ஐடியா & ப்ளிப்கார்ட் வழங்கும் கூட்டு சலுகையின் கீழ் நமக்கென்ன லாபம்.?

Written By:

ப்ளிப்கார்ட் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய 4ஜி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கூட்டு சலுகையில் கீழ், இ-காமர்ஸ் இணையதளமான ப்ளிப்கார்டில் இருந்து ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி விலையில் ஐடியா செல்லுலார் வழங்கும் 15ஜிபி டேட்டவை பெறலாம்.

பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமே கிடைக்கப்பெறும் இந்த சலுகையின் கீழ் ஒரு 4ஜி ஸ்மார்ட்போனை பெறுவது எப்படி மற்றும் இந்த ஐடியா- ப்ளிப்கார்ட் சலுகையின் முக்கிய விவரங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
புதிய 4ஜி ஸ்மார்ட்போன்

புதிய 4ஜி ஸ்மார்ட்போன்

இந்த சலுகை பெற நீங்கள் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஏற்கனவே ஒரு ஐடியா 4ஜி சிம் வைத்திருப்பவர் நேரடியாக ப்ளிப்கார்ட்டில் இருந்து ஒரு புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டியது தான்.

பட்டியல்

பட்டியல்

இருப்பினும் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் அனைத்து 4ஜி ஸ்மார்ட்போன்க்ளும் இந்த சலுகையின் கீழ் வராது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த வாய்ப்பின்கீழ் என்னென்ன 4ஜி கருவிகளை பெற முடியும் என்ற விவரம் ஐடியா வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதை காண இங்கே கிளிக் செய்யவும்.

பதிவு

பதிவு

உடன் நீங்கள் ஒரு புதிய 4ஜி ஐடியா சிம் கொண்டுளீர்கள் அல்லது 4ஜி சேவைக்கு மேம்படுத்திவிட்டீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பின்னர் ப்ளிப் கார்ட் சலுகையில் கீழ் வாங்கிய ஸ்மார்ட்போனில் உங்களின் சிம் அட்டையை நுழைத்து பின்னர் ப்ளிப்கார்ட்டில் வாங்கிய ஸ்மார்ட்போனை ஐடியா நெட்வர்க் கொண்டு உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டும், பதிவு முடிந்ததும் வெறுமனே சாதாரண1ஜிபி ரீசார்ஜ் செய்ய கூடுதலாக 14ஜிபி தானாக உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

மார்ச் 31 வரை

மார்ச் 31 வரை

இந்த சலுகையின் கீழ் கிடைக்கும் தரவு 28 நாட்கள் செல்லுபடியாகும் என்று நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் 1ஜிபி விலையில் கிடைக்கும் 15ஜிபி அளவிலான டேட்டாவை மார்ச் 31 வரை அனுபவிக்க முடியும்.

ரீசார்ஜ் மூலமாகவும்

ரீசார்ஜ் மூலமாகவும்

இந்த போஸ்ட்பெயிட் கூடுதல் தரவு தொகுப்பை ரூ.255/-க்கு ரீசார்ஜ் செய்வது மூலமாகவும் அனுபவிக்க முடியும். போஸ்ட்பெயிட் பயனர்கள் தங்கள் புதிய 4ஜி ஸ்மார்ட்போனில் புதிய சிம் அட்டையை இணைத்த 48-72 மணி நேரத்திற்குள் இந்த வாய்ப்பை செயல்படுத்த வேண்டும்.

டயல்

டயல்

இதை நிகழ்த்த உங்கள் போஸ்ட்பெய்டு எண்ணில் இருந்து *121*999# அல்லது 121999 என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும். ஐடியாவின் 3ஜி மற்றும் 2ஜி வட்டாரங்களில் உள்ள பயனர்கள் 3ஜி மற்றும் 2ஜி டேட்டாவை மட்டுமே பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ப்ளிப்கார்ட்டின் குடியரசு தின சிறப்பு விற்பனை, என்னென்ன வாங்கலாம்.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Idea Offers 15GB of Data for 1GB Price to Buyers of 4G Smartphones From Flipkart. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot