நீங்கள் மர்மமாக இறந்தால் டுவிட்டரை எனக்கு கொடுப்பீர்களா?- டுவிட்டர் பயனருக்கு மஸ்க் சொன்ன "ஓகே": பதறிய தாய்!

|

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் சமீபத்திய டுவிட் பெரும் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. அது "நான் மர்மமான முறையில் இறந்தால்" என்று மஸ்க் பதிவிட்ட டுவிட் ஆகும். மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரை $44 பில்லியனுக்கு வாங்கும் முடிவை அறிவித்தவர், உலகின் டாப் பணக்காரர், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் என்று பல்வேறு புகழுடன் திகழ்பவர் எலான் மஸ்க். டுவிட்டரை மஸ்க் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே டுவிட்டரில் சாமாணியர்கள் மற்றும் இளைஞர்கள் கேட்கப்படும் ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். முன்னதாக டுவிட்டரில் அவ்வப்போது மஸ்க் பதிவிடும் சர்ச்சையான டுவீட்களை டுவிட்டர் நிறுவனர் நீக்கி வந்தது. இதனால் டுவிட்டரில் கருத்து சுதந்திரம் இல்லை என மஸ்க் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அந்த டுவிட்டர் நிறுவனத்தையே மஸ்க் கைப்பற்றி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

எலான் மஸ்க் சமீபத்திய டுவிட்

எலான் மஸ்க் சமீபத்திய டுவிட் தற்போது பெருமளவு வைரலாகி வருகிறது. மஸ்க் பதிவிட்ட டுவிட்டில் "நான் மர்மமான சூழ்நிலையில் இறந்தால் உங்களை அறிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என மஸ்க் டுவிட் செய்திருந்தார்.

பிரபல யூடியூப்பர் அளித்த பேட்டி

இதற்கு உடனடியாக மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் பிரபல யூடியூப்பர் பதிலளித்துள்ளார். அதில், "அப்படி நடந்தால் எனக்கு டுவிட்டரை வழங்குவீர்களா" என குறிப்பிட்டிருக்கிறார். மிஸ்டர் பீஸ்ட் யூடியூப்பர் கேள்விக்கு மஸ்க் உடனடி பதிலளித்துள்ளார். மஸ்க் "ஓகே" என பதிலளித்திருக்கிறார்.

பாதுகாப்பாக இருங்கள் என பதில்

மஸ்க் சரி என்று குறிப்பிட்டதற்கு மிஸ்டர் பீஸ்ட் ரிப்ளை செய்திருக்கிறார். அதில் "நகைச்சுவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், பாதுகாப்பாக இருங்கள்"! என மிஸ்டர் பீஸ்ட் பதிலளித்திருக்கிறார். மிஸ்டர் பீஸ்ட் மிகவும் பிரபலமான உள்ளடக்கத்தை வழங்குவதில் வல்லவர். சுமார் 9.5 கோடிக்கும் மேல் ஃபாலோவர்களை பெற்ற மிஸ்டர் பீஸ்ட் யூடியூப் சேனலர் 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சிறந்த படைப்பாளி என்ற விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க் நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் சூழலில் எலான் மஸ்க் ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவை உக்ரைனுக்கு அளிக்கப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது. மேலும் எலான் மஸ்க் உக்ரைனுக்கு பிராட்பேண்ட் சேவையை வழங்கியதை ரஷ்யா விண்வெளி தலைவர் டிமிட்ரி ரோகோசின் நேரடியாக மிரட்டல் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதன்காரணமாகவே மஸ்க் இப்படி குறிப்பிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வேடிக்கையான விஷயமில்லை என மே மஸ்க் கருத்து

எலான் மஸ்க் தன் இறப்பு குறித்து பதிவிட்டதற்கு, இது வேடிக்கையான விஷயமில்லை என மஸ்க் தாயார் மே மஸ்க் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் இதில் இரண்டு கோவமான இமோஜிக்களையும் பதிவிட்டிருக்கிறார்.

மர்மமான சூழ்நிலையில் மரணம் என்று மஸ்க் பதிவிட்ட பதிவுக்கு, பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். நகைச்சுவையான கருத்துகள் முதல் எச்சரிக்கையான கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மஸ்க் குடிபோதையில் இருக்கிறாரா என சில பயனர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். மஸ்க்கை தொந்தரவு செய்கிறார்கள் என சிலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர். மேலும் சிலர்., சீர்திருத்தத்தை கொண்டு வர அவர் வாழ வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம்

டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம்

டுவிட்டர் பயனர்கள் பல ஆண்டுகளாக டுவிட்டரில் எடிட் பட்டன் அம்சம் கோரி வருகின்றனர். நிறுவனம் தற்போது இந்த அம்சத்தில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டுவிட்டரை வாங்குவதற்கு முன்பே எலான் மஸ்க், டுவிட்டரில் அறிமுகம் செய்யப்படக் கூடிய பல ஆக்கப்பூர்வமான அம்சங்கள் குறித்து தெரிவித்துள்ளார். அதில் ஒன்று எடிட் பட்டன் தேவை என்பதாகும். எலான் மஸ்க் பயனர்களிடம் டுவிட்டரில் எடிட் பட்டன் தேவையா? என வாக்கெடுப்பு நடத்தினார். இதில் 73.6% பயனர்கள் டுவிட்டரில் இந்த அம்சம் வேண்டும் என தெரிவித்தனர், அதேபோல் 26.4% பேர் எதிராக வாக்களித்தனர். ஏப்ரல் மாதத்தில் டுவிட்டர் பயனர்கள் தங்கள் டுவிட்களை பதிவிட்ட பிறகு அவற்றை திருத்த அனுமதிக்கும் பட்டனுக்கான அம்சத்தில் பணிபுரிவதாக அறிவித்தது.

ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம்

ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம்

எடிட் பட்டன் தேவை, ப்ளூ டிக் ப்ரீமியம் சந்தா சேவை கட்டணம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை டுவிட்டரில் எலான் மஸ்க் மேற்கொள்ள இருக்கிறார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரே எலான் மஸ்க், டுவிட்டரில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். டுவிட்டரை வாங்கிய மஸ்க், டுவிட்டர் சாதாரண பயனர்களுக்கு எப்போது போல் இலவசமாக இருக்கும் எனவும் ஆனால் வர்த்தக ரீதியாக அல்லது அரசு சார்ந்து டுவிட்டரை பயன்படுத்துவோருக்கு சிறிய கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
IF I Die Mysterious Circumstances: Elon Musk Recent Tweet Got Viral

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X