Home
News

செஞ்சி விட்ட அம்பானி.. 28 நாட்களுக்கு கும்பிடு.. மாத வேலிடிட்டியில் ரூ.339 திட்டம்.. வாய்ஸ் கால்கள்!

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனத்தில் 28 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்து சலித்துவிட்டது, காலண்டர் மாத வேலிடிட்டியில் (Calendar month validity) மலிவு விலை ரீசார்ஜ் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு ரூ.339 விலைக்கு பக்காவான திட்டம் இருக்கிறது.

ஜியோவில் மலிவான விலைக்கு பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. ரூ.200 விலைக்கும் கீழ் திட்டங்கள் இருக்கின்றன. ரூ.189 முதல் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. ஆனால், அதிகபட்சம் 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே இந்த திட்டங்கள் கொடுக்கின்றன. மலிவான விலைக்கு காலண்டர் மாத வேலிடிட்டி வேண்டுமானால், முதல் ஆப்ஷனாக ரூ.339 திட்டம் இருக்கிறது.

செஞ்சி விட்ட அம்பானி.. 28 நாட்களுக்கு கும்பிடு.. மாத வேலிடிட்டி!

ஜியோ ரூ.339 திட்டம் (Jio Rs.339 Plan): மற்ற திட்டங்களை போல் 28 நாட்கள் அல்லது 30 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுக்காது. காலண்டர் மாத வேலிடிட்டியில் கிடைக்கும். ஆகவே, எந்த தேதியில் ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அதில் இருந்து அடுத்த மாதம் அந்த தேதி வரையில் வேலிடிட்டி கிடைக்கும். இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

ஆகவே, 30 நாட்கள் கொண்ட மாதத்துக்கு 30 நாட்கள், 31 நாட்கள் கொண்ட மாதத்துக்கு 31 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு குறைப்படுகிறது. இருப்பினும், குறைவாக வேகத்தில் தொடர்ந்து டேட்டாவை கொடுக்கிறது. இது மலிவு விலை திட்டமாக உள்ளது.

அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை எதிர்பார்க்க முடியாது. இருப்பினும், ரூ.14.95 மதிப்பில் டாக்டைம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாக்டைம் எல்ல திட்டங்களுக்கும் கிடைக்காது. குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) கிடைக்கும்.

தினமும் 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பி கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஆப்களும் கிடைக்கின்றன. சொல்லப்போனால், வேல்யூ திட்டத்தில் இதுபோன்ற சலுகைகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், இது காலண்டர் மாத வேலிடிட்டி மற்றும் தினசரி டேட்டாவுடன் கிடைப்பதால், கூடுதலாக ஒரு சலுகை கிடைக்கிறது.

ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் நானோ பனானா (Nano Banana) இமேஜ் ஜெனரேஷன், வியோ 3 வீடியோ ஜெனரேஷன் உள்ளிட்ட அணுகல்கள் கிடைக்கும். மேலும், 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் பெற்று கொள்ளலாம். இதை 18 நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்தை எப்படி ரீசார்ஜ் செய்வது?

ஜியோ போர்டல் (Jio Portal) அல்லது மைஜியோ ஆப் (MyJio App) செல்ல வேண்டும். ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பத்துக்கு செல்ல வேண்டும். இதில் வேல்யூ திட்டங்களின் (Value Plan) கீழ் இருக்கும், ஜியோ ரூ.339 திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதிலேயே ஜியோ ரூ.189 திட்டம் (Jio Rs.189 Plan), ஜியோ ரூ.199 திட்டம் (Jio Rs.199) உள்ளிட்ட மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
If you recharge with the Jio Rs 339 plan the validity is for a calendar month not 28 days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X