ஜியோவை சமாளிக்க புது ஐடியா : ஐடியா அதிரடி.!!

By Meganathan
|

நாடு முழுக்க இலவசமாக வழங்கப்பட்டு வரும் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகள் முதல் மூன்று மாதங்களுக்கு அனைத்துச் சேவைகளையும் இலவசமாகக் கிடைக்கின்றது. இதன் காரணமாக ஜியோ மோகம் அதிகரித்திருப்பதோடு மற்ற நிறுவனங்களுக்கும் நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாழ்நாள் முழுக்க வாய்ஸ் கால்களை இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த நாள் முதல் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ஐடியா

ஐடியா

அந்த வரிசையில் முதலில் இடம் பிடித்த பெருமை ஐடியா நிறுவனத்தையே சேரும். அன்-லிமிட்டெட் வாய்ஸ் கால்களுக்கு நாடு முழுக்க குறைக்கப்பட்ட புதிய கட்டணங்களை ஐடியா நிர்ணயம் செய்திருக்கின்றது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

நாடு முழுக்க சுமார் 17.6 கோடி வாடிக்கையாளர்களுடன் நாட்டின் மூன்றாவது பெரிய நிறுவனமாக ஐடியா விளங்குகின்றது. விலை குறைப்பு குறித்து ஐடியா சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும் பலரும் தங்களுக்கு புதிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர்.

சலுகை

சலுகை

புதிய சலுகைகளில் அதிகளவு கட்டணங்கள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் இச்சலுகைகளை எளிதாகப் பெற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிய சலுகைகளுக்கான அறிவிப்பு மின்னஞ்சல் மூலம் ஐடியா வழங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஐடியா

ஐடியா

மொத்தமாக 22 டெலிகாம் வட்டாரங்களில் ஆதித்தியா பிர்லாவின் தொலைத்தொடர்பு நிறுவனம் நெட் மூலம் மேற்கொள்ளக் கூடிய அழைப்புகளை ரூ.345-350 வரை வழங்கி வருகின்றன. இம்முறை ஐடியா நிறுவனம் சுமார் 20 சதவீதம் வரை கட்டணங்களை குறைத்து ரூ.299க்கு அன்-லிமிட்டெட் சேவையினை வழங்கி வருகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

முதல் மூன்று மாதங்களுக்கு இலவசம், அதன் பின் மிகக் குறைந்த விலையில் சேவைகளை அறிவித்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோ அடுத்த ஆண்டு முதல் எவ்வித கட்டணங்களை நிர்ணயிக்கும் என்பதே பலரின் சந்தேகமாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Idea slashes tariff of unlimited voice calling packs Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X