பிஎஸ்என்எல் இப்படி செய்யும்னு ஏர்டெல்-ஐடியா நினைச்சு கூட பார்த்திருக்காது.!

சமீப காலமாக ஐடியா செல்லுலாரின் பெயரை அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது.

|

சமீப காலமாக ஐடியா செல்லுலாரின் பெயரை அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. இதன் வழியாக, ஐடியா நிறுவனம், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் உடன் போட்டியிட தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

பிஎஸ்என்எல் இப்படி செய்யும்னு ஏர்டெல்-ஐடியா நினைச்சு பார்த்திருக்காது!

அதன் ஒரு பகுதியாக, ஐடியா செல்லுலார் நிறுவனம் அதன் ரூ.149/- மதிப்புள்ள ப்ரீபெய்ட் குரல் அழைப்பு திட்டத்தை சத்தமின்றி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நன்மைகள் என்ன.? இதன் செல்லுபடி காலம் என்ன.? மற்றும் இது எப்படி ஏர்டெல் திட்டமொன்றுடன் போட்டியிடுகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

ஐடியாவின் ரூ.149/- திட்டம்.!

ஐடியாவின் ரூ.149/- திட்டம்.!

ஐடியாவின் இந்த ரூ.149/- திட்டமானது வெளிப்படையாக ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299/- ப்ரீபெய்ட் திட்டத்துடன் போட்டி இடுகிறது. இருந்தாலும் கூட இதுவொரு குரல் அழைப்பு நன்மைகளை மட்டும் வழங்கும் திட்டமாக இருப்பதால் (அதாவது எந்த தரவு நன்மையையும் வழங்காது), ஏர்டெல் சற்று தாக்குபிடித்து கொள்கிறது.

விரைவில் அனைத்து வட்டங்களிலும்.!

விரைவில் அனைத்து வட்டங்களிலும்.!

டேட்டா நன்மை இல்லையென்றாலும் கூட வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பின் கீழ் இலவச எஸ்எம்எஸ் நன்மைகளை சேர்த்துள்ளது. தற்போது வரையிலாக நிறுவனத்தின் சில வட்டாரங்களில் மட்டுமே அணுக கிடைக்கும் இந்த ரூ.149 ஆனது விரைவில் அனைத்து வட்டங்களிலும் நேரடியாக செல்லுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர், தேசிய & ரோமிங்.!

உள்ளூர், தேசிய & ரோமிங்.!

நன்மைகளை பொறுத்தவரை, ரூ.149 வாய்ஸ் பிளான் ஆனது பெயர் குறிப்பிடுவதை போன்றே வரம்பற்ற குரல் அழைப்புகளை (உள்ளூர், தேசிய & ரோமிங்) வழங்குகிறது. வரம்புகளை பொறுத்தவரை, நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்களுக்கும், வாரத்திற்கு 1000 நிமிடங்களுக்கும், மற்றும் செல்லுபடியாகும் காலத்திற்குள் 100 தனித்தனி இலக்கங்களுக்கு மட்டுமே என்கிற வரம்புகளை கொண்டுள்ளது.

21 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

21 நாட்களுக்கு செல்லுபடியாகும்.!

அழைப்பு நன்மைகளுடன் சேர்த்து, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் என்கிற நன்மையையும் வழங்குகிறது. ஐடியா செல்லுலார்லிலிருந்து கிடைக்கும் இந்த புதிய திட்டமாநாடும், ரீசார்ஜ் செய்த தேதி முதல் 21 நாட்களுக்கு செல்லுபடியாகும். முன்னரே குறிப்பிட்டபடி இந்த ரூ.149/- ஆனது எந்த விதமான டேட்டா நன்மையையும் வழங்காது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299/- ப்ரீபெய்ட் வாய்ஸ் திட்டம்.!

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299/- ப்ரீபெய்ட் வாய்ஸ் திட்டம்.!

ஐடியாவின் இந்த புதிய திட்டத்திற்கு அடித்தளமே ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299/- ப்ரீபெய்ட் வாய்ஸ் திட்டம் தான். அது மொத்தம் 45 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது ஆக ஐடியாவும் அதே போன்ற நன்மைகளை வழங்கும் ரூ.299/- மதிப்பிலான ப்ரீபெய்ட் வாய்ஸ் திட்டத்தை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பிஎஸ்என்எல்-க்கு  நிகராக இன்னும் முன்னேறவில்லை.!

பிஎஸ்என்எல்-க்கு நிகராக இன்னும் முன்னேறவில்லை.!

என்னதான் ஐடியாவும் ஏர்டெல் நிறுவனமும் அடித்துக்கொண்டாலும் கூட, அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு நிகராக இன்னும் முன்னேறவில்லை என்றே கூறலாம். பிஎஸ்என்எல்-ன் வாய்ஸ் திட்டங்களானது ரூ.99 மற்றும் ரூ.319/-க்கு கிடைக்கிறது. இவைகள் முறையே 28 நாட்கள் மற்றும் 90 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Idea Gives Tough Fight to Airtel; Launches Rs 149 Voice Calling Plan for 21 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X