அதிர்ச்சி தகவல்- ஹார்ட்டின் இமோஜி அனுப்பினால் 5 ஆண்டுகள் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்: வாட்ஸ்அப் பயனர்களே!
சவுதி நாட்டின் சைபர் கிரைம் அந்நாட்டு பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள சிவப்பு நிற ஹார்ட்டின் இமோஜி குறித்த தகவல் ஆகும். ஹார்ட்டின் இமோஜி அனுப்பப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சவுதி அரேபியா சட்டப்படி, 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதானமாக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் அம்சம்
சமூகவலைதள பயன்பாடு என்பது மக்களிடையே பெரிதளவு அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க பயன்பாடாக உலகில் அதிகமானோர்கள் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப் பிரதான தகவல் பகிர்வு தளமாக இருக்கிறது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் பெரும்பாலானோர்கள் அதில் ஸ்டிக்கர் அம்சத்தை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் தளத்தில் இருக்கும் ஸ்டிக்கர்களில் குறிப்பிடத்தக்க ஒன்று அன்பை வெளிப்படுத்தும் விதமான ஹார்ட்டின் இமோஜி ஆகும். இந்த ஹார்ட்டின் இமோஜி குறித்து அந்நாட்டு சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதி அரேபியா சைபர் கிரைம் நிபுணர்
இதுகுறித்து ஓகாஸ் செய்தித்தாள் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சவுதி அரேபியா சைபர் கிரைம் நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், சிவப்பு நிற இதயம் அனுப்பினால் அனுப்பியவரை சிறையில் அடைக்க நேரிடும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் சவுதி அரேபிய சட்டத்தின்படி அனுப்பியவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்ரும் 1 லட்சம் சவுதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சிவப்பு இதயங்கள் ஸ்டிக்கர்
மேலும் இதுகுறித்து மோசடி எதிர்ப்பு சங்கத்தின் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி தெரிவிக்கையில், "சிவப்பு இதயங்களை" அனுப்புவது ஒரு தொல்லை குற்றத்திற்கு சமம் என கூறினார். ஆன்லைன் சேட்டிங்கின் போது இமோஜியினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தால் வழக்கு பதிவு செய்யப்பட்ட துன்புறுத்தல் குற்றமாக மாற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இமோஜி அனுப்புவது சட்டப்படி குற்றம்
சவுதி அரேபியா மோசடி புகார்களுக்கு எதிரான அமைப்பினர்களில் உறுப்பினரான அல் மோடாஸ் குட்பி, நாளிதழ் ஒன்றில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை குறித்து பார்க்கையில், வாட்ஸ்அப்பில் ஒருவர் விருப்பம் இல்லாமல் அவருக்கு சிவப்பு நிற ஹார்ட்டின் இமோஜி அனுப்புவது சட்டப்படி குற்றமாகும், அது அவரை துன்புறுத்தல் குற்றத்திற்கு சமமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் சேட்டிங்கின் போது குறிப்பிட்ட படங்கள் மற்றும் இமோஜிக்கள் ஒருவர் அனுமதியின்றி அனுப்பும் பட்சத்தில் அவர்கள் இதனால் மனஉளைச்சல் அடைந்ததாக புகார் தெரிவித்தால், இது துன்புறுத்தல் குற்றமாக கருதப்படும் என தெரிவித்துள்ளார். எனவே யாரும் யாருடனும் அவர்களது அனுமதியின்றி உரையாடல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அதேபோல் குறிப்பாக ஒருவர் அனுமதியின்றி சிவுப்பு நிற ஹார்ட்டின் இமோஜிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய இமோஜிகள்
குறிப்பாக பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய இமோஜிகளில் சிவப்பு நிற இமோஜிக்கள் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் ஒருவரின் அனுமதியின்றி அனுப்பப்படும் பட்சத்தில் இதுவும் இணையும். அதாவது ஒருவரின் தன்மானம் சீண்டும் மற்றும் பாலியல் அர்த்தங்களை வெளிப்படும் ஒவ்வொரு செயல், சைகை என அனைத்தும் துன்புறுத்தல் அர்த்தங்களாகவே கருதப்படுகிறது. அதில் இமோஜிகளும் அடங்கும். இதுபோன்ற இமோஜிகள் பயன்படுத்தும் போது கவனமாக செயல்பட வேண்டும் எனவும் இதுபோன்ற செயலில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் தெரிவிக்கப்படும் பட்சத்தில், சுமார் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் சவுதி ரியால் எனப்படுவது இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.2 லட்சம் ஆகும்.


Click it and Unblock the Notifications