Just In
- 1 hr ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 hr ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 2 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
- 3 hrs ago
அவசரப்பட்டு.. ரூ.9999 கொடுத்து.. Infinix Note 12i ஸ்மார்ட்போனை வாங்கிடாதீங்க.. ஏன்னா?
Don't Miss
- News
"தனித்து நிற்போம்".. கட்டம் கட்டும் எடப்பாடி டீம்.. பாஜகவை கழற்றிவிட பிளான்? என்ன நடக்குது கேம்பில்?
- Movies
பாக்ஸ் ஆபிஸில் 300 கோடியை கடந்த பதான்... ஷாருக்கானின் ரியல் சம்பவம்... மிரண்டுபோன பாய்காட்டர்ஸ்
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஓஹோ அது நீங்க தானா., ஒரே நாள் இந்தியா ஃபேமஸ்- கொரோனா காலர் ட்யூனுக்கு சொந்தகாரர் இவரா!
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன் செட் செய்யப்பட்டுள்ளது. இந்த காலர் டியூன் ஆரம்பத்தில் பிஎஸ்என்எல், ஜியோவில் மட்டும் கேட்டாலும். தற்போது ஏணைய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அழைப்புக்கும் கேட்கிறது.

இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழப்பு
சீனாவின் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா, அதற்கு அடுத்தப்படியாக இத்தாலியில் அதிகபட்சமாக 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி பிரிட்டன், ஸ்விட்சர்லாந்தில் முதல் முறையாக கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 160 பேருக்கு கொரோனா
மேலும் ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, எகிப்து போன்ற நாடுகளிலும் முதல் முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 160 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்க அரசு இந்திய மதிப்பில் 6000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு
இதில் ஈரானில் மட்டும் 3,500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. மேலும் அங்கு 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக 13 நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது, 30 கோடி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது
சீனாவில் கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளது.

புதியரக ஹெல்மெட்
புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று மிகக்குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி புதிதாக 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொரோனா நோயாளிகளை கண்டறியும் வகையில் சீனாவில் புதிய ரக ஹெல்மெட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவாமல் இருக்க உச்சக்கட்ட நடவடிக்கை
இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து நாட்டு அரசாலும் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தொலைபேசி காலர்டியூன் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தம் கேட்கிறதா
ஒருவருக்கு போன் செய்ததும் ரிங்டோனுக்கு பதிலாக இருமல் சத்தத்தில் தொடங்கி ஆங்கிலத்தில் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முறையானது ஆரம்பத்தில் பி.எஸ்.என்.எல். மற்றும் ரிலையன்ஸ் ஜியோ-வில் அறிமுகம் செய்தாலும் தற்போது ஏணைய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அழைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது.

38 நொடிகள் வரும் காலர் டியூனுக்கு சொந்தக்காரர்
38 நொடிகள் வரும் இந்த காலர் டியூனுக்கு சொந்தக்காரர் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீப்ரியா என்பவரின் குரல் என தெரிவிக்கப்படுகிறது. எர்ணாகுளம் காந்தி நகர் பகுதியில் டெலிகிராம் ஸ்டோரில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசராக ஸ்ரீப்ரியா பணியாற்றி வருகிறார். இவர் கேரளா பிஎஸ்என்எல் சேவையில் இதற்கு முன்னதாகவே குரல் கொடுத்துள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470