இந்த வாட்ஸ்அப் நம்பருக்கு தகவல் கொடுத்தால் மருந்துகள் வீடு தேடி வரும்.! தமிழகத்தில் புதிய முயற்சி.!

|

அண்மையில் வெளிவந்த தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் கொரோனா வைரசின் 2-ம் அலையின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதுவும் மளிகை, காய்கறி, கடைகள்நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அலை நாடு முழுவதும் அதிக

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல்அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.

என்னப்பா இதுல ஒரு சந்தோஷமா?-டொனால்ட் டிரம்ப், அமிதாப் பச்சன் பெயரில் இ-பாஸ்: மாநிலத்துக்குள் நுழைய போலி இ-பாஸ்என்னப்பா இதுல ஒரு சந்தோஷமா?-டொனால்ட் டிரம்ப், அமிதாப் பச்சன் பெயரில் இ-பாஸ்: மாநிலத்துக்குள் நுழைய போலி இ-பாஸ்

மருத்துவ நிபுணர்கள்

மருத்துவ நிபுணர்கள்

கொரோனா முதல் அலையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு ஐந்து நாட்களுக்குப்பிறகு தொடங்கிய நுரையீரல் பாதிப்புகள், இரண்டாம் அலையின்போது 2 அல்லது 3 நாட்களிலேயே தொடங்கிவிடுவதாக மருத்துவகள் கூறுகின்றனர். மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.

மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம்

மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம்

இந்த நிலையில் கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்தில் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் AC-க்கான கரண்ட் பில் கம்மியாக வர வேண்டுமா? அப்போ இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் AC-க்கான கரண்ட் பில் கம்மியாக வர வேண்டுமா? அப்போ இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

வகையில் புதிய முயற்சியில் த

அதாவது மாநிலம் முழுவதும் 40,000 மொத்த மருந்து விற்பனையாளர்கள் இணைந்து வாட்ஸ்அப் மூலம் மருந்து விநியோகிக்கும் சேவையை துவங்கியுள்ளனர். குறிப்பாக மருந்து தேவை, மருத்துவத் தேவை உள்ளவர்கள் 9342066888 என்ற எண்ணுக்கு தங்கள் தேவையை, முகவரியுடன் கூறினால், இரண்டு மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் கிடைக்கும் வகையில் புதிய முயற்சியில் தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் ஈடுபட்டுள்ளது.

பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனரா?- சமூகவலைதளத்தில் வலுக்கும் விமர்சனம்- உ.பி அரசு பதில்!பசுக்களுக்கு ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனரா?- சமூகவலைதளத்தில் வலுக்கும் விமர்சனம்- உ.பி அரசு பதில்!

 50 சதவீத தள்ளுபடி

50 சதவீத தள்ளுபடி

பின்பு இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்க தலைவர்
பாலசுப்பிரமணியன், கொரோனா நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள்வழங்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு உற்பத்தி விலையிலேயே மருந்துகள் விநியோகிகப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல்: ரூ.399 திட்டத்தில் வழங்கும் நன்மைகள் என்னென்ன?ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல்: ரூ.399 திட்டத்தில் வழங்கும் நன்மைகள் என்னென்ன?

 2 லட்சம் ஊழியர்கள்

குறிப்பாக மருந்து விநியோகிக்கும் பணியில் மாநிலம் முழுவதும் 2 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர். கண்டிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New venture in Tamil Nadu! If you give information to this WhatsApp number, the drugs will search the house! : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X