Home
News

வெறும் 30 விநாடிகளில் பால் கலப்படத்தை கண்டறிய புதிய கருவி: அசத்தும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.!

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. குறிப்பாக சில அதிநவீன தொழில்நுட்பங்கள் மக்களுக்கு அதிக பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்நிலையில் கலப்படமான பாலை வீடுகளிலேயே எளிதாகக் கண்டறியும் வகையிலான ஒரு கையடக்க கருவி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கையடக்க கருவி: அதாவது உலகிலேயே அதிக கலப்படம் உள்ள பொருளாகப் பால்தான் அறியப்படுகிறது. அதிலும் இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகளில் பாலில் கலப்படம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை தரும் விஷயமாக உள்ளது. இந்த கலப்பட பாலால் சிறுநீரகப் பிரச்சனை, இரப்பை குடல் அழற்சி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

வெறும் 30 விநாடிகளில் பால் கலப்படத்தை கண்டறிய புதிய கருவி.!

இந்த நிலையில் மெட்ராஸ் ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மக்கள் தங்களது வீடுகளிலேயே எளிய முறையில் பால் கலப்படத்தைக் கண்டறியும் ஒரு அசத்தலான கையடக்க கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள 3டி காகித அடிப்படையிலான இந்த சாதனத்தின் மூலம் வெறும் 30 விநாடிகளுக்குள் கலப்படத்தைக் கண்டறியலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக பாலில் கலப்படம் செய்யப்படுவதாகச் சொல்லப்படும் யூரியா, சோப்பு, ஸ்டார்ச் மற்றும் ஹைட்ரஜன் கார்பனேட் ஆகிய வேதிப் பொருள்கள் எந்தெந்த அளவில் கலக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த கருவி எளிமையாக கண்டுபிடித்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கருவி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த கருவியின் மூலம் குடிநீர், பழச்சாறு, பால் கலந்த பானம் போன்றவற்றிலும் கலப்படத்தை கண்டறியலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற அசத்தலான கண்டுபிடிப்புகள் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

வெறும் 30 விநாடிகளில் பால் கலப்படத்தை கண்டறிய புதிய கருவி.!

குறிப்பாக ஐ.ஐ.டி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை இணைப் பேராசிரியரான டாக்டர் பல்லப் சின்ஹா மஹாபாத்ரா தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில், ஆராய்ச்சியாளர்கள் சுபாஷிஸ் பட்டரி, டாக்டர் பிரியங்கன் தத்தா ஆகியோரும் இணைந்து இந்த கருவியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பறக்கும் டாக்ஸி: அதேபோல் ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி, சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT-Madras) உதவியுடன் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் புது பறக்கும் டாக்ஸியை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உருவாக்கப்பட்ட பறக்கும் டாக்ஸியின் முன்மாதிரி சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஏரோ இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ப்ரோட்டோடைப் பறக்கும் டாக்ஸியின் முன்மாதிரியானது ஒரு பயணத்திற்கு சுமார் 50 கிலோகிராம் பேலோடை எடுத்துச் செல்லக்கூடியது என்று கூறப்படுகிறது.

IIT மெட்ராஸ் உருவாக்கியுள்ள இந்த புதிய பறக்கும் டாக்ஸியானது ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 200 கிலோமீட்டர்கள் வரை பயணிக்கக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. IIT மெட்ராஸ் உடன் இணைந்து, ePlane என்ற நிறுவனம் மூலம் இந்த பறக்கும் டாக்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேட் இந்த இந்தியா பறக்கும் டாக்ஸி ஆனது 10 மடங்கு வேகமான பயண அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.

வெறும் 30 விநாடிகளில் பால் கலப்படத்தை கண்டறிய புதிய கருவி.!

சாதாரணமாக ஒரு நான்கு சக்கர காரில் 60 நிமிடம் மேற்கொள்ளப்படும் பயணத்தை, இந்த பறக்கும் கார் மூலம் நாம் வெறும் 14 நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும் என்று ePlane நிறுவனம் கூறுகிறது. இந்த பறக்கும் வாகனத்தில், நான்கு குழாய் மின்விசிறிகள் உந்துவிசைகளாகச் செயல்படுகின்றன. e200 தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இது இரண்டு வகைகளில் உருவாக்கப்படுகிறது. இதில் ஒன்று சரக்கு மற்றும் மற்றொன்று நகரப் பயணத்திற்காக உருவாக்கப்படுகிறது.

இந்த பறக்கும் டாக்ஸி வணிக ரீதியாகத் தொடங்கப்படுவதற்கு முன், இதன் முன்மாதிரி விமான ஒழுங்குமுறை இயக்குநரகம் சிவில் ஏவியேஷன் (DGCA) மூலம் அனுமதி பெற வேண்டும். ரோட் டாக்சிகளை அதே விலையில் ஏர் டாக்சிகளாக வணிகமயமாக்குவது தான் நிறுவனத்தின் நோக்கம் என்று ePlane கூறுகிறது. இந்த பறக்கும் டாக்ஸியின் அறிமுகம் அடுத்த ஆண்டு நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு தான், இதன் விலைக் குறியீட்டைக் வெளியிட முடியுமென்று நிறுவனம்
கூறியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
IIT Madras develops new portable device to detect milk adulteration : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X