Home
News

கார்கள், இருசக்கர வாகனம், ஸ்மார்ட்போன், கேஷ்பேக் வழங்கும் ஐடியா நிறுவனம்: எப்படி?

குறிப்பாக ஐடியா நிறுவனம் வழங்கும் இந்த கேஷ்பேக் கூப்பன் வடிவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

ஐடியா நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது,அதன்படி ரூ.100 ரீசார்ஜ் செய்தால் ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சலுகையை பல்வேறு ஐடியா வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.100 ரீசார்ஜ் செய்தால் ரூ.20 கேஷ்பேக் வழங்கப்படும்: ஐடியா அசத்தல்.!

குறிப்பாக ஐடியா நிறுவனம் வழங்கும் இந்த கேஷ்பேக் கூப்பன் வடிவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே கேஷ்பேக் கூப்பன் வடிவில் வழங்கப்படும் இந்த தொகையைக் கொண்டு ரூ.199 மற்றும் அதற்கும் அதிக விலையுள்ள ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5:

ஜூன் 5:

ஐடியா நிறுவனம் இப்போது அறிவித்துள்ள இந்த சலுகை ஜூன் 5-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை ஐடியா செயலி அல்லது அதிகாரப்புர்வ வலைதள்தில் ரூ.100 ரீசார்ஜ் செய்யும் போது மட்டுமே ரூ.20 கேஷ்பேக் கூப்பன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்து.

 பிரீபெய்டு வாடிக்கையாளர்கள்:

பிரீபெய்டு வாடிக்கையாளர்கள்:

ஐடியா நிறுவனம் மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, அந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள்
கார்கள், இருசக்கர வாகனம், ஸ்மார்ட்போன், கேஷ்பேக் போன்ற அனைத்தையும் வென்றிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரூ.199/- திட்டம்:

ரூ.199/- திட்டம்:

ஐடியா நிறுவனத்தின் ரூ.199/- திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்கள் பயன்படுத்த முடியும்,
பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங்,தினசரி 10எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

 ஒரு ஜிபி டேட்டா மதிப்பானது ரூ.3.04/-க்கு வந்துள்ளது.!

ஒரு ஜிபி டேட்டா மதிப்பானது ரூ.3.04/-க்கு வந்துள்ளது.!

ஐடியாவின் ரூ.499/- திட்டத்தின்படி, ஐடியா செல்லுலாரின் ஒரு ஜிபி டேட்டா மதிப்பானது ரூ.3.04/-க்கு வந்துள்ளது. சமீபத்தில் ஐடியா ரூ.53/- மற்றும் ரூ.92/- என்கிற அதன் புல்லெட் டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு
திட்டங்களும் ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-ஆன் திட்டங்கள் ஆகும். அதாவது இந்த திட்டங்கள் முறையை 3ஜிபி மற்றும் 6ஜிபி அளவிலான கூடுதல்
டேட்டாவை வழங்கும். முக்கிய குறிப்பு: நிறுவனத்தின் அன்லிமிடெட் திட்டங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு தான்,
இதுவொரு ஆட்-ஆன் திட்டமாக செயல்பட்டு, கூடுதல் டேட்டாவை வழங்கும். மற்ற பயனர்களுக்கு, இவைகள் ஒரு சாதாரண
டேட்டா திட்டமாக தான் அணுக கிடைக்கும்.

 6 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை:

6 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை:

ஐடியாவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.92/- ஆனது மொத்தம் 6 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். இதன் செல்லுபடி
காலம் ஏழு நாட்கள் ஆகும். இருப்பினும், இந்த ஆட்-ஆன் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஆனது, பயனர்களின் நடப்பு திட்டங்களின் படி மாறுபடும் என்பதையும் குறிப்பிடத்தக்கது. அதாவது வரம்பற்ற குரல் அல்லது காம்போ பேக் சந்தாதாரர்களுக்கு அவர்களின் திட்டம் செல்லுபடியாகும் காலம் வரை 6ஜிபி நீடிக்கும்.

 3 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை

3 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை

ஐடியாவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.53/- ஆனது மொத்தம் 3 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். இதன் செல்லுபடி
காலம் ஒரு நாள் மட்டுமே ஆகும். இந்த திட்டமும் ரூ.92/- போன்றே பயனர்களின் நடப்பு திட்டங்களின் படி மாறுபடும் என்பதையும்
குறிப்பிடத்தக்கது. அதாவது வரம்பற்ற குரல் அல்லது காம்போ பேக் சந்தாதாரர்களுக்கு அவர்களின் திட்டம் செல்லுபடியாகும் காலம்
வரை 3 ஜிபி நீடிக்கும். புல்லெட் ஆட்-ஆன் பேக்ஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஐடியா செல்லுலார் திட்டங்கள் ஆனது, டேட்டா நன்மையை
மட்டும் வழங்கும் அன்லிமிடெட் பிளான்களுக்கு பொருந்தாது என்பதும், இந்த திட்டத்தின் கீழ் டேட்டா ரோல் ஓவர் அம்சம், அதாவது பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த ரீசார்ஜ் சுழற்சிக்கு கொண்டு செல்லும் ஆதரவு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Idea Offers Unlimited Video Streaming Cashback Unlimited Calls More Prizes On These Recharges : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X