ஸ்மார்ட்டான கேமராவுடன் அறிமுகமான புதிய iFFalcon K72 55 இன்ச் 4K டிவி.. விலை இவ்வளவு தானா?

|

iFFalcon வரிசையில் புதிதாக iFFalcon K72 என்ற புதிய 55 இன்ச் அளவு கொண்ட 4K ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் முக்கிய சிறப்பம்சமே இது இதுவரை பயனர்களை பார்த்திடாத புதிய வீடியோ கேமரா அம்சத்துடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய iFFalcon 72 ஸ்மார்ட் டிவியை TCL நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மிரட்டலான புதிய ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தால் இயக்குகிறது.

ஸ்மார்ட்டான கேமராவுடன் அறிமுகமாகிய புதிய iFFalcon K72 ஸ்மார்ட் டிவி

ஸ்மார்ட்டான கேமராவுடன் அறிமுகமாகிய புதிய iFFalcon K72 ஸ்மார்ட் டிவி

இந்த புதிய iFFalcon K72 ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷன், டால்பி அட்மோஸ், நிறுவனத்தின் AIPQ இன்ஜின் நிகழ் நேர ஆடியோ மற்றும் விஷுவல் ஆப்டிமைசேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் HDMI மற்றும் USB போர்ட்கள், டூயல் பேண்ட் வைஃபை ஆகியவற்றுக்கான ஆதரவுடன் வருகிறது. iFFalcon K72 55 இன்ச் 4K ஸ்மார்ட் டிவியும் உள்ளமைக்கப்பட்ட கூகிள் அசிஸ்டன்ட் மற்றும் கிறோம்கேஸ்ட் அம்சத்துடன் வருகிறது. மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் காம்பன்ஸன்ஷன் (MEMC) தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் காம்பன்ஸன்ஷன் தொழில்நுட்பம்

மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் காம்பன்ஸன்ஷன் தொழில்நுட்பம்

இந்த மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் காம்பன்ஸன்ஷன் தொழில்நுட்பம் இது மென்மையான காட்சிகளை வழங்க உதவுகிறது. iFFalcon K72 HDR10 உட்படப் பல HDR வடிவங்களையும் ஆதரிக்கிறது. இந்தியாவில் iFFalcon K72 55 இன்ச் 4K TV விலை, கிடைக்கும் தன்மை பார்க்கையில், புதிய iFFalcon K72 55 இன்ச் 4K மாடல் டிவியின் விலை ரூ. 51,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது Flipkart வழியாக வாங்குவதற்குக் கிடைக்கிறது. iFFalcon டிவி ஒரு ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தை மட்டுமே ஆதரிக்கிறது.

சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!சுந்தர் பிச்சை பகிர்ந்த ஒரு வீடியோ.! இணையதளத்தில் வைரல்.! இப்படி செய்யக் கூடாது மக்களே.!

புதிய iFFalcon K72 55 இன்ச் 4K மாடல் ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?

புதிய iFFalcon K72 55 இன்ச் 4K மாடல் ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?

இந்த புதிய iFFalcon K72 55 இன்ச் 4K மாடல் ஸ்மார்ட் டிவி ஒரு வருட உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட்டில் இந்த iFFalcon K72 55 இன்ச் 4K TV -யை ரூ. 1,778 என்ற விலையில் EMI விருப்பத்துடன் பயனர்கள் வாங்க முடியும். இந்த iFFalcon TV ஸ்மார்ட் டிவிக்கு பல வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சில நிபந்தனைகளுடன் இதன் மேல் ரூ.1,250 தள்ளுபடியும் கிடைக்கிறது. சரி, இப்போது இந்த ஸ்மார்ட் டிவியில் இருக்கும் முக்கிய சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

iFFalcon K72 55 இன்ச் 4K டிவி சிறப்பம்ச விபரம்

iFFalcon K72 55 இன்ச் 4K டிவி சிறப்பம்ச விபரம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட iFFalcon K72 55 இன்ச் 4K டிவி அண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி அனைவரின் கவனத்தை ஈர்க்க முக்கிய காரணம் இதில் உள்ள ஸ்மார்ட் கேமரா அம்சம் தான். இது பயனர்கள் ஸ்மார்ட் டிவி மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. கேமரா பயன்பாட்டில் இல்லாத போது லென்ஸை மறைக்கப் பிரத்தியேக ஷட்டர் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 12 வாங்க இதான் சரியான நேரம்.. இதைவிட கம்மி விலையில் கிடைக்க வாய்ப்பில்லை..ஆப்பிள் ஐபோன் 12 வாங்க இதான் சரியான நேரம்.. இதைவிட கம்மி விலையில் கிடைக்க வாய்ப்பில்லை..

HDR10 உட்பட பல அம்சங்கள்

HDR10 உட்பட பல அம்சங்கள்

iFFalcon K72 55 இன்ச் 4K டிவியில் HDR10 உட்பட பல HDR வடிவங்களையும் ஆதரிக்கும் அம்சங்கள் உள்ளது. இது MEMC உடன் வருகிறது, இது மென்மையான காட்சிகளைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. கேமர்கள் லேக் பிரீ மற்றும் மங்கலற்ற காட்சிகளை அனுபவிக்க முடியும் என்று டிசிஎல் கூறுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியும் யூடியூப், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹோஸ்டார் போன்ற முன்பே நிறுவப்பட்ட பல பயன்பாடுகளுடன் வருகிறது. உள்ளமைக்கப்பட்ட கூகுள் பிளே ஸ்டோர் வழியாக மற்ற செயலிகளைப் பயனர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

மற்ற ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஸ்மார்ட் டிவி

மற்ற ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஸ்மார்ட் டிவி

டிசிஎல் துணை பிராண்ட் AIxIoT உடன் இது வருகிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் நிறுவனத்திலிருந்து இணையத்தின் ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி அற்புதமாகச் செயல்படுகிறது. இது பயனர்கள் தங்கள் iFFalcon K72 55-inch 4K TV மூலம் தங்கள் வீடுகளில் உள்ள மற்ற ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் டிவியில் பல்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்த ஹேண்ட்ஸ் ஃப்ரீ வாய்ஸ் கண்ட்ரோல் 2.0 அம்சத்தையும் இது கொண்டுள்ளது.

மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?

எத்தனை போர்ட்களை இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆதரிக்கிறது?

எத்தனை போர்ட்களை இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஆதரிக்கிறது?

இணைப்பு விருப்பங்களில் மூன்று HDMI 2.1 போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், SPDIF போர்ட் மற்றும் ப்ளூடூத் ஆகியவை அடங்கும். இது இரட்டை-பேண்ட் Wi-Fi உடன் வருகிறது. அதாவது 2.4GHz மற்றும் 5GHz பேண்டுகளுக்கான ஆதரவு இதில் உள்ளது. ஸ்மார்ட் டிவி 1,234 x 724 x 86 மிமீ அளவும் மற்றும் ஸ்டாண்ட் இல்லாமல் 11 கிலோ எடை கொண்டது. அதன் தொகுக்கப்பட்ட ரிமோட் நெட்ஃபிக்ஸ், ஜீ 5, அமேசான் பிரைம் வீடியோ மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் ஹாட்கீஸ் உடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
iFFalcon K72 55 Inch 4K QLED Smart TV With Video Calling Camera Launched In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X