இனிமேல் டிரைவிங் லைசென்ஸை கையோடு எடுத்து செல்ல அவசியமில்லையா? இதைச் செய்தால் போதும் மக்களே..

|

வாகன ஓட்டுனர்களின் கவனத்திற்கு, நீங்கள் வெளியில் வாகனத்தை எடுத்துச் செல்லும் போது, எல்லா நேரங்களிலும் உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்கிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம். காரணம், இதற்கான மாற்று வழி ஒன்று நம்மிடம் உள்ளது. இந்த மாற்று வழி அதிகாரப்பூர்வமானதும் மற்றும் இந்த முறையைக் காவல் அதிகாரிகளும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முறையைப் பின்பற்றி நீங்கள், உங்களுடைய டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்சி புக் ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பிக்கலாம் என்பது கவனிக்கத்தக்கது.

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

இந்தியச் சட்டத்தின் படி, வாகன ஓட்டிகள் அனைவரும் அவர்களின் அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இனிமேல் நீங்கள் வாகனத்தை ஓட்டும் போது உங்கள் கைகளில் எப்போது டிரைவிங் லைசென்ஸை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும். உண்மையில் இந்த செய்தி நிச்சயமாகச் சிலருக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். உங்கள் கைகளில் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து, குறிப்பிட்ட சில ஆப்ஸ்கள் மூலம் வாகன ஓட்டுநர் ஆவணத்தை அதிகாரிகளிடம் காண்பிப்பது செல்லுபடியாகும்.

இப்படி செய்தால் மட்டும் உங்கள் டிஜிட்டல் ஆவணங்கள் செல்லுபடியாகும் மக்களே

இப்படி செய்தால் மட்டும் உங்கள் டிஜிட்டல் ஆவணங்கள் செல்லுபடியாகும் மக்களே

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,1989 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் (Amendment to the 1989 Motor Vehicles Act) அடிப்படையில் வாகன ஓட்டிகள் அனைவரும் எப்போதும் அவர்களின் ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) அல்லது ஆர்சி (ரெஜிஸ்ட்ரேஷன் கார்டு) புக்கை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, வாகன ஓட்டிகள் அவர்களின் முக்கிய ஆவணங்களை எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) மொபைல் ஆப்ஸ் மூலம் தேவையான நேரங்களில் போக்குவரத்து காவல் அதிகாரிகளிடம் காண்பித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதனின் பேச்சு சிதைந்துவிடுமா? NASA கண்டுபிடிப்பு என்ன சொல்கிறது?செவ்வாய் கிரகத்தில் மனிதனின் பேச்சு சிதைந்துவிடுமா? NASA கண்டுபிடிப்பு என்ன சொல்கிறது?

அரசின் உத்தரவுப் படி இது 100% செல்லுபடியாகும்

அரசின் உத்தரவுப் படி இது 100% செல்லுபடியாகும்

உங்கள் ஊரில் உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், இது போன்ற டிஜிட்டல் டைப் ஆவணங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், வழக்கம் போல் அசல் ஓட்டுநர் உரிமத்தைத் தான் சமர்ப்பிக்க வேண்டுமென்று கேட்பார்கள்" என்று நீங்கள் கூறலாம். ஆனால், அரசாங்கத்தின் மொபைல் ஆப்ஸ் வழியாக உங்கள் ஆவணங்களைக் காண்பிப்பது 100% செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) மொபைல் ஆப்ஸ் வழியாக காட்டப்படும் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.

எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) ஆப்ஸில் எப்படி ஆவணத்தைச் சேர்ப்பது?

எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) ஆப்ஸில் எப்படி ஆவணத்தைச் சேர்ப்பது?

சரி, இப்போது எப்படி உங்களுடைய ஓட்டுநர் உரிமம் மற்றும் ரெஜிஸ்ட்ரேஷன் புக்கை எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) மொபைல் ஆப்ஸில் பதிவிறக்கம் செய்து சேமித்து வைப்பது என்று தெரிந்துகொள்ளலாம். இந்த ஆவணங்களை நீங்கள் ஒரு முறை உங்கள் டேஷ்போர்டில் சேமித்து வைத்துக்கொண்டால் போதுமானது, அடுத்து எப்போது தேவையென்றாலும் உங்கள் எம்பரிவாஹன் (mParivahan) அல்லது டிஜிலாக்கர் (Digilocker) மொபைல் ஆப்ஸ் PIN அல்லது பாஸ்வோர்டை மட்டும் உள்ளிட்டு அதிகாரிகளிடம் காண்பித்துக்கொள்ளலாம்.

IPL ரசிகர்களுக்காக Jio சத்தமில்லாமல் அறிமுகம் செய்த புதிய ரூ.555 திட்டம்.. 55 நாளுக்கு கவலையில்லை..IPL ரசிகர்களுக்காக Jio சத்தமில்லாமல் அறிமுகம் செய்த புதிய ரூ.555 திட்டம்.. 55 நாளுக்கு கவலையில்லை..

முதலில் எம்பரிவாஹன் (mParivahan) ஆப்ஸ் மூலம் உங்கள் ஆவணத்தை எப்படிச் சேமிப்பது என்று பார்க்கலாம்.

முதலில் எம்பரிவாஹன் (mParivahan) ஆப்ஸ் மூலம் உங்கள் ஆவணத்தை எப்படிச் சேமிப்பது என்று பார்க்கலாம்.

  • இதற்கு நீங்கள் முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து கூகுள் பிளே ஸ்டோர் சென்று, அங்கிருந்து எம்பரிவாஹன் (mParivahan) ஆப்ஸை டவுன்லோட் செய்யுங்கள்.
  • அடுத்தபடியாக, எம்பரிவாஹன் ஆப்பை திறந்து, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ரிஜிஸ்டர் செயல்முறையைப் பின்பற்ற வேண்டும்.
  • இந்த நேரத்தில் உங்களுக்கு ஒடிபி ஒன்று அனுப்பப்படும், அதை உள்ளிட்டு ரிஜிஸ்ட்ரேஷன் செயல்முறையை நிறைவு செய்யவும்.
  • பின்னர், உங்களுக்கு இரண்டு தேர்வுகள் அணுகக் கிடைக்கும்.
  • எதை முதலில் சேவ் செய்வது என்பது உங்கள் விருப்பம்

    எதை முதலில் சேவ் செய்வது என்பது உங்கள் விருப்பம்

    • அதில் டிஎல் (DL), அதாவது டிரைவிங் லைசன்ஸ் அல்லது ஆர்சி (RC), அதாவது ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிக்கேட் (Registration Certificate) என்ற விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து, அந்த உரிய ஆவணத்தைச் சேமித்துக்கொள்ளலாம்.
    • முதலில் ஓட்டுநர் உரிமத்தைச் சேமிக்க விரும்பினால், உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் உள்ள டிஎல் நம்பரை உள்ளிடவும்.
    • பிறகு, எம்பரிவாஹன் ஆப்ஸில் உங்களின் விர்ச்சுவல் டிஎல்-ஐ (virtual DL) உருவாக்க, "ஆட் டூ மை டாஷ்போர்ட்" (Add To My Dashboard) என்பதை கிளிக் செய்யவும்.
    • ஆப்பிள்-க்கு போட்டி ரெடி- களமிறங்கும் நத்திங் போன் (1): எல்லாரும் ஒத்து., இனி நாங்கதான் கெத்து!ஆப்பிள்-க்கு போட்டி ரெடி- களமிறங்கும் நத்திங் போன் (1): எல்லாரும் ஒத்து., இனி நாங்கதான் கெத்து!

      சேமித்த ஆவணங்களை எங்குச் சென்று பார்ப்பது?

      சேமித்த ஆவணங்களை எங்குச் சென்று பார்ப்பது?

      • பின்னர் உங்கள் பிறந்த தேதியை (DOB) உள்ளிடவும், இப்போது உங்கள் டிஎல் ஆவணம் ஆப்ஸின் 'டாஷ்போர்டில்' சேர்க்கப்படும்.
      • அவசர நேரத்தில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை அதிகாரிகளிடம் காண்பிக்க விரும்பினால், நீங்கள் நேரடியாக ஆப்ஸின் டேஷ்போர்டை திறந்து ஓட்டுநர் உரிமத்தைக் காண்பிக்கலாம்.
      • இதேபோல், உங்கள் ஆர்சி புக் விபரங்களையும் நீங்கள் டேஷ் போர்டில் சேமிக்கலாம்.
      • டிஜிலாக்கரில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைச் சேமிப்பது எப்படி?

        டிஜிலாக்கரில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைச் சேமிப்பது எப்படி?

        முதலில் நீங்கள் www.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ DigiLocker இணையதளத்தைப் பார்வையிட வேண்டும். உங்கள் தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யவும். நீங்கள் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெறுவீர்கள், அதை உள்ளிடவும். கணக்கிற்கான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க உங்களை அனுமதிக்கும். நீங்கள் ஒரு MPIN பாஸ்வோர்டையும் இதில் அமைக்கலாம். இது எதிர்காலத்தில் அல்லது உங்கள் ஆவணத்தை மிக விரைவாக ஆதாரமாக்க வேண்டிய சில சூழ்நிலைகளில் வேகமாக உள்நுழைவதை உறுதி செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

        வீண் டிராஃபிக் அபராதத்தை தவிர்க்க: உடனே டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை சேவ் செய்யுங்கள்.. எப்படி தெரியுமா?வீண் டிராஃபிக் அபராதத்தை தவிர்க்க: உடனே டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தை சேவ் செய்யுங்கள்.. எப்படி தெரியுமா?

        முதலில் ஆதார் அட்டையை இணைத்து பின்னர் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்பட வேண்டுமா?

        முதலில் ஆதார் அட்டையை இணைத்து பின்னர் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்பட வேண்டுமா?

        நீங்கள் சேவ் செய்யும் MPIN விபரத்தை எப்போதும் மறக்க வேண்டாம். எளிமையாக உங்களால் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய எண்களை உள்ளிடுவது சிறப்பானது. இப்போது, ​​நீங்கள் உங்கள் கணக்கை உருவாக்கியதும், உங்கள் ஆதார் அட்டையை உங்கள் டிஜிலாக்கர் கணக்குடன் இணைக்கவும். இங்கே, நீங்கள் பயன்பாட்டில் உள்ள 'Pull Partner's Document' பகுதியை அணுக முடியும். இந்தப் பிரிவில், உங்களின் ஓட்டுநர் உரிம எண்ணை நீங்கள் நிரப்பலாம் மற்றும் ஆப்ஸ் பயன்பாட்டிற்கான உரிமத்தை வழங்கும்.

        ஓட்டுநர் உரிமத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்யுங்கள்

        ஓட்டுநர் உரிமத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்யுங்கள்

        'Pull Documents' என்பதைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் ஆவணத்தை ஆதாரமாகப் பெற விரும்பும் கூட்டாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், உதாரணமாக, இது அனைத்து மாநிலங்களின் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகும். ஆவண வகையில், ஓட்டுநர் உரிமத்தைக் கண்டுபிடித்து அதைத் தட்டவும். உங்கள் பெயர் மற்றும் முகவரி உட்படத் தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

        இந்தியக் குடிமக்கள் அனைவரின் கைகளிலும் டிஜிலாக்கர் இருப்பது அவசியம்

        இந்தியக் குடிமக்கள் அனைவரின் கைகளிலும் டிஜிலாக்கர் இருப்பது அவசியம்

        பிறகு, ஆப்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளரிடமிருந்து உங்களுடைய சரியான அதிகாரப்பூர்வ ஆவணத்தைப் பெற்று பயன்பாட்டில் சேமிக்கும். ஒவ்வொரு டிஜிலாக்கர் ஆப்ஸ் பயனருக்கும் தங்களின் ஆவணங்களைச் சேமிக்க 1 ஜிபி இடம் வழங்கப்படுகிறது. அனைத்து அரசுத் துறைகளும் இப்போது டிஜிலாக்கருக்குப் பெறப்பட்ட ஆவணத்தைக் கடைப்பிடித்து, எந்தவொரு அரசாங்க நடைமுறைக்கும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடிமக்கள் அனைவரின் கைகளிலும் டிஜிலாக்கர் இருப்பது அவசியம்.

Best Mobiles in India

Read more about:
English summary
If You Have These Mobile Apps With You Then No Need Of Carrying Your Driving License And RC Book : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X