ஸ்மார்ட்டிவி வாங்க ஐடியா இருக்கா?- பக்கா விலையில் iFFalcon K61: பிளிப்கார்ட்டில் விற்பனை!

|

iFFalcon K61 4K TV எச்டிஆர்10, இரண்டு 12 வாட்ஸ் என 24 வாட்ஸ் ஸ்பீக்கர் ஆதரவுடன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவிகள் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கிறது.

iFFalcon K61 4K TV

iFFalcon K61 4K TV

iFFalcon K61 4K TV இந்தியாவின் டிசிஎல்-ன் துணை பிராண்ட் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்க ல்மார்ட்டிவியானது 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என்ற மூன்று அளவுகளில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிகளில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. மெலிதான வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்டிவிகள் பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது.

4 கே டைனமிக் கலர் விஷன்

4 கே டைனமிக் கலர் விஷன்

iFFalcon K61 4K TV ஸ்மார்ட்டிவியில் 4 கே விஷன், டைனமிக் கலர் என்ஹான்ஸ்மென்ட், டால்பை ஆடியோ உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கிறது. பிக் தீபாவளி விற்பனைக்கு முன்னதாக இந்த டிவி அக்டோபரில் அறிவிக்கப்பட்டாலும் தற்போதுதான் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று அளவுகளில் விற்பனை

மூன்று அளவுகளில் விற்பனை

iFFalcon K61 ஸ்மார்ட்டிவியின் விலை குறித்து பார்க்கையில், இதன் 43 இன்ச் டிவி மாடலுக்கு ரூ.24,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 50 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.30,499 ஆகக உள்ளது. மேலும் 53 இன்ச் டிவி மாடலின் விலை ரூ.36,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி சீரிஸ்கள் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும்.

(வீடியோ) தரையிறங்கும்போது வெடித்து சிதறிய பிரமாண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட்: "வெற்றிகரமான சோதனை" எலான் மஸ்க் டுவிட்

iFFalcon K61 சிறப்பம்சங்கள்

iFFalcon K61 சிறப்பம்சங்கள்

iFFalcon K61 மூன்று டிஸ்ப்ளே அளவுகளில் கிடைக்கிறது. அது 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஆகும். இதன் அம்சங்கள் குறித்து பார்க்கையில் 4கே 3840 x 2160 பிக்சல்கள் டிஸ்ப்ளே தீர்மானத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு டிவி 9 பை மூலம் இயங்குகிறது. இந்த டிவி 4கே, எச்டிஆர்10 மேம்பாட்டை ஆதரிக்கிறது. இது நான்கு விருப்ப பயன்பாடுகளில் டிஸ்ப்ளே செயல்பாடுகிறது.

24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உட்பட பல்வேறு அணுகல்கள்

24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உட்பட பல்வேறு அணுகல்கள்

இதில் இரண்டு 12வாட்ஸ் ஸ்பீக்கர்கள் என 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி டால்பை ஆடியோ ஆதரவுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு அம்ச டிவியில் நெட்பிளிக்ஸ், யூடியூப், அமேசான் பிரைம் விடியோ போன்ற ஓடிடி ஆதரவுகள் இருக்கின்றன. அதோடு கூகுள் ப்ளேயில் 5000-த்துக்கும் மேம்பட்ட செயலிகள் பதிவிறக்க அணுகல் கிடைக்கின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
iFFalcon K61 4K SmartTv Sale Start in Flipkart With HDR10, 24W Speaker

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X