நாள் ஒன்றிற்கு 1ஜிபி 4ஜிடேட்டா - இது ஐடியாவின் அதிரடி.!

ஐடியா போஸ்ட்பெய்டு திட்டம்.!

|

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் புதிதாய் அறிமுகமான நிறுவனம் போல ஆக்கிரமிப்பு சலுகைகளை அள்ளியள்ளி வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மூலம் ஏற்கனவே இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் நிகழும் கட்டண யுத்தம் போதாது என்று தற்போது வெளியாகியுள்ள ஜியோ ப்ரைம் சேவையின் கீழான சம்மர் சப்ரைஸ் சலுகை மூலம் மேலும் தீவிரமான கட்டண யுத்தம் தொடங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1/-க்கு 1ஜிபி வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில்ஐடியா நிறுவனம் ஜியோவை எதிர்கொள்ளும் அதன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.!

1ஜிபி

1ஜிபி

ஐடியா நிறுவனம் இந்தியாவில் அதன் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கு 4ஜி தரவு வாய்ப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது, இதன் கீழ் நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்ற அளவிலான டேட்டாவை போஸ்ட்பெய்டு பயனர்கள் அனுபவிக்க முடியும்.

விலை

விலை

ரூ.300/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள இந்த பேக் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் இந்த தள்ளுபடியை முதல் மூன்று மாதங்களுக்கு பயனர்கள் பெறலாம்.

சலுகை

சலுகை

ரூ.199/- மற்றும் அதற்கு மேலான திட்டத்தை அனுபவிக்கும் அனைத்து ஐடியா போஸ்ட்பெய்டு பயனர்களும இந்த ஒரு நாளைக்கு 1ஜிபி பெறும் சலுகையை பெற முடியும். மேலும் குறிப்பிட்டபடி முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பேக்கை பெற முடியும்.

ரூ.499/-

ரூ.499/-

மேலும் ரூ.499/- மற்றும் அதற்கு மேலான திட்டங்கள் பெறும் போஸ்ட்பெய்டு பயனர்கள் இலவசமாக இந்த 1ஜிபி/ நாள் பேக்கை அனுபவிக்கலாம். உடன் அடிப்படை வாடகை திட்டங்களை பெறும் ரூ.349/- மற்றும் ரூ.498/- திட்டங்களுக்கு இடையிலேயான திட்டங்களை பெறும் பயனர்கள் இந்த பேக்கை ரூ.50/- தள்ளுபடி விலையில் பெற முடியும்.

4ஜி அல்லாத கைபேசிகளுக்கு

4ஜி அல்லாத கைபேசிகளுக்கு

இந்த பேக்கை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் பெற வேண்டும் என்று ஐடியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மாதாந்திர பேக்கின் கீழ் கிடைக்கும் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி என்ற தரவு 4ஜி கைபேசிகள் மட்டுமே கிடைக்கும் மற்றும் 4ஜி அல்லாத கைபேசிகளுக்கு மாதம் 3ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

இராஜ தந்திரி அம்பானி : ஜியோ இலவச சேவை நீட்டிப்பின் பின்னணி என்ன.?

Best Mobiles in India

Read more about:
English summary
Idea launches 1GB 4G data per day plan for postpaid users. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X