4கே அல்ட்ரா எச்டி iFFalcon ஸ்மார்ட்டிவி- 43 இன்ச் மாடல் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

|

iFFalcon இந்தியாவில் 43 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. iFFalcon யு61 4கே அல்ட்ரா எச்டி டிவியை அமேசானில் பிரத்யேகமாக கிடைக்கும். இந்த ஸ்மார்ட்டிவியான டால்பி ஆடியோ ஆதரவு மற்றும் எச்டிஆர் 10 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வருகிறது. மேலும் ஸ்மார்ட்டிவியில் கேமிங் பயன்முறையும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியுடன் கேமிங் கன்சோலையும் இணைக்கலாம்.

இஃபால்கான் யு61 4கே அல்ட்ரா எச்டி டிவி

இஃபால்கான் யு61 4கே அல்ட்ரா எச்டி டிவி

இஃபால்கான் யு61 4கே அல்ட்ரா எச்டி டிவி அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 43 இன்ச் அளவுடன் வருகிறது. 4 கே அல்ட்ரா எச்டி ஐபிஎஸ் எல்சிடி பேனல் உடன் வருகிறது. ஸ்மார்ட்டிவி வாய்ஸ் சர்ச் அடிப்படையிலான கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவோடு வருகிறது. இது பயனர்களுக்கு வாய்ஸ் சர்ச் பயன்பாடு உள்ளடக்கத்தை தேட உதவுகிறது. இந்த ஸ்மார்ட்டிவி நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களை ஆதரிக்கிறது.

iFFalcon யு61 4கே அல்ட்ரா எச்டி டிவி

iFFalcon யு61 4கே அல்ட்ரா எச்டி டிவி

iFFalcon யு61 4கே அல்ட்ரா எச்டி டிவி மைக்ரோ டிம்மிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் ஒப்பிடும் போது இது டீப் பிளாக் வண்ணத்தை உறுதி செய்கிறது. ஸ்மார்ட்டிவி 4கே உயர்வுக்கு ஆதரவளிக்கிறது, இது குறைந்த தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களின் படத் தரத்தை மேம்படுத்துகிறது. ஸ்மார்ட் டிவி தனிப்பயன் டிசிஎல் ஸ்மார்ட் யுஐ உடன் ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

24 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்

24 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்

iFFalcon யு61 4கே அல்ட்ரா எச்டி டிவி மூன்று எச்டிஎம்ஐ போர்ட்களை கொண்டிருக்கிறது. யூஎஸ்பி போர்ட் இருக்கிறது. இது பயனர்கள் இந்த ஸ்மார்ட்டிவியுடன் வெளிப்புற சேமிப்பக சாதனங்களை இணைக்க அனுமதிக்கிறது. இந்த சாதனம் டால்பி ஆடியோவின் ஆதரவுடன் 24 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டிருக்கிறது. இது வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் முறையை ஆதரிக்கிறது.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்சேமிப்பு

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்சேமிப்பு

இஃபால்கான் யு61 4கே அல்ட்ரா எச்டி டிவி 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. ஏஆர்எம் கார்டெக்ஸ் செயலி மூலம் இயக்கப்படுகிறது. பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து ஆப்ஸ் மற்றும் கேம்களில் நிறுவ அனுமதிக்கிறது. இது ஆண்ட்ராய்டு டிவி என்பதால் ப்ளேஸ்டோரில் கிடைக்காத ஆப்ஸ் மற்றும் கேம்களுக்கான ஏபிகே ஆதரவை கொண்டிருக்கிறது.

பலவிதமான ஸ்மார்ட் டிவிகள்

பலவிதமான ஸ்மார்ட் டிவிகள்

டிசிஎல்-ன் ஷென்சென் சார்ந்த ஸ்மார்ட்டிவி உற்பத்தியாளரான iFFALCON சமீபத்தில் இந்திய சந்தையில் சில ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் பலவிதமான ஸ்மார்ட் டிவிகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் வரிசையில் மலிவு மற்றும் ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை கொண்டிருக்கிறது. நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் 55 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட்டிவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் டிவி இந்தியாவில் ஆன்லைனில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி

55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி

iFFALCON., சமீபத்திய ஸ்மார்ட்டிவியானது 55 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி ஆகும். பிளிப்கார்ட் மற்றும் பிற இ-காமர்ஸ் தளத்தில் இருந்து இந்த சாதனத்தை வாங்கலாம். பிளிப்கார்ட்டில் ஸ்மார்ட் டிவியை வாங்கும்போது பல சலுகைகள் வழங்குகின்றன. IFFALCON 55-inch 4K LED ஸ்மார்ட் டிவி இந்தியாவில் ரூ.34,999 என்ற விலைக் குறியீட்டில் வருகிறது. 9 மாத நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு ரூ.3889 ஆக இருக்கிறது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு

ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு

இஃபால்கான் 55 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி ஆனது 2160 x 3840 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. இது 4கே அல்டரா எச்டி டிஸ்ப்ளே தெளிவுத்திறனோடு வருகிறது. டிஸ்ப்ளே 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது பயனர்களை ப்ளேஸ்டோரில் இருந்து மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. இது குவாட் கோர் ஏ53 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
iFFalcon U61 4K UHD TV Launched in India With 43 Inch, HDR 10 Support and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X