ரூ.8,999 விலையில் 32' இன்ச் Smart TV-ஆ? Flipkart செய்த செயலால் கடுப்பில் அமேசான்!
வெறும் 9 ஆயிரம் ரூபாயில் ஒரு புது ஸ்மார்ட் டிவி சாதனத்தை வாங்க முடியுமா? என்று சந்தேகத்துடன் நீங்கள் பார்ப்பது எங்களுக்கு புரிகிறது. உண்மையிலேயே இது சாத்தியம் தான் என்கிறது பிளிப்கார்ட் (Flipkart) சலுகை. இந்த சலுகை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
ரூ.9000 விலையில் எப்படி 32' இன்ச் ஸ்மார்ட் டிவி (Smart TV) கிடைக்கும்? இது உண்மையா? 9 ஆயிரம் ரூபாய்க்கு எதாவது மொக்கை பிராண்ட் டிவியாக இருக்குமோ? என்ற பல கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் உங்களுக்குள் எழுந்திருக்கலாம். ஆனால், உண்மையில் இது மிகவும் தரமான பிராண்டில் இருந்து வாங்க கிடைக்கும் ஒரு பெஸ்ட் ஸ்மார்ட் டிவி சாதனமாகும்.

ஸ்மார்ட் டிவிகளுக்கென்ற தனி பெயர் பெற்ற, நம்பகமான TCL என்ற தலைசிறந்த பிராண்டில் இருந்து தான் இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க கிடைக்கிறது. TCL நிறுவனத்திற்கு சொந்தமான iFFALCON ஸ்மார்ட் டிவி வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV with Bezel-Less design & 24W Speaker (iFF32S53) மாடலை பற்றி தான் நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம்.
இந்த iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV பெசல் லெஸ் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதன் டிஸ்பிளே A+ HD தரத்தில் இயங்கும் உயர் தெளிவுத்திறன் கொண்ட அம்சத்தை கொண்டுள்ளது. இது உங்கள் பார்வை அனுபவத்தை சிறந்த வீடியோ தரத்துடன் மேம்படுத்துவதோடு, படங்களை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கிறது. இது HDR 10 சப்போர்ட் உடன் வருகிறது. மைக்ரோ டிம்மிங் அம்சம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
இது ஒரு பெசல் லெஸ் ஸ்மார்ட் டிவி என்பதனால், உங்களுக்கு முழு டிஸ்பிளே அனுபவம் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவியாக இது இருந்தாலும், இப்போது மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.19,990 ஆகும். ஆனால், இப்போது பிளிப்கார்ட் வழியாக கிடைக்கும் சலுகையின் பெயரில் இதன் மீது 54% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இதன் விலை மிகவும் குறைந்துள்ளது.

உங்கள் பணத்திற்கு ஏற்ற தரமான ஸ்மார்ட் டிவியாக இந்த சாதனம் திகழ்கிறது. இந்த iFFALCON ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (iFFALCON Android Smart TV) பல இன்பில்ட் மீடியா அம்சத்துடன் வருகிறது. இது தவிர, இந்த சாதனம் 24W ஸ்பீக்கர் உடன் டால்பி ஆடியோ (Dolby Audio) அம்சத்துடன் வருகிறது. இது கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) ஆதரவையும் கொண்டுள்ளது. இதில் குரோம்காஸ்ட் (Chromecast) அம்சமும் உள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவி நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி + ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) அம்சங்களை பெறுகிறது. இன்னும் பல அம்சங்களை இந்த iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV கொண்டுள்ளது. சலுகைக்கு பிறகு இதன் விலை இப்போது வெறும் ரூ.8,999 ஆக குறைந்துள்ளது.
ஆம், வெறும் ரூ.8,999 விலையில் இந்த சாதனத்தை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளலாம். இது எக்ஸ்சேஞ் சலுகை இல்லாமல் நேரடியாக கிடைக்கும் சலுகை விலை என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்சேஞ் சலுகையாக இந்த ஸ்மார்ட் டிவி மீது ரூ.8000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. முடிந்தால் உங்கள் பழைய ஸ்மார்ட் டிவியை கொடுத்து புது டிவியாக மாற்றிக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








