Resume இப்படி இருந்தால் கூகுள், அமேசானே வேலை கொடுக்கும்.. கண்டிப்பா இந்த 5 விஷயம் கூடாது!

|

ஏணியை கூரையை நோக்கி போடாதீர்கள்.. வானத்தை நோக்கி போடுங்கள்.

நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை கண்டிப்பாக ஒவ்வொருவரும் சிறுவயதில் எதிர்கொண்டு இருப்போம். ஆரம்பத்தில் போலீஸ், டாக்டர் என்று பல பதிலை லட்சியமாக தெரிவித்திருந்தாலும். காலப்போக்கில் அது மங்கி படிப்புக்கேற்ற வேலைக் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுவோம். படிப்புக்கேற்ற வேலை என்றால் என்ன?

கூகுள், அமேசான் வேலை

கூகுள், அமேசான் வேலை

படிப்புக்கேற்ற வேலை என்றால் அதில் பல நிலைகள் இருக்கிறது. இதில் நீங்கள் யார்?.

உலகளவில் டாப் நிறுவனங்களாக இருக்கும் கூகுள், அமேசானில் பணி புரிபவர்களும் படித்தவர்கள் தான். அவர்களும் படிப்புக்கேற்ற வேலையை தான் பெற்றிருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் அதிகம் படித்தவர்கள் என்ற பதில் உங்களுக்கு தோன்றினால் அது தவறு.

அதற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை, திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் பலருக்கும் கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களில் வேலையில் சேர வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும்.

resume எப்படி இருக்க வேண்டும்?

resume எப்படி இருக்க வேண்டும்?

கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்களில் வேலையில் சேர விரும்பும் பயனர்களின் resume எப்படி இருக்க வேண்டும் என்ற டிப்ஸை கூகுள் தேர்வாளர் ஒருவர் டிக்டாக் இல் வீடியோவாக வெளியிட்டார்.

இந்த தகவல் பெரு நிறுவனங்களில் சேர விரும்பும் நபர்களுக்கு மட்டுமில்லை, அனைவருக்கும் உதவியாகும், தங்களது resumeஐ தனித்துவமாக காட்டவும் ஏதுவாக இருக்கும்.

எரிகா ரிவேரா வெளியிட்ட டிப்ஸ்

எரிகா ரிவேரா வெளியிட்ட டிப்ஸ்

கூகுள் சிகாகோவில் மூத்த பணியாளராக இருக்கும் எரிகா ரிவேரா, டிக்டாக்கில் சில குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இது உங்கள் ரெஸ்யூமை தனித்துவமாகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்ற உதவும்.

டிக்டாக்கில் எரிகாவின் வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது.

நீங்கள் யார்?

நீங்கள் யார்?

உங்கள் இலக்கை அடைய தங்களது resume என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். நீங்கள் யார் என்பதை நிறுவன மேலாளர்களுக்கு விளக்குவதே resume தான்.

first impression is the best impression என்று கூறுவார்கள், நீங்கள் வேலை தேடும் நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பதை முதலில் விளக்குவதே உங்களது ரெஸ்யூம் தான். எனவே ரெஸ்யூம் என்பது மிக அவசியம்.

ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூகுள் தேர்வாளர் டிக்டாக்கில் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

பணி அனுபவம் என்பது தேவையில்லை

1. ரெஸ்யூமில் முழு முகவரியையும் குறிப்பிட வேண்டாம் என்று ரிவேரா தெரிவித்துள்ளார். வசிக்கும் நகரம் மற்றும் மாநிலம் மட்டும் போதுமானது என குறிப்பிட்டிருக்கிறார்.

2. உங்கள் CV யில் நீங்கள் சேர்க்கக் கூடாத அடுத்த முக்கியமான விஷயம் உங்களின் முழுமையான பணி வரலாறு. அதாவது உங்கள் பணி அனுபவம் என்பதை ரெஸ்யூமில் குறிப்பிட தேவையில்லை. முழு பணி வரலாறையும் ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டாம்.

உங்களது ஆர்வம், விண்ணப்பிக்கும் பதவி என்ன என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. உங்கள் பணி தொடங்கியக் காலம் எத்தனை இடங்கள் மாறியுள்ளீர்கள் எந்தெந்த பதவிகள் என அனைத்தையும் குறிப்பிட வேண்டாம்.

இந்த வார்த்தைகளை ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டாம்

3. I Helped (நான் உதவி செய்தேன்), I Was Responsible For (நான் பொறுப்பு) போன்ற பலவீனமான வார்த்தைகளை ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டாம் என ரிவேரா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வார்த்தைகளுக்கு பதிலாக Improved, Implemented, Strategized, Increased, Generated (நெறிப்படுத்தப்பட்ட, நிர்வகிக்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட) போன்ற வார்த்தைகளை பயன்படுத்தும்படி ரிவேரா குறிப்பிட்டுள்ளார்.

Referrence குறிப்பிட தேவையில்லை

4. நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் நிறுவனங்களில் உங்களுக்கு Referrence இருந்தாலும் அதை உங்களது ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டாம்.

அது தேவையில்லாத கேள்விகளை எழுப்பும். Reference Available Upon Request (தேவைப்படும் பட்சத்தில் Reference வழங்கப்படும்) என தெரிவித்தால் போதும்.

Objective என்பதை தவிர்ப்பது நல்லது

5. அதேபோல் ரெஸ்யூமின் முதலில் பலரும் குறிப்பிடுவது Objective ஆகும்.

Objective(குறிக்கோள்) ரெஸ்யூமில் பதிவிட வேண்டாம் என ரிவேரா குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை என்பது மிகவும் பழமையானது அதுவும் இந்த காலத்திற்கு தேவையற்ற ஒரு செயல் என ரிவேரா குறிப்பிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
If Your Resume is like this, Google and Amazon also will give you work: Don't do these 5 things

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X