ஐடியாவின் ரூ.198/- ரீசார்ஜில் திருத்தம்: இனி கூடுதல் டேட்டா வழங்கும்.!

குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரங்களில் மட்டுமே இந்த திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

|

ஜியோவுடன் போட்டியிடும் முனைப்பிலும், தனது சந்தாதாரர்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்திடனும், ஐடியா நிறுவனம் மற்றொரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன் ரூ.198/- என்கிற ரீசார்ஜ் திட்டத்தில் திருத்தங்களை நிகழ்த்தியுள்ளது.

ஐடியாவின் ரூ.198/- ரீசார்ஜில் திருத்தம்: இனி கூடுதல் டேட்டா வழங்கும்.!

தற்போது இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் டேட்டாவை - கட்டணம் ஏதும் வசூலிக்காமல் - தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஐடியா திட்டமிட்டுள்ளது. குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வட்டாரங்களில் மட்டுமே இந்த திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

1.5ஜிபி என்று மேம்படுத்தப்பட்டுள்ளது

1.5ஜிபி என்று மேம்படுத்தப்பட்டுள்ளது

கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 1ஜிபி அளவிலான தொகுக்கப்பட்ட தரவு நன்மையை வழங்கியது. இந்த வரம்பு இப்போது 1.5ஜிபி என்று மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் வழங்கும் 1.5 ஜிபி அளவிலான டேட்டா மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், ஒரு நாளைக்கு அல்ல என்பதை மனதிற்கொள்ள வேண்டும்.

1ஐபி கூடுதல் தரவு

1ஐபி கூடுதல் தரவு

ஐடியா வலைத்தளம் அல்லது மைஐடியா பயன்பாட்டிலிருந்து இந்த ரீசார்ஜ் திட்டத்தை வாங்குவோர் நிறுவனத்திடமிருந்து 1ஐபி கூடுதல் தரவு கிடைக்கும். ஆகமொத்தம் 2.5ஜிபிபி அளவிலான தொகுக்கப்பட்ட டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது.

வரம்பற்ற இலவச அழைப்பு

வரம்பற்ற இலவச அழைப்பு

4ஜி/3ஜி தரவோடு சேர்த்து, இந்த ஐடியா திட்டமானது எந்தவொரு நெட்வொர்க்கிலும் உள்ள உள்ளூர் மற்றும் எஸ்டிடி எண்களுக்கு 'வரம்பற்ற இலவச அழைப்பு' நன்மையையும் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது.

வாரத்திற்கு 1,000 நிமிடங்கள்

வாரத்திற்கு 1,000 நிமிடங்கள்

இந்த திட்டத்தின் இலவச அழைப்புகளானது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு 1,000 நிமிடங்கள் என்கிற வரம்பை கொண்டுள்ளன மற்றும் சந்தாதாரர்கள் ஒரு வாரத்தில் 100-க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பயனர்களை அழைக்க முடியாது.

கேபி டேட்டாவிற்கு 4 பைசா

கேபி டேட்டாவிற்கு 4 பைசா

இந்த வரம்புகளுக்கு அப்பால் அவர்கள் சென்றால், வினாடிக்கு 1 பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல், 2.5ஜிபி என்கிற டேட்டா வரம்பை மீறிய பின்னர் 1கேபி டேட்டாவிற்கு 4 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

ஜியோவின் ரூ.199/- திட்டம்

ஜியோவின் ரூ.199/- திட்டம்

முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.199/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி என மொத்தம் 28 ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற அழைப்புக்கள், இலவச எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகள் ஆகிய அணுகலையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Idea Upgrades Rs. 198 Prepaid Pack to Offer More Data, Along With Bundled Calls. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X