ரூ.149/-ல் அதிரடி திருத்தம்; ஆளுக்கொரு ஐடியா 4ஜி சிம் பார்சல்.!
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக ஐடியா செல்லுலார் நிறுவனமானது அதன் ரூ.149/- கட்டணத் திட்டத்தை மறுசீரமைத்துள்ளது. ரூ.149/- மட்டுமின்றி ஐடியா செல்லுலார் ஆனது அதன் ரூ.10
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்காக ஐடியா செல்லுலார் நிறுவனமானது அதன் ரூ.149/- கட்டணத் திட்டத்தை மறுசீரமைத்துள்ளது. ரூ.149/- மட்டுமின்றி ஐடியா செல்லுலார் ஆனது அதன் ரூ.109/- திட்டத்தையும் திருத்தியுள்ளது.
தற்போது வரையிலாக இந்த இரண்டு திட்டமும், திருத்தப்பட்ட நன்மைகளுடன் ஹிமாச்சலப் பிரதேச வட்டத்தில் கிடைக்கின்றன. இதர வட்டங்களில் பழைய நன்மைகளுடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன என்பதும், விரைவில் இந்த திருத்தமானது அனைத்து வட்டங்களுக்கும் உருட்டப்படலாம், அப்படி நிகழ்ந்தால் பெரும்பாலான மக்கள் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் சேவைக்குள் குதிக்க வாய்ப்புள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 28 ஜிபி
திருத்தப்பட்ட நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.149/- ஆனது செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குவதோடு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டா என மொத்தம் 28 ஜிபி அளவிலான தரவு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

வரம்பற்ற குரல் அழைப்பு
மறுகையில் உள்ள ரூ.109/- ஆனது 28 நாட்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளுடன், செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் சேர்த்து 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதவடகு இந்த திட்டம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா வழங்காது என்று அர்த்தம்.

ரோமிங் அழைப்பு
திருத்தியமைக்கப்பட்ட ரூ.149/- ஆனது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.149/-க்கு கடும் போட்டியை உண்டாக்குகிறது. பார்தி ஏர்டெல் ரூ.149/-ன் நன்மைகளை பொறுத்தமட்டில், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 1ஜிபி அளவிலான டேட்டா ஆகியவைகளை மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

வாரத்திற்கு 1000 நிமிடங்கள்
திருத்தப்பட்ட ஐடியா ரூ.109/-க்கு சமமான ரூ.93/- திட்டமும் பார்தி ஏர்டெல் நிறுவனத்திடம் உள்ளது.எனினும், ஐடியா செல்லுலாரின் குரல் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்று கட்டுப்படுத்தப்படுகிறது.

அறியப்படாத காரணங்களுக்காக
முன்னதாக, இது ஒரு நாளைக்கு 300 நிமிடங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு 1200 நிமிடங்கள் இருந்தது. பின்னர் சில அறியப்படாத காரணங்களுக்காக அழைப்பு வரம்புகள் குறைக்கப்பட்டது. ஐடியா செல்லுலார் நிறுவனத்தை தொடர்ந்து வோடாபோன் இந்தியா நிறுவனமும் இதே மாற்றத்தை கொண்டுவந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

"வரம்பற்ற" குரல் அழைப்பு
மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆனது எந்த விதமான வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கி வருகிறது. அதாவது இந்தியாவின் உண்மையான "வரம்பற்ற" குரல் அழைப்புகளை வழங்கி வருகிறது என்று அர்த்தம்.

ஒரு படி மேலே
இருப்பினும் ஏர்டெல் வழங்கும் ரூ.149/- ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்க, மறுகையில் உள்ள ஐடியாவும் ரூ.149/- ஆனது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக இருக்கிறது. இது ஐடியா செல்லுலாரை ஒரு படி மேலே கொண்டு செல்ல உதவுகிறது.


ஜியோ நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி
எது எவ்வாறாகினும், ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகிய இரு நிறுவனங்களுமே நேருக்கு நேர் மோதிக்கொள்வதை விட ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டா திட்டங்களை எதிர்ப்பதிலேயே தான் குறியாக உள்ளன. மேலும் பல - ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா மற்றும் பிஎஸ்என்எல் - டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications