70 நாட்கள் செல்லுபடி; நாள் ஒன்றிற்கு 2ஜிபி மற்றும் 2.5ஜிபி; ஐடியா திருத்தங்கள்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பாணியையும் சேர்த்து வம்பிழுக்கும் ஐடியா நிறுவனத்தின் புதிய திருத்தம் என்ன.?

|

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் திட்டங்களுடன் சிறிதளவாவது போராடும் முனைப்பின்கீழ், ஐடியா செல்லுலார் நிறுவனமானது இரண்டு நீண்ட காலம் செல்ல்லுபடியாகும் திட்டங்களை திருத்தி அறிவித்துள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பாணியையும் சேர்த்து வம்பிழுக்கும் ஐடியா நிறுவனத்தின் புதிய திருத்தம் என்ன.? இனி அதன் நன்மைகள் என்னென்ன மற்றும் அவைகளின் செல்லுபடி காலம் என்ன என்பதை விரிவாக காம்போம்.!

இரண்டு நீண்ட காலத் திட்டங்கள்

இரண்டு நீண்ட காலத் திட்டங்கள்

சமீப காலமாகவோ சில கௌரவமான ப்ரீபெய்ட் கட்டணத் திட்டங்களை அறிமுகம் செய்யும் ஐடியா தற்போது, அதன் ரூ.897 மற்றும் ரூ.1197/- என்கிற இரண்டு நீண்ட காலத் திட்டங்களை திருத்தியுள்ளது.

70 நாட்களுக்கு செல்லுபடி

70 நாட்களுக்கு செல்லுபடி

இந்த இரண்டு திட்டங்களும் முன்னர் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நன்மைகளை வழங்கியது. இப்போது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் குறைக்கப்பட்ட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 2.5 ஜிபி

ஒரு நாளைக்கு 2.5 ஜிபி

நன்மைகளை பொறுத்தமட்டில், ஐடியா ரூ.897/- ஆனது நாள் ஒன்றுக்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை கொடுக்கிறது. மறுகையில் உள்ள ரூ.1,197 /- திட்டமானது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி அளவிலான தரவை கொடுக்கிறது.

செல்லுபடி காலம் குறைக்கப்பட்டுள்ளது

செல்லுபடி காலம் குறைக்கப்பட்டுள்ளது

இந்த இரு திட்டங்களுடனும் சேர்த்து, ஐடியா அதன் ரூ.697/- கட்டணத் திட்டத்தையும் திருத்தியுள்ளது. இந்த திட்டமும் முன்னர் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது, தற்போது 70 நாட்கள் என்று செல்லுபடி காலம் குறைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசம்

வித்தியாசம்

நன்மைகளை பொருத்தமட்டில் ரூ.697/-ஆனது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த அளவிலான தரவு நன்மைகளானது 4ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 4ஜி அல்லாத பயனர்களுக்கு, தரவுப்பலன் பாரிய வித்தியாசத்தில் வேறுபடுகின்றது.

வெறும்  6ஜிபி டேட்டா

வெறும் 6ஜிபி டேட்டா

அதாவது ரூ.697/- ஆனது 4ஜி கைபேசி அல்லாத பயனர்களுக்கு வெறும் 6ஜிபி அளவிலான டேட்டாவை அதே 70 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது. மீதமுள்ள ரூ.897/- மற்றும் ரூ.1,197/- திட்டங்களை பொறுத்தமட்டில், முறையே 15 ஜிபி மற்றும் 30 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.

175 ஜிபி

175 ஜிபி

மறுகையில் உள்ள 4ஜி கைபேசி உபயோகிப்பவர்களுக்கு ரூ.697/- ஆனது அதன் செல்லுபடியாகும் காலத்தில் மொத்தம் 105 ஜிபி டேட்டாவும், ரூ.897/- ஆனது 140 ஜிபி அளவிலான டேட்டாவும் மற்றும் ரூ.11,97/- ஆனது 175 ஜிபி டேட்டாவும் வழங்கும்.

நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள்

டேட்டா பயன்களை மட்டுமின்றி, இந்த 3 திட்டங்களுமே வரம்பிற்குட்பட்ட குரல் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் வரை நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மையை வழங்குகின்றன.

ஐடியா வாடிக்கையாளர்கள் அதிருப்தி

ஐடியா வாடிக்கையாளர்கள் அதிருப்தி

குரல் அழைப்புகளுக்கான வரம்பை பொறுத்தமட்டில், ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன. இந்த திருத்தம் ஏர்டெல் ரூ.999/- உடன் போட்டியிடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செல்லுபடி குறைக்கப்பட்டுள்ளதால் ஐடியா வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
ஏர்டெல் ரூ.999/-

ஏர்டெல் ரூ.999/-

பார்தி ஏர்டெல் நிறுவனத்தி ரூ.999/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து மொத்தம் 60 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ்கள்/நாள் ஆகிய நன்மைகளை 90 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Idea Cellular’s Rs 897, Rs 1197 Prepaid Plans Now Offering 2GB and 2.5GB Data Per Day for 70 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X