1ஜிபி டேட்டா & அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் : ஐடியா-வின் புதிய திட்டம்.!

ஐடியா புதிய திட்டத்தில் ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி 3ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் கால் அழைப்புகள், பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

By Prakash
|

ஐடியா செல்லுலார் நிறுவனம் இப்போது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த திட்டம் பொறுத்தவரை ஐடியா வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடியா தற்சமயம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற சலுகையை பயன்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை வழங்கியுள்ளது. மேலும் இதற்கு முன்பு ரூ.198/- என்கிற ரீசார்ஜ் திட்டத்தில் திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது.

 ரூ.509-ரீசார்ஜ்:

ரூ.509-ரீசார்ஜ்:

ஐடியா புதிய திட்டத்தில் ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி 3ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் கால் அழைப்புகள், பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

84 நாட்கள்:

84 நாட்கள்:

இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 84 நாட்கள் பயன்படுத்த முடியும் என ஐடியா செல்லுலார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஜியோவிற்கு போட்டியா இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஷ்பேக்:

கேஷ்பேக்:

ஐடியா செல்லுலார் நிறுவனம் அறிவித்த தகவலின் அடிப்படையில் ரூ.300க்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்வோருக்கு 100 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஷ்பேக் தொகை பொறுத்தவரை ரூ.51 வீதம் அடுத்த ஏழு ரீசார்ஜ்களில் தள்ளுபடியாக பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரோமிங் :

ரோமிங் :

ஐடியா சமீபத்தில் தான், அதன் வரம்பற்ற ரோமிங் வெளிச்செல்லும் அழைப்பு நன்மைகளை வழங்கும் காம்போ கட்டணத் திட்டங்களை தொகுத்து வழங்கி வருகிறது. அந்த திட்டங்களில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த திருத்தம், அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் பயனர்களுக்கு மிகவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை.

 ஐடியா:

ஐடியா:

ஜியோவுடன் போட்டியிடும் முனைப்பிலும், தனது சந்தாதாரர்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்திடனும், ஐடியா நிறுவனம் மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன் ரூ.198/- என்கிற ரீசார்ஜ் திட்டத்தில் திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது.

தொலைத் தொடர்பு நிறுவனங்கள்:

தொலைத் தொடர்பு நிறுவனங்கள்:

கடந்த இரண்டு வாரங்களாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவர்களின் கட்டணத் திட்டங்களை மறுசீரமைத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பார்தி ஏர்டெல் மற்றும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள், தற்போதுள்ள திட்டங்களுக்கு ஏற்ற மாதிரியான (முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோ) புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

Best Mobiles in India

English summary
Ideas New 509 Pack Competes With Airtels 509 and Jios 459 Packs ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X