ஏர்டெல், வோடோபோனை மிஞ்சும் ஐடியாவின் 'நிர்வாணா' திட்டங்கள்.!

|

ஜியோவின் அறிமுகத்தை தொடர்ந்து, இந்திய டெலிகாம் சந்தையில் என்னென்ன சலுகைகள் மற்றும் நன்மைகளையெல்லாம் வழங்க முடியுமோ, அதை அனைத்தையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

ஏர்டெல், வோடோபோனை மிஞ்சும் ஐடியாவின் 'நிர்வாணா' திட்டங்கள்.!

ப்ரீபெயிட் வாடிக்கையாளர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டாள் போதாதென போஸ்ட்பெயிட் பயனர்களுக்கான திட்டங்களும், கூடுதல் நன்மைகளும் அவ்வப்போது தலைதூக்குகின்றன. அதிலொரு சிறப்பான நன்மை தான் 'டேட்டா ரோல் ஓவர்'.

முதலில் ஏர்டெல் மூலம் அதனை தொடர்ந்து வோடபோன் இந்தியா மூலம் அறிவிக்கப்பட்ட இந்த நன்மையானது ஒரு பில்லிங் சுழற்சியில் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு கொண்டுசெல்ல உதவும்.

'நிர்வாணா' போஸ்ட்பெயிட்

'நிர்வாணா' போஸ்ட்பெயிட்

ஏர்டெல் மற்றும் வோடாபோனின், இந்த போஸ்ட்பெயிட் கட்டண திட்ட நன்மை சார்ந்த அச்சுறுத்தலுக்கு ஐடியா செல்லுலார் சற்று தாமதமாக பதிலளித்தது. உடன் ஐடியா அதன் போஸ்ட்பெயிட் கட்டணத்திட்டங்களை திருத்தி அதை 'நிர்வாணா' போஸ்ட்பெயிட் கட்டண திட்டங்களாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் மைபிளான் உடன் நேரடியாக போட்டி

ஏர்டெல் மைபிளான் உடன் நேரடியாக போட்டி

இந்த நிர்வாணா திட்டத்தின் கீழ், ஐடியா அதன் எட்டு பட்ஜெட் திட்டங்களை தொகுத்து வழங்குமென அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் அனைத்துமே ஏர்டெல் மைபிளான் இன்பினிட்டி போஸ்ட்பெயிட் திட்டங்களுடன் நேரடியாக போட்டியிடுகிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல், வோடாபோனை விட அதிக டேட்டா

ஏர்டெல், வோடாபோனை விட அதிக டேட்டா

ஐடியா வழங்கும் இந்த நிர்வாணா திட்டத்தின் சிறப்பான பகுதி என்னவென்றால், இந்த திட்டங்கள் வழங்கும் போஸ்ட்பெயிட் தரவு நன்மையானது, ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் போஸ்ட்பெயிட் திட்டங்களை விட சிறந்ததாகும்.

ரூ.389/-க்கு தொடங்கி ரூ.2,999/- வரை நீள்கிறது

ரூ.389/-க்கு தொடங்கி ரூ.2,999/- வரை நீள்கிறது

ஐடியாவின் இந்த நிர்வாணா வரவுசெலவு திட்டமாநாடு ரூ.389/-க்கு தொடங்கி அதிகபட்ச மதிப்பு திட்டமாக ரூ.2,999/- வரை நீள்கிறது. அதாவது ஏர்டெல் மற்றும் வோடபோனின் திட்டடங்களை போலவே ரூ.2,999/- வரை நீள்கிறது.

வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் உள்வரும் ரோமிங்

வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் உள்வரும் ரோமிங்

நிர்வாணாவின் கீழ் தொகுக்கப்பட்டுள்ள ரூ.389/- ஆனது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் உள்வரும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது. ரூ.389/- தவிர இதர அனைத்து நிர்வாணா திட்டங்களும் வெளிச்செல்லும் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.

நாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ்

நாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ்

உடன் நிர்வாணாவின் அனைத்து திட்டங்களும், மொத்த பில்லிங் சுழற்சிக்கு நாள் ஒன்றிற்கு 100 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகின்றன. இந்த திட்டங்களின் கீழ் கிடைக்கும் டேட்டா நன்மையானது ஒவ்வொரு திட்டத்திற்கும் வேறுபடுகிறது.

ரூ.389/- முதல் ரூ.999/- வரை

ரூ.389/- முதல் ரூ.999/- வரை

ரூ.389/- திட்டமானது 10ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும், ரூ.499/- என்கிற நிர்வாணா திட்டமானது 20 ஜிபி டேட்டாவும், ரூ.649/- திட்டமானது மொத்தம் 35 ஜிபி அளவிலான டேட்டாவும், ரூ.999/- நிர்வாணா திட்டமானது மொத்தம் 60 ஜிபி டேட்டாவும் வழங்குகிறது.

ரூ.1,299/- முதல் ரூ.2999/- வரை

ரூ.1,299/- முதல் ரூ.2999/- வரை

ரூ.1,000/-க்கு மேல் கிடைக்கும் நிர்வாணா திட்டங்களை பொறுத்தமட்டில், ரூ.1,299/-போஸ்ட்பெயிட் திட்டமானது மொத்தம் 85 ஜிபி டேட்டாவும், ரூ.1,699/- திட்டமானது 110ஜிபி டேட்டாவும், ரூ.1,999/- நிர்வாணா திட்டமானது 135ஜிபி டேட்டாவும் மற்றும் இறுதியாக, ரூ.2,999/- திட்டமானது மொத்தம் 220ஜிபி டேட்டாவும் வழங்குகிறது.

இலவச சர்வதேச ரோமிங்

இலவச சர்வதேச ரோமிங்

முன்பு கூறியதுபோல், இந்த திட்டங்கள் அனைத்தும் (ரூ.389/-ஐ தவிர) வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன. உடன் வோடபோன் போன்றே, ஐடியா செல்லுலார் நிறுவனமானது சில நிர்வாணா திட்டங்களுடன் இலவச சர்வதேச ரோமிங் நிமிடங்களையும் வழங்குகிறது.

ரூ.1,299/- மற்றும் அதற்கு மேல்

ரூ.1,299/- மற்றும் அதற்கு மேல்

ஐடியா நிர்வானாவின் ரூ.1,299/- மற்றும் அதற்கு மேலிருக்கும் திட்டங்களின் ஒரு பில்லிங் சுழற்சிக்கு 100 ஐஎஸ்டி நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இந்த இலவச சர்வதேச குரல் அழைப்பு நன்மையை அமெரிக்கா, கனடா, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

500ஜிபி டேட்டா ரோல் ஓவர்

500ஜிபி டேட்டா ரோல் ஓவர்

கூடுதலாக ஐடியா அதன் போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கான டேட்டா ரோல் ஓவர் நன்மையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.1,699 மற்றும் அதற்கு மேலான திட்டங்களில் அதிகபட்சம் 500ஜிபி அளவிலான பயன்படுத்தாத டேட்டாவையு சேகரிக்க முடியும். அதே நேரத்தில் ரூ.1,299/- மற்றும் அதற்கு கீழே உள்ள திட்டங்களில் 200ஜிபி வரை திரட்ட முடியும்.

Best Mobiles in India

English summary
Idea Cellular Silently Introduces Nirvana Postpaid Plans Offering Data Roll Over Benefit of Up to 500GB. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X