று அப்புறப்படுத்தும் வசதியும் உள்ளது என தெற்கு ரயில்வே அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Best Mobiles in India

English summary
IIT Madras Invented New Instrument For Treating Corona Patients: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X