"நாசாவே சொல்லிருச்சு., சாஃப்டவேர் சமஸ்கிருதத்தில் இருந்தால் கோளாறே வராதுனு": பாஜக எம்.பி.,

|

இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்கி வருகிறது. இதற்கிடையே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக இயங்கி வரும் மூன்று சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்ற கடந்த 4-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் தாக்கல்

அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் தாக்கல்

இதன்படி மூன்று சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 தமிழக எம்.பிக்கள் காரசார வாதம்

தமிழக எம்.பிக்கள் காரசார வாதம்

இந்த மசோதா மீதான விவாதத்தில் தமிழக எம்.பியான ஆ.ராசா மற்றும் சு.வெங்கடேஷன் சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான வாதங்களை முன்வைத்தனர்.

உங்களுக்கே முன்னுரிமை: பி.எஸ்.என்.எல்-க்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிஉங்களுக்கே முன்னுரிமை: பி.எஸ்.என்.எல்-க்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதி

பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங்,

பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங்,

அதேபோல் இந்த விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.பி கணேஷ் சிங், அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தினமும் சம்ஸ்கிருதம் பேசினால் அது நரம்புகளை சிறப்பாகச் செயல்பட வைத்து அதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களைத் தள்ளி வைக்கும் என கூறினார்.

சாஃப்ட்வேரை சமஸ்கிருத மொழியில் உருவாக்கலாம்

சாஃப்ட்வேரை சமஸ்கிருத மொழியில் உருவாக்கலாம்

அதேபோல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், கணினி மென்பொருள்களை சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கம் செய்தால் அதில் எந்தக் குறைபாடும் வராது எனத் தெரிவித்தார்.

கேமராவுக்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்கேமராவுக்கு பதில் ஸ்டிக்கர்: ஆண்ட்ராய்டு போலி ஐபோனை டெலிவரி செய்த பிளிப்கார்ட்

சமஸ்கிருதமே அடிப்படை

சமஸ்கிருதமே அடிப்படை

அதுமட்டுமின்றி உலகில் உள்ள மொழிகளில் 97% மொழிகள் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவைதான் என பேசினார். இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பெரிதளவு வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
If software is in Sanskrit there will be no disorders happened says BJP MP

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X