Home
News

3ஜி சேவையின் கட்டணத்தை குறைக்கும் ஐடியா!

By Super
3ஜி சேவையின் கட்டணத்தை குறைக்கும் ஐடியா!

3ஜி சேவையின் கட்டண விலையை 70% சதவிகிதம் குறைத்துள்ளது ஐடியா நிறுவனம்.

மொபைல் கட்டணங்களும், 3ஜி போன்ற தொழில் நுட்பங்களின் விலையும் அதிரடியாக குறைந்து கொண்டே வருவது பற்றி தான் இப்போது எங்கு பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது.

ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்டு பெய்டு வாடிக்கையாளர்கள் 3 பைசாவில் ஐடியாவின் 3ஜி சேவையை 10 கேபி வரை பயன்படுத்தலாம்.

இதற்கு முன்பு 10 கேபி வரை 3ஜி சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் 10 பைசா செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இப்போது இது 3 பைசாவாக குறைந்துள்ளது.

இது மட்டும் அல்லாமல் ஐடியா நிறுவனம் ஹீரோ-25 என்ற புதிய பேக்கேஜை வழங்கி உள்ளது. இந்த ஹீரோ பேக்கேஜின் மூலம் 100 எம்பி வரை 3ஜி சேவையை 3 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

இதில் என்ன ஒரு ஸ்பெஷல் என்றால் இந்த 100 எம்பி வசதியை 3 நாட்களுக்கு பயன்படுத்த, ரூ.25 கட்டணம் செலுத்தினால் போதும்.

இன்னும் ஒரு சூப்பர் பேக்கேஜையும் ஐடியா வழங்குகிறது. ரூ.10 கட்டணத்தில் 30 நிமிடத்திற்கான 3ஜி சேவையை பயன்படுத்தலாம்.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் 3ஜி சேவையின் கட்டணத்தை 70% சதவிகிதம் குறைத்தது. இதை தொடர்ந்து ஐடியா நிறுவனமும் தனது 3ஜி சேவையின் கட்டணத்தினை குறைத்துள்ளது என்று கூறலாம்.

ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வசதிகள் நிச்சயம் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு உபயோகமான ஒன்றாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X