ஐஐடி அசத்தல்: கொரோனா நோயாளிகளுக்கு உணவு அளிக்க ரோபோ ஏற்பாடு.!
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 315 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 82, தமிழ்நாட்டில் 57 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்கும், தொற்று கழிவுகளை சேகரிப்பதற்கும் பயன்படுத்தக்கூடிய இரண்டு ரோபாக்களை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சியாளர்கள்உருவாக்கி வருகின்றனர்.

மனிதர்களின் தலையீட்டைக் குறைக்கும்
இந்த பணியில் தற்சமயம் ஈடுப்பட்டு வரும் ஐஐடி குவஹாத்தியின் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறைகளைச் சேர்ந்த குழு இந்த நடவடிக்கை தனிமைப் படுத்தப்பட்ட வார்டுகளில் மனிதர்களின் தலையீட்டைக் குறைக்கும் என்று நம்புகிறது.

தற்போது இரண்டு ரோபாக்கள் உருவாக்குவதில் பணி நடைபெறுகிறது என்றும், ஒன்று மருந்து மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்கு உணவு வழங்கல்,இது மருத்துமனையின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கலாம் மற்றும் இரண்டாவது ரோபோ குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் இருந்து நச்சு மற்றும் தொற்று கழிவுகளை சேகரிப்பதற்காக இருக்கும் என்று குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் முன்மாதிரிகள் தயாராக இருக்கும், அதைத் தொடர்ந்து இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மற்றும் நானோ தொழில்நுட்ப மையத்தில் ஒரு சோதனை ஓட்டம் நடத்தப்படும், அங்கு சுகாதார மைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்பு பிரேக் அவுட் முடிந்ததும், ரோபோ அடிப்படையிலான ஸ்கிரீனிங் யூனிட்களையும் உருவாக்க திட்டம் உள்ளது என்றும் குறிப்பிடடப்பட்டுள்ளது.

முழு வடகிழக்கு பிராந்தியந்திற்கும் இது ஒரு அதிநவீன வசதியாக மாற்றுவதே எங்கள் யோசனை, எதிர்காலத்தில் இந்த மையம் நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் வெவ்வேறு தொற்று நோய்களைக் கண்டறிவதற்கான மிகவும் திறமையான மனிதசக்தியை உருவாக்க உதவும் என்றும் ஐஐடி குவஹாத்தி இயக்குனர் சிதாரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை கண்டறிவதற்காக நாங்கள் ஏற்கனவே இரண்டு நிகழ்நேர PCRஇயந்திரங்களை குவாஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளோம். இந்த இயந்திரங்கள் 12மணிநேரங்கள் தொடர்ந்து இயங்கினால் 1000 மாதிரிகள் பகுப்பாய்வு செய்வதன் மூலம் சோதனை செயல்முறையை அதிகரிக்க உதவும் என அவர் தெரிவித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்தது, இந்த நிலையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ரோபோக்களை உருவாக்க ஐஐடி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications