ரூ.148, ரூ.248, ரூ.345/-க்கு ஐடியாவின் அதிரடி அன்லிமிடெட் திட்டங்கள்.!
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து மிகவும் எதிர்பார்த்தப்படியே ஐடியா நிறுவனம் ஜியோவிற்கு எதிரான அதன் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ அதன் கட்டண திட்டங்களை அறிவிக்க ஆரம்பித்ததும் பிற போட்டியாளர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டன ஆனால் அந்த நிம்மதி சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. ஜியோ அறிவித்த அதன் ப்ரைம் கட்டண திட்டங்களையெல்லாம் கேட்டதும் "இதற்கு இலவசமாகவே கொடுக்கலாம்" என்று கொந்தளித்தார் ஏர்டெல் நிறுவனத்தின் மிட்டல். அதுதான் உண்மையும் கூட, ஏதோ கடமைகென்று கட்டண திட்டங்களின் கீழ் சேவைகளை வழங்குவது போல தான் உள்ளன ஜியோ ப்ரைம் ரீசார்ஜ்கள்.!
அதனை தொடர்ந்து ஏர்டெல் 1ஜிபி அளவிலான டேட்டாவை ரூ.10/- என்ற விலை நிர்ணயத்தின் கீழ் வழங்கும் திட்டங்களை அறிமுகம் செய்தது. பின்னர், தொடர்ந்து மிகவும் எதிர்பார்த்தப்படியே ஐடியா நிறுவனம் ஜியோவிற்கு எதிரான அதன் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

14ஜிபி
இந்திய நாட்டின் மூன்றாவது பெரிய தொலை தொடர்பு ஆப்ரேட்டர் ஆன ஐடியா செல்லுலாரின் ஒரு அறிக்கை மூலம் மை ஐடியா பயன்பாட்டின்கீழ் புதிய 4ஜி வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புகளுடன் சேர்த்து 14ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதாக தெரியப்படுத்தியுள்ளது.

ரீசார்ஜ்
ரூ.345/- ரீசார்ஜ் விலைகொண்ட இந்த திட்டத்தின் கீழ் வழக்கமான சாதாரண ஐடியா பயனர் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு நாளைக்கு 500 எம்பி அளவிலான எல்லையுடன் இந்த திட்டத்தை அனுபவிக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

கடந்த ஆண்டு
ஐடியா தொலை தொடர்பு ஆப்ரேட்டர் மூலம் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட திட்டமொன்றில் வரம்பற்ற அழைப்பு சேர்த்து வெறும் 500எம்பி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் புதிய 4ஜி கைபேசி கொண்ட பயனர்களுக்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கியது இங்கே குறிப்பிடத்தக்கது.

6ஜிபி
மேலும் வெளியான அறிக்கையின்படி, ஐடியா செல்லுலார், 6ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.148/- திட்டம் மற்றும் 248 நிமிடங்கள் உடன் 6ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் ரூ.248/- ஆகிய மேலும் இரண்டு திட்டங்களை வழங்குகிறது.

வெளிப்படை
ஐடியா நிறுவனத்தின் இந்த சமீபத்திய நடவடிக்கை, ஏப்ரல் 1 தொடங்கி இலவச வரம்பற்ற குரல் சேர்த்து 28 ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவைக்கு எதிரானது என்பது மிக வெளிப்படை.

ரூ.145/- மற்றும் ரூ.349/-
மறுபக்கம் பார்தி ஏர்டெல், நாட்டின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் திட்டத்தை எதிர்கொள்ள ரூ.145/- மற்றும் ரூ.349/- என்ற இரண்டு ஆக்கிரமிப்பு தொகுக்கப்பட்ட திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ரூ.9,800/-க்கு நோக்கியா 3 - இதை விட வேறென்ன வேண்டும்.!?


Click it and Unblock the Notifications