3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்லி கண்டுபிடிப்பு! விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்!

|

தமிழர்களின் உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு தான் இட்லி, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவாக இந்த இட்லி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு உயர்ந்த ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பண்டங்களின் பட்டியலில் இட்லியை சேர்த்துள்ளது. உலகம் முழுதும் இட்லிக்கென்று தனியாகச் சிறப்புத் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.

உணவு பண்டங்கள் இனி கெடாமல் பார்த்துக்கொள்ளலாம்

உணவு பண்டங்கள் இனி கெடாமல் பார்த்துக்கொள்ளலாம்

இத்தகைய சிறப்பம்சம் கொண்ட இட்லியை தினந்தோறும் செய்து சாப்பிடுவதில் சிறிது சிக்கல் உள்ளது. வீட்டில் தினமும் இதற்கான மாவு தயார் செய்து இட்லியை தயாரிப்பது சிக்கலாக உள்ளது. அதோடு சமைத்து வைக்கப்படும் இட்லியும் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதில்லை. உணவு பண்டங்களைக் கெடாமல் பார்த்துக்கொள்ள ஒரு புதிய முறையை மும்பையைச் சேர்ந்த பேராசிரியை கண்டுபிடித்துள்ளார்.

3 வருடங்கள் வரை கேடாது

3 வருடங்கள் வரை கேடாது

இவர் கண்டுபிடித்துள்ள முறைப்படி, இட்லியை சுமார் 3 வருடங்கள் வரை கேடாமல் பார்த்துக்கொள்ள முடியுமென்று கூறியுள்ளார். மும்பை பல்கலைக்கழக பேராசிரியையான வைஷாலி பம்போல், எந்தவொரு ரசாயன முறையையும் பயன்படுத்தாமல், இட்லியை சுமார் மூன்று ஆண்டுகள் வரை கெடாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Whatsapp: நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது! இறுதிநேரமும் முடிந்தது!Whatsapp: நாளை முதல் இந்த போன்களில் வாட்ஸ்ஆப் கிடையாது! இறுதிநேரமும் முடிந்தது!

மும்பை பல்கலைக்கழக பேராசிரியை சாதனை

மும்பை பல்கலைக்கழக பேராசிரியை சாதனை

மும்பை பல்கலைக்கழக பேராசிரியை கூறியதாவது, 2013 ஆம் ஆண்டிலிருந்து தனது குழுவுடன் வைஷாலி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும். எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறையைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைக் கெட்டுப்போகாமல் பதப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம், என்று கூறியுள்ளார்.

விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்

விண்வெளியில் கூட பயன்படுத்தலாம்

தற்பொழுது இவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த எலக்ட்ரானிக் பீம் ரேடியேஷன் முறை, ராணுவ வீரர்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விண்வெளியில் கூட உணவு பண்டங்கள் கெடாமல் பார்த்துக்கொள்ள இந்த் முறை பெரிதும் பயனுள்ளதாய் இருக்கும் என்று தெரிகிறது.

Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!Google-ல் தேடவே கூடாத 10 விஷயங்கள்! வீனா ஆபத்தில் சிக்காதீர்கள்!

இன்னும் நாட்களை அதிகரிக்க முடியுமா? புதிய ஆராய்ச்சி

இன்னும் நாட்களை அதிகரிக்க முடியுமா? புதிய ஆராய்ச்சி

அதேபோல் உணவு பண்டங்களின் ஏற்றுமதி / இறக்குமதிக்கும், இயற்கை பேரிடர்களின் போதும் இந்த புதிய முறை கைகொடுக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்த முறையை பயன்படுத்தி அனைத்து உணவு பண்டங்களையும் இன்னும் கூடுதல் நாட்களுக்கு கெடாமல் பார்த்துக்கொள்ளும் புதிய ஆராய்ச்சியை தற்பொழுது துவங்கியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Idly Can Be Preserved For Upto 3 Years By Using Electronic Beam Radiation : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X