தற்சமயம் பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து பல சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது, அதன்படி ஐடியா நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிவித்தது, இந்த திட்டம் நாடு முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐடியா நிறுவனம் இப்போது ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளது, அதாவது இந்த திட்டத்தில் தற்சமயம் நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தை 84 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தில் முன்பு 1ஜிபி டேட்டா வழங்கப்பட்டது, அதன்பின்பு 70நாட்களுக்கு பயன்படும் வகையில் இருந்தது.
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக இந்த திட்டம் மாற்றியமைக்கப்படுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும்
பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்திவருகிறது ஐடியா நிறுவனம்.

ஐடியா தற்சமயம் அறிவித்துள்ள புதிய ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், மொத்தமாக 56ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஐடியாவின் ரூ.249/- திட்டதில் இலவச கால் அழைப்புகள் ரோமிங் போன்ற சேவைகளையும் பயன்படுத்த முடியும், ஆனால் எஸ்எம்எஸ் சலுகைகள்
இந்த திட்டத்தில் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த புதிய திட்டமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமேகிடைக்கிறது.

ஐடியா நிறுவனத்தின் ரூ.357/-ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ரூ.249/-திட்டத்தில் உள்ள அதே சலுகையை கொண்டுள்ளது இந்த ரூ.357/- ப்ரீபெய்ட் திட்டம்.

ஐடியா நிறுவனத்தின் ரூ.998/- திட்டத்தில் தினசரி 5ஜிபி டேட்டா வீதம் 3ஜி அல்லது 4ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக 35 நாட்கள் மட்டுமே இந்த திட்டத்தை பயன்படுத்த முடியும். மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்றவை இந்த திட்டத்தில் கிடைக்கும்.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.