15 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடத்தை இழந்த ஏர்டெல்.! பின்னணி என்ன தெரியுமா?
முதலில் ஏர்செல்- ரிலையன்ஸ் இணைப்பு முறையை கையாண்டன. தொழில் நஷ்டம் காரணமாக ஏர்செல் நிறுவனம் திவால் ரோட்டீஸ் கொடுத்துவிட்டு வெளியேறியது. பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் கைப்பற்றியது.
இந்திய தொலைத்தொடர்பு துறையில், ஜியோ வருகைக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜியோ நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு சலுகைளை வழங்கி வருகின்றது.

தொலைபேசி சந்தையில் ஏற்பட்ட கடும் போட்டியால், ஏர்செல் நிறுவனம் வெளியேறியது. ஜியோவால் மற்ற நிறுவனங்களுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க செல்போன் நிறுவனங்கள் இணைப்பு முறையை கையாண்டு வருகின்றன.

ஜியோ நிறுவனம்:
முதலில் ஏர்செல்- ரிலையன்ஸ் இணைப்பு முறையை கையாண்டன. தொழில் நஷ்டம் காரணமாக ஏர்செல் நிறுவனம் திவால் ரோட்டீஸ் கொடுத்துவிட்டு வெளியேறியது. பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை ஜியோ நிறுவனம் கைப்பற்றியது.
ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் முன்னணி நிறுவனமான ஜியோ விளங்குகின்றது. இதனால் தொழில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதி நிறுவனங்கள் ஜியோவுக்கு இணையாக சலுகைகளை அறிவித்தன. இந்த சலுகை அறிவிப்பால், தொலைபேசி நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஐடியா- வோடா போன் நிறுவனம் இணைப்பு:
வோடாபோன்- ஐடியா நிறுவனங்கள் இணைய தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்து இருந்தன. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து கொள்ளலாம் என தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கூறியது.

வோடாபோன் ஐடியா:
இதைத்தொடர்ந்து வோடாபோன் ஐடியா லிமிடெட் என்று இந்த நிறுவனத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவராக ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான குமார்மங்கலம் பிர்லா பொறுப்பெற்கிறார்.

முதலிடத்தை இழந்த ஏர்டெல்:
இதனால் கடந்த 15 ஆண்டாக முதலிடம் பிடித்து இருந்த ஏர்டெல் நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. 40.8 கோடி வாடிக்கையாளர்கள் உடன், சந்தை மதிப்பில் 35% பங்களிப்புடன் நாட்டின் மகிப்பு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடாபோன் ஐடியா லிமிட்டெட் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications