தண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்!

பராமரித்தல் தான் இதில் முக்கிய அம்சமாக உள்ளது. பொதுவாக ரயில் தண்டவாளங்கள் கேங்மேன் என்றழைக்கப்படும் நபர்களால் பராமரிப்பு மற்றும் பரிசோதனை செய்யப்படும்.

|

கட்டுமான பொறியியல் துறையின் முக்கிய அம்சமே கட்டிடங்கள், பாலங்கள், ரயில் தண்டவாளங்கள் போன்ற கட்டமைப்புகளை பராமரிப்பது தான். இரயில் தண்டவாளங்களில் சிறு விரிசல்கள், தடம் பிரண்டல், வலிமை போன்றவற்றை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

தண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்!

பராமரித்தல் தான் இதில் முக்கிய அம்சமாக உள்ளது. பொதுவாக ரயில் தண்டவாளங்கள் கேங்மேன் என்றழைக்கப்படும் நபர்களால் பராமரிப்பு மற்றும் பரிசோதனை செய்யப்படும். இதிலுள்ள ஆபத்து என்னவெனில், ஆண்டுக்கு சராசரியாக 400 கேங்மேன்கள் ரயிலில் அடிபட்டு பணியிலிருக்கும் போதே இறக்கின்றனர்.

ஐஐடி மெட்ராஸ்

ஐஐடி மெட்ராஸ்

ஐஐடி மெட்ராஸ் எனப்படும் சென்னை - இந்திய தொழில்நுட்ப கழகத்தில் படிக்கும் மாணவர்கள் குழு ஆர்டிமிஸ்(Artemis) எனும் ரோபோட்டை வடிவமைத்துள்ளது. தண்டவாளங்களில் பொருத்திவிட்டால் 2சென்டி மீட்டர் அளவிலான சிறிய விரிசல்களை கூட சென்சார் மூலம் கண்டறிந்து, உடனுக்குடன் தகவல்களை அனுப்பவல்லது.

இன்ப்ராரெட் சென்சார்கள்

இன்ப்ராரெட் சென்சார்கள்

6 சக்கரங்களுடன் 1.5அடி நீளமுள்ள இந்த ரோபோட், தண்டவாளத்தில் 1m/s என்ற வேகத்தில் செல்லக்கூடியது. இதிலுள்ள அல்ட்ராசோனிக் மற்றும் இன்ப்ராரெட் சென்சார்கள் மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, மைக்ரோகன்ட்ரோலர் வழியாக அனுப்பப்படும். இது எடை குறைவானது மட்டுமில்லாமல், இரயில் தண்டவாளத்தில் செல்லும் போது கூட ரோபோட் நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆர்டிமிஸ்

ஆர்டிமிஸ்

ஆர்டிமிஸ் குழுவில் பணியாற்றிய ஐஐடி-எம் பயோடெக்னாலஜி மாணவரான சஸ்வட் சாகோ கூறுகையில்," நாங்கள் உருவாக்கியுள்ள இந்த அமைப்பு முழுவதும் ஆட்டோமேடிக்காக செயல்பட்டு, விரிசல் ஏற்பட்டுள்ள இடம் உள்ளிட்ட தகவல்களை துல்லியமாக உடனுக்குடன் அனுப்பி வைக்கும்" என்கிறார்.இது இந்திய ரெயில்வேக்கு மிகவும்

மலிவு விலை தீர்வாக அமையும். அதற்கேற்ற வகையில் எளிதாக கிடைக்கும் பொருட்களின் மூலமே இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது என தொடர்கிறார்.

ஜிஎஸ்எம்

ஜிஎஸ்எம்

இக்கருவியில் உள்ள ஜி.பி.எஸ் பிரிவில் ஜிஎஸ்எம் வசதியுள்ள சிம் கார்டு பொருத்தப்பட்டுள்ளது. சென்சார்கள் விரிசலை கண்டறிந்தவுடன் மைக்ரோகன்ட்ரோலருக்கு செல்லும் தகவல்கள் இதன் மூலம் அனுப்பப்படும்.

ஐஐடி கல்லூரிகளுக்கிடையேயான தொழில்நுட்ப கருந்தரங்கு 2018ல் சமர்பிக்கப்பட்ட ஏராளமான புதுமை படைப்புகளுடன் இந்ந ரோபோட்டும் சமர்பிக்கப்பட்டது. மேலும் பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்ட டம்மி தண்டவாளத்தில் பரிசோதிக்கப்பட்டது. ரெயில்வே துறையை அணுகி குறிப்பிட்ட பகுதியில் இந்த ரோபோட்டை பரிசோதித்து முடிவுகளை அறிய திட்டமிட்டுள்ளதாக அந்த குழுவின் மற்றொரு உறுப்பினரான கவன் சாவ்லா கூறுகிறார்.

"ரோபோட்டின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்காக சோலார் பேனல்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோட் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதன் பாகங்களை மாற்றுவற்கு தொழில்நுட்ப வல்லமை ஏதும் தேவைப்படாது என்கிறார் சாவ்லா.

Best Mobiles in India

English summary
IIT Madras Folks Build Robot to Detect Cracks in Rail Tracks, Prevent Train Accidents : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X