ஆதார் அட்டை இருந்தா போதும்.. ரூ.6000 உங்க வங்கி கணக்கிற்கு தேடி வரும்.. என்ன திட்டம்? என்ன நன்மை?
ஆதார் அட்டை இருந்தால், குறிப்பிட்ட பயனரகளுக்கு ரூ. 6000 வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் புதிய திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். எந்த திட்டத்தின் கீழ் இந்த தொகை வழங்கப்படுகிறது? இதற்கு ஆதார் மட்டும் இருந்தால் போதுமா?
இந்திய விவசாயிகளுக்காக இந்திய அரசாங்கம் இப்போது நிதியுதவி வழங்கும் பிரத்தியேகமான ஒரு திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டமானது, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi) என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ. 6000 என்ற தொகையை நிதியுதவியாக வழங்குகிறது.

ஆதார் இருந்தால் மட்டும் போதும்.. ரூ. 6000 ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும்:
இந்த திட்டத்தை பெற மக்கள் என்ன செய்ய வேண்டும்? எங்கே விண்ணப்பிக்க வேண்டும் (how to register for Pradhan Mantri Kisan Samman Nidhi scheme) ? என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? எத்தனை பிரிவுகளாக ரூ. 6000 உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேரும் என்பதை பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் இப்போது இந்திய விவசாயிகளுக்கு ரூ. 6000 நிதியுதவி கிடைக்கிறது.
இந்த ரூ. 6000 தொகை ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பதாரர் வங்கி கணக்கில் 3 தவணைகளாக வரவு வைக்கப்படுகிறது. ஆம், மக்களே ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ. 2000 என்ற வீதம் மொத்தம் மூன்று தவணைகளாக இந்த தொகை பிரித்து வழங்கப்படுகிறது. இப்போது இந்திய அரசாங்கம் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கவிருக்கும் 17வது தவணையை பெற மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் நிதியுதவி பெற சில நிபந்தைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அது என்ன என்பதை இப்போது பார்க்கலாம். முதலில் நீங்கள் ஒரு இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். பிறகு, நீங்கள் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும். உங்களிடம் விவசாய வங்கி கணக்கு இருக்க வேண்டும். உங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்க வேண்டும். நீங்கள் எந்தவொரு அரசு உத்தியோகத்திலும் இருக்க கூடாது.

எங்கே விண்ணப்பிக்க வேண்டும்? என்னென்ன ஆவணங்கள் தேவை?
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் புதிய விவசாயியாக சேர, https://pmkisan.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று, உங்கள் ஆதார் (Aadhaar card) விபரங்களை வைத்து உங்களுக்கான புதிய கணக்கை துவங்கலாம். நீங்கள் ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் உறிப்பனராக இருந்தால், இதே தளத்தில் Know Your Status என்ற விருப்பம் காண்பிக்கப்படும் அதை கிளிக் செய்து, நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை செக் செய்துகொள்ளலாம்.
வரவு தொகை பற்றி அறிந்துகொள்ள உங்களிடம் ஆதார் விபரம் மட்டும் இருந்தால் போதுமானது. உங்கள் ஆதார் விபரங்களை உள்ளிட்ட பிறகு, உங்கள் ஆதார் (Aadhaar) உடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு OTP அனுப்பப்படும். OTP விபரங்களை கேப்சா கோட் உடன் உள்ளிட்டு, Get data என்ற விருப்பத்தை கிளிக் செய்தவுடன், மொத்த வரவு தொகை தகவல்களும் காண்பிக்கப்படும்.
இந்திய விவசாயிகள் இந்த நன்மையை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்பு, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (Pradhan Mantri Kisan Samman Nidhi) திட்டம் 2 ஹெக்டேருக்குக் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது எல்லாவகையான விவாசிகளுக்கும் ரூ. 6000 கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








