ஹைதராபாத் ஐஐடி மாணவிக்குக் கூகுளில் 1.2 கோடி சம்பளம்.!

இந்தியர்களுக்குக் கூகுள் என்று சொன்னதும் நம் அனைவரது நின்வயிற்கும் வரும் நபர் சுந்தர் பிட்சைத் தான். ஆனால் தற்போது இந்தியா வில் இன்னொரு பெயரும் பிரபலம் அடைந்து வருகிறது. அவர் பெயர் தான் ஸ்நேகா ரெட்டி.

By Sharath
|

இந்தியர்களுக்குக் கூகுள் என்று சொன்னதும் நம் அனைவரது நின்வயிற்கும் வரும் நபர் சுந்தர் பிட்சைத் தான். ஆனால் தற்போது இந்தியா வில் இன்னொரு பெயரும் பிரபலம் அடைந்து வருகிறது. அவர் பெயர் தான் ஸ்நேகா ரெட்டி.

ஹைதராபாத் ஐஐடி மாணவிக்குக் கூகுளில் 1.2 கோடி சம்பளம்.!

ஹைதராபாத் ஐஐடி இல் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்த ஸ்நேகா ரெட்டி, தற்பொழுது கூகுள் நிறுவனத்தில் ஒருவர் ஆகியுள்ளார். சுந்தர் பிட்சை க்கு பிறகு இந்திய ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது இவர் பெயர்.

சம்பளம் ரூ1.2 கோடி

சம்பளம் ரூ1.2 கோடி

இவர் கூகுள் நிறுவனத்தின் கூகுள் செயற்கை நுண்ணறிவு திட்டத்தில்(Google Artificial Intelligence Project) வேலை செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஸ்நேகா ரெட்டி க்கு வருடாந்திர சம்பளம் ரூ1.2 கோடி எனக் கூகுள் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

4 கட்டத் தேர்வுகளில் தொடர்ச்சியாக வெற்றி

4 கட்டத் தேர்வுகளில் தொடர்ச்சியாக வெற்றி

கூகுள் செயற்கை நுண்ணறிவு திட்டத்தில் சேரும் வேலைக்கான தேர்ச்சி தேர்வு அண்மையில் நடைபெற்றது. நடத்தப்பட்ட 4 கட்டத் தேர்வுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, இந்த வேலைக்கான வாய்ப்பை ஸ்நேகா ரெட்டி பெற்றிருக்கிறார்.

சராசரி சம்பளம் 11.5 லட்சம்

சராசரி சம்பளம் 11.5 லட்சம்

இதற்கு முன்பு ஹைதராபாத் ஐஐடியில் படித்த ஒருவருக்கு ரூ.40 லட்சம், சம்பளம்தான் அதிகபட்சமாக இருந்த நிலையில். இங்குப் படித்தவர்களுக்கு சராசரி சம்பளம் 11.5 லட்சம் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐஐடி இல் படித்த போது கல்வி மற்றும் பிற செயல்பாடுகளில் சிறந்து விளங்கி இருக்கிறார் ஸ்நேகா ரெட்டி.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்

இத்துடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் பல பதக்கங்களை வென்றிருக்கிறார், மேலும் 4 தங்கப் பதக்கங்களையும் அவர் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரபாத்தை சேர்ந்த அவரது தந்தை சுதாகரும் மென் பொருள் துறையிலேயே வேலை பார்க்கிறார். ஸ்நேகா ரெட்டி ஐஐடி க்கும் தன் ஆசிரியர்களின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
IIT-Hyderabad student bags Rs 1.2-crore package with Google : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X