Just In
- 9 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 9 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 10 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 10 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டால் எலான் மஸ்க் எத்தனை கோடி கொடுக்க வேண்டி வரும் தெரியுமா
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்கியுள்ள நிலையில் அந்த நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வரும் பாரக் அகர்வாலை பணிநீக்கம் செய்தால் எவ்வளவு தொகையை மஸ்க் கொடுக்க வேண்டியிருக்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது ட்விட்டர் இணையதளம் கருத்து சுதந்திரத்திற்கான தளமாக இல்லை' என கூறிவந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக தெரிவித்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின்பு ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார் எலான் மஸ்க்.

அதன்பின்பு ட்விட்டர் மற்றும் மஸ்க் என இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்பு பேச்சுவார்த்தையில் 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டது. குறிப்பாக நிர்வாக குழு உடனான பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு நிறுவனத்தை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாதமான டிசைன்.. சூப்பர் அம்சங்களுடன் Tecno Phantom X அறிமுகத்திற்கு ரெடி.. என்ன விலை தெரியுமா?

மேலும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனமாக இருக்கும் ட்விட்டர் இனி தனிநபர் நிறுவனமாக செயல்படும். அதேபோல் ட்விட்டர் நிறுவனத்தில் கருத்து சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

அதேபோல் கருத்துச் சுதந்திரத்தை தான் நம்புவதாகவும் தன்னை மிக மோசமாக விமர்சிக்கும் நபரும் கூட ட்விட்டர் தளத்தில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதே தனது விருப்பம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில், அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் ஊழியர்களிடம் கூறியது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அதாவது ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பாரக் அகர்வால் கூறுகையில், எலான் மஸ்க் தலைமையில் ட்விட்டர் நிறுவனத்தின எதிர்காலம் நிச்சயமற்றதாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்கே தெரியாது என்று கூறினார் அந்நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால்.

குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் ஒருவேளை பதவிநீக்கம் செய்யப்பட்டால், அவருக்கு நிறுவனம் இழப்பீடாக42 மல்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் 320 கோடி ரூபாய்) வழங்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டர் நிறுவனத்திற்கு டிக்டாக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற நிறுவனங்கள் கடும் போட்டி கொடுத்து வந்தன. பின்பு ட்விட்டர் சிஇஓ ஆக இருந்த ஜாக் டோர்சியின் செயல்பாடுகள் முதலீட்டாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போர்ட் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகக் கடந்த நவம்பர் மாதம் சிஇஓ பொருப்பில் இருந்து விலகினார் ஜாக் டோர்சி. அதைத் தொடர்ந்து புதிய சிஇஓ ஆக இந்தியரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086