Home
News

ஐடியா: சத்தமின்றி 2 திட்டங்கள் அறிமுகம் + காம்போ திட்டத்தில் திருத்தம்.!

இன்று தனது இரண்டு புதிய கட்டணத் திட்டங்களை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளதுடன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் கிடைக்கும் காம்போ திட்டமான ரூ.498/-ல் பிரதான திருத்தும் ஒன்றையும் செய்துள்ளது

By Muthuraj

கடந்த இரண்டு வாரங்களாக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அவர்களின் கட்டணத் திட்டங்களை மறுசீரமைத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக பார்தி ஏர்டெல் மற்றும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள், தற்போதுள்ள திட்டங்களுக்கு ஏற்ற மாதிரியான (முக்கியமாக ரிலையன்ஸ் ஜியோ) புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

ஐடியா: சத்தமின்றி 2 திட்டங்கள் அறிமுகம் + காம்போ திட்டத்தில் திருத்தம்

இதனை தொடர்ந்து ​ஐடியா செல்லுலார் நிறுவனம், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் அதன் ரூ.197/- திட்டத்தை நேற்று அறிமுகம் செய்த கையோடு இன்று தனது இரண்டு புதிய கட்டணத் திட்டங்களை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளதுடன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் கிடைக்கும் காம்போ திட்டமான ரூ.498/-ல் பிரதான திருத்தும் ஒன்றையும் செய்துள்ளது.

செல்லுபடி காலம் நீட்டிப்பு

செல்லுபடி காலம் நீட்டிப்பு

முதலில், ஐடியா செல்லுலார் செய்த திருத்தத்தை பற்றி பேசலாம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் கிடைக்கும் ரூ.498 என்ற கட்டண திட்டமானது நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் என மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அறிமுகமானது. இனி அந்த திட்டம் அதே விலையில் அதே நன்மைகளுடன் மொத்தம் 77 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இரண்டு புதிய கட்டணத் திட்டங்கள்

இரண்டு புதிய கட்டணத் திட்டங்கள்

பின்னர், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.449/- மற்றும் ரூ.529/- என்கிற திட்டங்களை பொறுத்தமட்டில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் கிடைக்கும் ரூ.498/- கட்டண திட்டத்தின் அதே நன்மைகளை தான் வழங்குகிறது.

ரூ.449/- நன்மைகள்

ரூ.449/- நன்மைகள்

ஆந்திரா மற்றும் தெலுங்கானா பயனர்களுக்கு கிடைக்கும் இந்த திட்டமானது தினசரி 1 ஜிபி தரவு, வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர், எஸ்டிடி மற்றும் தேசிய ரோமிங்) மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்கும்.

ரூ.529/- நன்மைகள்

ரூ.529/- நன்மைகள்

மற்றொரு புதிய திட்டமான ரூ.529/- ஆனது மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும், தற்போது இந்த திட்டம் கேரள வட்டத்தில் உள்ள ஐடியா சந்தாதாரர்களுக்கு செல்லுபடியாகும் என்று உறுதிப்படுத்த முடியும். இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 1 ஜிபி தரவு மற்றும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்கும்.

குரல் அழைப்பு நன்மைகளுக்கான வரம்பு

குரல் அழைப்பு நன்மைகளுக்கான வரம்பு

சிறந்த பகுதியாக இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மூன்று திட்டங்களும் திறந்த சந்தை திட்டங்களாகும். இருப்பினும் துரதிருஷ்டவசமாக, குரல் அழைப்பு நன்மைகளை பொறுத்தமட்டில், நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் ஏழு நாட்களுக்கு 1000 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும் உடன் எந்த விதமான மாதாந்திர வெளிச்செல்லும் குரல் அழைப்பு வரம்பையும் நிறுவனம் குறிப்பிடவில்லை.

Best Mobiles in India

English summary
Idea Cellular Revises Unlimited Combo Plans; Now Offering a Rs 529 Plan With Unlimited Voice Calls, 1GB Data Per Day for 84 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X