அள்ளிக்கொடுக்குமா.? ஐடியாவின் திருத்தப்பட்ட 2ஜி, 3ஜி திட்டங்கள்.!
குறைந்த செலவிலான ரீசார்ஜ் செய்து ஐடியாவின் 2ஜி மற்றும் 3ஜி டேட்டாவை பெற உதவும் திருத்தப்பட்ட திட்டங்களின் தொகுப்பு.
ஏறத்தாழ அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களும் தன் பயனர்களுக்கான அற்புதமான திட்டங்களை வழங்கி வருகின்றன. இது அனைத்திற்கும் மூல காரணமாய் ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய வரம்பற்ற சலுகைகள் மற்றும் அது கொடுத்த கடினமான போட்டி ஆகியவைகளே காரணம். இந்த போட்டியில் ஐடியா செல்லுலார் நிறுவனமொன்றும் மிகவும் பின்தங்கிய நிலையில் இல்லாமல் சரியான ஈடுகொடுத்து வருகிறது என்றே கூறலாம்.
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா நிறுவனங்களுக்கு பிறகு, இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனம் எனும் வகையில், ஐடியா செல்லுலார் சமீபத்தில் அதன் 3ஜி மற்றும் 2ஜி தரவு திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் போட்டியிடும் பொருட்டு விகிதங்களை திருத்தி அமைத்தது.

அள்ளிக்கொடுக்குமா.!?
ஐடியா தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர் ஏற்கனவேயுள்ள வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் அவர்களை ஜியோவிற்கு மாற அனுமதிக்காமல் இருக்கவும் இந்த முயற்சியை செய்துள்ளது. சரி ஐடியா அதன் திருத்தப்பட்ட 2ஜி, 3ஜி திட்டங்கள் மூலம் அள்ளிக்கொடுக்குமா.!? அல்லது கிள்ளிக்கொடுக்குமா.?

ரூ.46/- மற்றும் ரூ.36/-
முன்னதாக, ரூ.46/-க்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் 120எம்பி அளவிலான டேட்டாவை வழங்கிய திட்டம் இப்போது திருத்தப்பட்டு அதே விலைக்கு 150 எம்பி தரவு வழங்குகிறது. மறுபுறம், முன்னதாக, ரூ.36/-க்கு (2ஜி) 28 நாட்கள் செல்லுபடியாகும் 120எம்பி அளவிலான டேட்டாவை வழங்கிய திட்டம் இப்போது திருத்தப்பட்டு அதே விலைக்கு 180 எம்பி தரவு வழங்குகிறது.

ரூ.69/-
முன்னதாக ரூ.69/-க்கு (3ஜி) 7 நாட்கள் செல்லுபடியாகும் 280 எம்பி அளவிலான டேட்டாவை வழங்கிய அதே திட்டம் இப்போது திருத்தப்பட்டு 15 நாட்கள் செல்லுபடியாகும் 1 ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை அதே விலைக்கு வழங்குகிறது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.249/-
முன்னதாக ரூ.249/-க்கு 1ஜிபி அளவியிலான 3ஜி தரவு அளித்த அதே திட்டம் இப்போது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 1.5 ஜிபி அளவிலான 3ஜி தரவை வழங்குகிறது. அதேபோல், ரூ.649/- பேக் ஆனது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 5ஜிபி தரவுக்கு பதிலாக 5.5 ஜிபி தரவை அதே விலையில் வழங்குகிறது.

ரூ.449/- மற்றும் ரூ.849/-
முன்னதாக ரூ.449/-க்கு 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் 3 ஜிபி அளவிலான தரவை வழங்கும் அதே திட்டம் இப்போது 3.5 ஜிபி தரவை வழங்குகிறது. அதேபோல் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.849/- டேட்டா பேக் 7ஜிபிக்கு பதிலாக 7.5 ஜிபி தரவை அதே விலைக்கு வழங்குகிறது

மேலும் படிக்க
ஒரு லேண்ட் லைன் வாங்கிடலாமோ.? அசத்தும் பிஎஸ்என்எல் எல்எல்-49 பிளான்.!


Click it and Unblock the Notifications