பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போனுக்கு ஐடியா வழங்கும் அசத்தலான கேஷ்பேக்.!

By Prakash
|

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் மாடல் இரண்டு வகைகளில் வருகிறது, அதாவது 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது, அதன்பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.

தற்சமயம் ஐடியா நிறுவனம் இந்த பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1500-வரை கேஷ்பேக் அறிவித்துள்ளது, அதன்படி ரூ.3,799 மற்றும் 4,499-விலையில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை ஐடியா வாடிக்கையாளர்கள் முதல் 12 மாதங்களுக்குப் பிறகு ரூபாய் 300 ரொக்கமாகப் பெறுவார்கள், அடுத்த 12 மாதங்களுக்குப் பிறகு ரூ 1,200 பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம் ரூபாய் 199-க்கு ஐடியா ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 பானாசோனிக் பி100:

பானாசோனிக் பி100:

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போன் மாடல் 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1,280 x 720 பிக்சல் மற்றும்
2.5டி கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 மீடியாடெக்:

மீடியாடெக்:

இக்கருவி 1.25ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலியைக் கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போனில் 1ஜிபி/2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக
128ஜிபி மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்களைப் பற்றி பேசுகையில், 8மெகாபிக்சல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 5மெகாபிக்சல் செல்பீ கேமரா
இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, மைக்ரோ யுஎஸ்பி, கைரேகை ஸ்கேனர் போன்ற இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
பேட்டரி:

பேட்டரி:

மேலும் பானாசோனிக் பி100 ஸ்மார்ட்போனில் 2200எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Idea to offer cashback on Panasonic P100 smartphone but their is a catch ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X