Just In
- 4 hrs ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 6 hrs ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 19 hrs ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 20 hrs ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- News
கோகுல்ராஜ் கொலை வழக்கு:அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு.. அதிரடி திருப்பம்
- Movies
தொடர் தோல்வி.. கழுத்து நிறைய கடன்.. மீண்டும் காமெடிக்கு தாவும் வாசனை நடிகர்.. ரொம்ப லேட்?
- Sports
வீதிக்கு வந்த மைக்கேல் கிளார்க்கின் கள்ளக் காதல்.. நடுரோட்டில் அறைந்த மனைவி.. என்ன நடந்தது?
- Finance
தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கலாம்.. நிபுணர்களின் கவலையளிக்கும் கணிப்பு!
- Lifestyle
கேரளா ஸ்பெஷல் இறால் ரோஸ்ட்
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ரூ.349/- தொடங்கி ரூ.999/- வரை, ஐடியா வழங்கும் டாப் 5 ரீசார்ஜ்கள்.!
ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு எதிரான தீவிரமான கட்டண யுத்தத்தை தொடரும் நோக்கத்தில் ஐடியா செல்லுலார் நிறுவனம் - வரம்பற்ற அழைப்பு மற்றும் தரவு நன்மைகள் கொண்ட - பல புதிய போஸ்ட்பெயிட் பட்ஜெட் திட்டங்களை அறிமுகம் செய்தது.

தற்போது, அந்த திட்டங்களில் குறிப்பிட்ட திருத்தங்களை ஐடியா நிகழ்த்தியுள்ளது. உங்கள் நெட்வொர்க்கை மாற்ற அல்லது ஐடியாவில் இருந்து ஒரு சிறந்த திட்டத்தை தேடுகிறீர்களானால், இதோ நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டிய 5 சிறப்பான ஐடியா போஸ்ட்பெயிட் திட்டங்களும், அதன் நன்மைகளையும் இங்கே தொகுத்துள்ளோம்.

ஐடியா ரூ.349/-திட்டம்
ஐடியாவின் நுழைவு-நிலை போஸ்ட்பெயிட் திட்டமான ரூ.349/- ஆனது, உள்ளூர் மற்றும் எஸ்டிடி ஆகியவற்றிற்கான வரம்பற்ற அழைப்பைத் தருகிறது, இது வெளியேறும் ரோமிங்கிற்கு விதிவிலக்கு மற்றும் இலவச எஸ்எம்எஸ் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக 4ஜிபி அளவிலான டேட்டா
டேட்டா நன்மையை பொறுத்தமட்டில், ரூ.349/- ஆனது மாதம் முழுவதும் 1ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. இது தவிர்த்து விளம்பரங்களின் ஒரு பகுதியாக, இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக 4ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

ஐடியா ரூ.399/- திட்டம்
ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான தரவு வழங்கும் நோக்கத்தில் இந்த ஐடியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு மாத பில்லிங் சுழற்சிக்கு ரூ.399/- செலவாகிறது. வெளிச்செல்லும் ரோமிங் இல்லாத வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்கும் இந்த திட்டம் மொத்தம் 30ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். உடன் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.

ஐடியா ரூ.499/- திட்டம்
ரூ.499/-ஐ தேந்தெடுக்கும் ஐடியா போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள், எஸ்.டி.டி. அழைப்புகள் மற்றும் இலவச வெளிச்செல்லும் ரோமிங் உள்ளிட்ட எல்லா ஆபரேட்டர்களிலுடனான வரம்பற்ற அழைப்பு நன்மையை பெறலாம். உடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் பில்லிங் சுழற்சிக்கு 30ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவும் கிடைக்கும்.

ஐடியா ரூ.649/- திட்டம்
ஏர்டெல் நிறுவனத்திற்கு எதிரான ஐடியாவில் வெளிப்படையான போட்டியை இந்த திட்டம் கட்டவிழ்த்துவிட்டது. இந்த திட்டமானது மாதம்தோறும் வரம்பற்ற அழைப்பு (உள்ளூர்+வெளியூர்+ரோமிங்) நன்மைகளுடன் சேர்த்து மற்றும் மொத்தம் 45 ஜிபி வரையிலான தரவுகளை வழங்குகிறது. கிடைக்கும் டேட்டாவின் தினசரி வரம்பு 1.5ஜிபி ஆகும் என்பதும் அதனுடன் ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ்களும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐடியா ரூ.999/- திட்டம்
இறுதியாக, ஐடியாவின் விலைமதிப்பு மிக்க போஸ்ட்பாய்ட் திட்டமான ரூ.999/- என்கிற மாதாந்திர கட்டணத்தை பொறுத்தமட்டில், இது மொத்தம் 75 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது. இதன் தினசரி வரம்பு 2.5 ஜிபி ஆகும். டேட்டா தவிர, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் நன்மைகளையும் வாடிக்கையாளர்கள் பெறுவீர்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470