பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!

|

எந்த ஒரு தொழில்நுட்பமாக இருந்தாலும், அது அனைவருக்கும் பயன்படும் வகையில் இருந்தால் தான், அது உண்மையிலேயே முழுமையாக வெற்றி அடைந்ததாக அர்த்தமாகிறது. என்ன தான் பல புதிய தொழில்நுட்பங்கள் (Technology) உருவாக்கப்பட்டாலும், அவை எல்லோருக்கும் பயனுள்ளதாய் அமைவதில்லை.

உதாரணமாக, நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள் மாற்றுத்திறனாளிகளை (People with disabilities) மனதில் வைத்து உருவாக்கப்படுவதில்லை என்பது தான் கசப்பான உண்மை. கொஞ்சம்-கொஞ்சமாக மாற்றுத்திறனாளிகளுக்கும் உபயோகப்படும் வகையில் தொழில்நுட்ப சாதனங்கள் (New technology devices) உருவாக்கப்பட ஆரம்பித்துள்ளன. பல முன்னணி நிறுவனங்கள் பல புதிய கேட்ஜெட்களை மாற்றுத்திறனாளிகளுக்காக (Gadgets for diasbilities people) வடிவமைத்து உருவாக்கி வருகின்றனர்.

பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியா மேட் வாட்ச்!

பார்வை இல்லாதவர்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட புது ஸ்மார்ட் வாட்ச்.!

அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்குப் பயன்படும் ஒரு பிரத்தியேகமான ஸ்மார்ட் வாட்ச் (Smart Watch) சாதனம் ஒன்றை ஐஐடி கான்பூரை (IIT, Kanpur) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ஐஐடி கான்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில், பார்வை குறைபாடு உள்ளவர்கள் மற்றும் பார்வை தெரியாதவர்கள் பயன்படுத்தும் வகையில் ஹாப்டிக் டெக்னாலஜியுடன் (Haptic Technology) ஒரு ஸ்மார்ட்வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இத்தகைய பிரத்தியேகமான ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச் (Haptic smartwatch) சாதனத்தை இவர்கள், ஆம்ப்ரேன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Ambrane India Private Limited) உடன் சேர்ந்து உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஹாப்டிக் என்பது, தொடும் போது ஏற்படும் உணர்வுகள் மூலம் செயல்படுவதைக் குறிக்கிறது. இந்த ஹேப்டிக் ஸ்மார்ட்வாட்ச், இரண்டு வேரியண்டுகளில் வருகின்றது.

மேலும், அதில் பன்னிரண்டு மணி நேரங்களையும் குறிக்கும் டச் சென்சிடிவ் மார்க்கர்களும் (Touch Sensitive Markers) பொருத்தப்பட்டுள்ளது. அந்த மார்க்கர்களைப் பயனாளர்கள் தங்களது விரல்களால் ஸ்கேன் (Scan) செய்து கொள்ள வேண்டும். இந்த ஹாப்டிக் வாட்சுகள், பார்வை இழந்தவர்கள் (Blind) மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் (Visually impared peoples) இன்றைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த மிகவும் உதவிக்கரமாக இருக்கும் என்று ஐஐடி கான்பூரில் தலைவர் பேராசிரியர் அபே கரண்டிகர் தெரிவித்துள்ளார்.

பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியா மேட் வாட்ச்!

இந்த ஹாப்டிக் ஸ்மார்ட்வாட்சில் இதனை அம்சங்கள் உள்ளதா?

இந்த ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச் உருவாக்குவதில் மட்டுமே ஐஐடி கான்புரை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கு வகிக்கின்றனர். அதனை விற்பனை செய்யும் பொறுப்பு, ஆம்ப்ரேன் இந்தியா (Ambrane India) வசம் உள்ளது. இந்த ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச்கள் மலிவான விலைக்கு (Haptic smartwatch price) இந்திய மார்க்கெட்டில் விற்பனையாகும் (Haptic smartwatch sale) என்றும் அவர் தெரிவித்துள்ளனர். மேலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஐஐடி கான்பூருக்கு இருக்கும் ஆர்வத்திற்கும், அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இந்த ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று பேராசிரியர் அபே கரண்டிகர் தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் வாட்ச் டச், டாக்டிக், (Tactic) மற்றும் வைப்ரேஷன் (Vibration) ஆகிய மூன்று தொழில்நுட்பங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹாப்டிக் வாட்ச் உருவாக்கத்தில் டாக்டிக் தொழில்நுட்பத்தில் இருக்கும் பலவீனத்தையும், வைப்ரேஷனல் வாட்ச் உருவாக்கத்தில் இருக்கும் கடினத் தன்மையையும் அகற்றி சுலபமான முறையில் பயனர் உபயோகிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹாப்டிக் ஸ்மார்ட் வாட்ச்கள் மற்ற ஸ்மார்ட் வாட்ச்களைப் போலவே ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்டெப் கவுண்டர் (Step Counter), ஹைட்ரேஷன் ரிமைண்டர் (Hydration Reminder), டைமர் (Timer) என்று அனைத்து வசதிகளும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் வாட்சில் இருக்கும் ஹாப்டிக் ஐகான்களை (Haptic Icon) தொடுவதன் மூலம் மெனுவை (Menu) மாற்றிக் கொள்ளவும், டாப் (Tap) செய்வதன் மூலம் குறிப்பிட்ட செயலிகளை பயன்படுத்தவும் முடியும். இத்தகைய சாதனத்தை உருவாக்கியதற்கு இந்தியர்களாகிய நாம் உண்மையில் பெருமைப்பட வேண்டும்.

Best Mobiles in India

English summary
IIT Kanpur Created Haptic Smartwatch For Blinds and Visually Impaired People

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X