Home
News

அறிமுகம் : நாள் ஒன்றிற்கு 3ஜிபி வழங்கும் ஐடியா ப்ரீபெயிட் திட்டம்

. மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்ட இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

By Muthuraj

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் அடிச்சுவட்டை தொடர்ந்து, ஐடியா செல்லுலார் தற்போது அதன் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்ட இந்த திட்டம் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

இந்த ஐடியா ரூ.349/- ஆனது நிறுவனத்தின் ரூ.357/- ப்ரீபெயிட் திட்டத்துடன் முற்றிலும் மாறுபடுகிறது. இந்த இரண்டு திட்டங்களும் ஐடியாவின் பெரும்பாலான வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைத்தாலும் கூட, ரூ.357/- திட்டத்தை விட ரூ.349/- ஆனது சிறந்த நன்மைகளை வழங்குகிறது.

மொத்த காலத்திற்கும் 84 ஜிபி அளவிலான டேட்டா

மொத்த காலத்திற்கும் 84 ஜிபி அளவிலான டேட்டா

நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டா என செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 84 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது. ஐடியா செல்லுலார் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த திட்டம் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- என்கிற சமீபத்தில் திருத்தியமைக்கப்பட்ட திட்டத்துடன் போட்டி இடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடி

மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடி

முன்னரே குறிப்பிட்டபடி, ஐடியா செல்லுலார் நிறுவனமானது ரூ.357/- என்கிற ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது. இது பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் சேர்த்து தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை மொத்தம் 28 நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்கும்.

ரூ.357 திட்டம் அகற்றப்படலாம்

ரூ.357 திட்டம் அகற்றப்படலாம்

ஐடியாவின் புதிய ரூ.349 திட்டமானது, இன்னும் சில வட்டாரங்களில் கிடைக்கப்பெறவில்லை என்பதும், மறுகையில் உள்ள ஐடியா ரூ.357 திட்டமானது ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐடியா செல்லுலாரின் புதிய ரூ.349/- ஆனதும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாக அறிமுகப்படுத்தியவுடன் ரூ.357 திட்டம் அகற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வினாடிக்கு ஒரு பைசா

வினாடிக்கு ஒரு பைசா

ரூ.349 திட்டமானது குரல் அழைப்பு வரம்புகளுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 250 க்கும் மேற்பட்ட வெளிச்செல்லும் நிமிடங்களை (உள்ளூர் + எஸ்டிடி அழைப்புகள்) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் தொடர்ச்சியான முறையில் ஏழு நாட்களுக்கு ஏறக்குறைய 1000 நிமிடங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.

10 கேபி அளவிலான டேட்டாவிற்கு 4 பைசா

10 கேபி அளவிலான டேட்டாவிற்கு 4 பைசா

இந்த திட்டத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவெனில், தேசிய ரோமிங்கில் ஐடியா நெட்வொர்க்கில் மட்டுமே இலவச ரோமிங் நன்மை கிடைக்கும், மற்ற நெட்வொர்க்குகளுக்கு கிடைக்காது. டேட்டா வரம்பை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 3 ஜிபி தரவு முடிந்த பிறகு, 10 கேபி அளவிலான டேட்டாவிற்கு 4 பைசா என்கிற விகிதத்தில் கட்டபம் வசூலிக்கப்படும். எல்லாவற்றிக்கும் மேலாக ஐடியா வழங்கும் இந்த டேட்டா 4ஜி அல்ல, 3ஜி அல்லது 2ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ

பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ

போட்டியாளரான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டமனது, நாள் ஒண்றிக்ரு 3 ஜிபி அளவிலான டேட்டா, உண்மையான வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் செல்லுபடியாகும் 28 நாட்களுக்கும் நாள்ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. இந்த ஏர்டெல் திட்டமானது எந்த விதமான வரம்பையும் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ ஆனது 28 நாட்களுக்கும் நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Idea Cellular’s New Rs 349 Prepaid Plan Offers 84GB Data for 28 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X