ஐஐடி தேர்வு விடை தாள்களை இனி ஆன்லைனில் பார்க்கலாம்!

By Super
|
ஐஐடி தேர்வு விடை தாள்களை இனி ஆன்லைனில் பார்க்கலாம்!

ஐஐடி நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களின் விடை தாளினை இனி ஆன்லைனில் பார்க்க புதிய ஏற்பாடுகளை செய்துள்ளது ஐஐடி டெல்லி.

ஜேஇஇ (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷனின்) தேர்வு முடிவுகள் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே விடை தாள்களை ஜேஇஇ (ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாமினேஷன்) வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் பார்க்க ஏற்பாடு செய்துள்ளது ஐஐடி டெல்லி.

ஜேஇஇ வலைத்தளத்தில், விடைத்தாள்களை தெளிவாக பார்க்கலாம். இந்த விடைத்தாள்களை மே 5-ஆம் தேதியில் இருந்து மே 10-ஆம் தேதி வரை மட்டுமே ஆன்லைனில் பார்க்க முடியும்.

இந்த விடைதாள்கள் ஸ்கேனிங் மூலம் ஆன்லைனில் வெளியாக இருக்கிறது. இதனால் முடிவுகளைப் பார்க்க மட்டும்தான் முடியுமே தவிர, இதில் மாணவர்கள் எந்தவிதமான திருத்தமும் செய்ய முடியாது.

மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை ஆன்லைனில் பார்த்து, ஏதேனும் விடைகளுக்கு மதிப்பெண் விட்டுப்போயிருந்தால், ஆன்லைன் மூலம் தெரிவித்து சரி செய்து கொள்ளலாம்.

எதிர்பார்த்த மதிப்பெண்களையும் விட குறைவானதாக இருந்தால், முன்பெல்லாம் மறுமதிப்பீடு செய்ய வேண்டி இருந்தது. ஆனால் இப்போது இந்த பிரச்சனைக்கும் ஒரு முற்று புள்ளி வைத்துள்ளது ஐஐடி டெல்லி.

இது போல் ஆன்லைனில் தேர்வு விடை தாள்களை பார்க்க ஏற்பாடுகள் செய்துள்ளதால், மதிப்பெண்கள் குறைந்திருந்தாலும் அதை சரி செய்ய ஓர் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது ஐஐடி டெல்லி.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X