இதைச் செய்தால் இப்போது YouTube பிரீமியம் இலவசமாகக் கிடைக்கும்.. எப்படி தெரியுமா?

|

யூடியூப் பிரீமியம் இப்போது இந்தியர்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. நீங்கள் இப்போது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Poco M4 Pro ஐ வாங்கினால், அந்த பயனர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு இலவச சோதனை கிடைக்கும். யூடியூப் மற்றும் போகோ இணைந்து இந்தச் சலுகையை இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வந்துள்ளன. இதுபோக யூடியூப் நிறுவனம் தனியாகவும் இலவச பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. இந்த இலவச பிரீமியம் சந்தாவை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம்.

YouTube பிரீமியம் இலவசமா?

YouTube பிரீமியம் இலவசமா?

யூடியூப் மற்றும் போகோ இணைந்து இந்த இரண்டு மாத இலவச சலுகையை இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு வந்துள்ளன. முதல் இரண்டு மாதங்கள் முடிந்ததும், வாடிக்கையாளர்கள் மூன்றாவது மாதத்திலிருந்து சந்தாவுக்குக்கான கட்டணத்தைப் பயனர்கள் செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. யூடியூப் பிரீமியத்தைப் பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், நீங்கள் மீண்டும் வலி மிகுந்த விளம்பரங்களைப் பார்க்க வேண்டியதில்லை, யூடியூப் பயன்பாட்டிலிருந்து பின்னணியில் இசை அல்லது எந்த வீடியோவையும் இயக்கலாம்.

YouTube பிரீமியம் சாந்தாவின் விலை என்ன?

YouTube பிரீமியம் சாந்தாவின் விலை என்ன?

மேலும், யூடியூப் பிரீமியம் மூலம் இணையத் தேவையின்றி எந்த நேரத்திலும் வீடியோக்களைப் பார்க்கப் பயனர்கள் சேமிக்க அல்லது பதிவிறக்க அனுமதிக்கப்படுவார்கள். பின்னர், சந்தாவுடன் இணைந்த YouTube Music Premium உள்ளது. சந்தாவுடன் அணுகக்கூடிய பிரீமியம் உள்ளடக்கம் YouTube இல் உள்ளது. நீங்கள் அதை வாங்க விரும்பினால், நீங்கள் மாதத்திற்கு ரூ.139 அல்லது மூன்று மாதங்களுக்கு ரூ.399 அல்லது பன்னிரண்டு மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு ரூ.1290 செலுத்த வேண்டும்.

IRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைIRCTC விதி: சார்ட் தயாரித்த பிறகும் டிக்கெட் ரத்து செய்து எப்படி பணம் பெறுவது? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

இரண்டு மாத இலவச YouTube பிரீமியம் சந்தா

இரண்டு மாத இலவச YouTube பிரீமியம் சந்தா

யூடியூப் பிரீமியத்தைப் பயன்படுத்தாமல் இருந்தால், ஒரு மாத இலவசச் சோதனையைப் பெறலாம், அதன் பிறகு மாதம் ரூ.129 வசூலிக்கப்படும் என்று தளத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வேண்டுமானால், Poco M4 Pro ஸ்மார்ட்போனை வாங்கி பெறலாம். Poco M4 Pro இன் விவரக்குறிப்புகள் மற்றும் விலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Poco M4 Pro விவரக்குறிப்புகள்

Poco M4 Pro விவரக்குறிப்புகள்

Poco M4 Pro சாதனம் மீடியா டெக் ஹீலியோ G96 சிப்செட் உடன் இணைந்து வருகிறது. இந்த புதிய Poco M4 Pro ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீத ஆதரவுடன் கூடிய 6.43' இன்ச் கொண்ட எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேக்ரோ சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் உடன் இணைக்கப்பட்ட பின்புறத்தில் 64 எம்பி முதன்மை சென்சார் உள்ளது.

ஜியோ வழங்கும் ஜியோ வழங்கும் "டேட்டா லோன்" பெறுவது எப்படி? இது எப்படி செயல்படும் தெரியுமா?

Poco M4 Pro ஸ்மார்ட்போனின் விலை

Poco M4 Pro ஸ்மார்ட்போனின் விலை

Poco M4 Pro ஸ்மார்ட்போனில் செல்ஃபிக்களுக்கு, இந்த சாதனம் முன்பக்கத்தில் 16 எம்பி சென்சார் உடன் வருகிறது. இந்தியாவில் Poco M4 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி மற்றும் 64 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.13,999 என்ற அடிப்படை விலையில் கிடைக்கிறது. அதேபோல், Poco M4 Pro ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ.15,499 விலையில் கிடைக்கிறது. அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபியுடன் வரும் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.16,999 மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
If You Do This YouTube Premium Subscription Will Be Available For Free For Two Months : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X