வெளிநாட்டில் இருந்து இனி பணம் அனுப்புவது மிக சுலபம்.. UPI ஐடி.. அறிமுகமானது புதிய வசதி.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் நகரங்கள் முதல் உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். அதுவும் யுபிஐ (upi) வசதி மூலம் அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடிகிறது. அதேபோல் அனைவரும் பயன்படுத்தும் இந்த யுபிஐ வசதியில் தொடர்ந்து பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ( IDFC First Bank )
இந்நிலையில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வசிக்கும் உங்களது குடும்பத்தினருக்கோ அல்லது வெளிநாட்டில் இருந்து நண்பர்களுக்கோ பணம் அனுப்ப விரும்பினால் இனி அது மிகவும் எளிதாக இருக்கப் போகிறது. அதற்கான ஒரு புதிய வசதியை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ( IDFC First Bank ) கொண்டுவந்துள்ளது.

அதாவது இதற்காக ஒரு புதிய வசதியை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் NRI வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் சர்வதேச மொபைல் எண்களிலிருந்தும் யூபிஐ மூலம் மிக எளிதாகப் பணம் செலுத்தலாம். குறிப்பாக இந்த வசதியை ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று தொடங்கியது.
அதுவும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் இந்த புதிய முயற்சி, இந்திய மொபைல் எண் இல்லாவிட்டாலும யுபிஐ மூலம் தங்கள் பணத்தை பரிவர்த்தனை செய்யக்கூடிய லட்சக்கணக்கான NRI மக்களுக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கும். குறிப்பாக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் இந்த சேவை 12 நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஹாங்காங், மலேசியா, ஓமன், கத்தார்,சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய நாடுகள்,ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த வசதி தற்போது கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்னும் சில காலங்களில் இந்த வசதி உலகின் மற்ற நாடுகளிலும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் வசிக்கும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் NRE அல்லது NRO கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வெளிநாட்டு எண்களில் இருந்து கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும். குறிப்பாக இந்த வசதியைப் பயன்படுத்த இந்திய சிம் கார்டு தேவையில்லை (No Indian SIM Required). இப்போது உங்களது யுபிஐ கணக்கை இந்திய எண்ணுக்கு பதிலாக சர்வதேச எண்ணுடன் இணைக்க முடியும்.
அதேபோல் பணம் உடனடியாக அனுப்பப்படும். அதுவும் பணம் அனுப்புதல், பில்களை செலுத்துதல், QR குறியீடு அல்லது யுபிஐ ஐடியைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வது இப்போது எளிதாக இருக்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதற்கு கூடுதல் கட்டணங்கள் இதில் இருக்காது. அதாவது எந்தவொரு பரிவர்த்தனைக்கும் பரிவர்த்தனை கட்டணம் இருக்காது (Zero Transaction Fees) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நீங்கள் அனுப்பும் பணத்துக்கு பாதுகாப்பு உறுதி இருக்கிறது. இதன் மூலம் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள் இந்தியாவில் கிடைக்கும் அதே பாதுகாப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இந்த வசதி இந்திய ரூபாயில் (INR) செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே. அந்நிய செலாவணி கட்டணம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
முதலில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் மொபைல் செயலியைத் திறந்து Pay என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன்பின்பு உங்களது NRE அல்லது NRO கணக்கை இணைக்க வேண்டும்.
அடுத்து ஒரு புதிய யூபிஐ ஐடியை உருவாக்கி அதில் பணம் செலுத்தத் தொடங்கலாம்.


Click it and Unblock the Notifications