Home
News

ரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்.!

இந்திய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்கள் ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் உற்சாகமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன

By Muthuraj

இந்திய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர்கள் ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் உற்சாகமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கு நன்றி, ஏனெனில் ஜியோவின் வருகை தான், இந்தியாவின் உண்மையான இன்டர்நெட் டேட்டாவின் விலைப்புள்ளிகளை நமக்கு அறியப்படுத்தியது.

ரூ.53/- மற்றும் ரூ.92/-க்கு ஐடியாவின் புல்லெட் டேட்டா பேக்ஸ் அறிமுகம்!

அந்நாளில் இருந்து இந்நாள் வரையிலாக, நாளுக்கொரு புதிய திட்டம் அறிமுகம் ஆகி வருகிறது. அந்த பட்டியலின் புதிய இணைப்புகள் தான் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் ரூ.53/- மற்றும் ரூ.92/- ப்ரீபெயிட் திட்டங்கள்.ஐடியா செல்லுலார் அறிவித்துள்ள இந்த இரண்டு திட்டங்களும் ஏர்டெல் நிறுவனத்தின் ஆட்-ஆன் திட்டங்களுக்கு இணையானவை ஆகும்.

கூடுதல் டேட்டாவை வழங்கும்.!

கூடுதல் டேட்டாவை வழங்கும்.!

அதுமட்டும் இல்லாது, இவைகள் ரிலைன்ஸ் ஜியோவுனும் போட்டியிடுகின்றன. இந்த ஆட்-ஆன் திட்டங்கள் முறையை 3ஜிபி மற்றும் 6ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவை வழங்கும். முக்கிய குறிப்பு: நிறுவனத்தின் அன்லிமிடெட் திட்டங்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு தான், இதுவொரு ஆட்-ஆன் திட்டமாக செயல்பட்டு, கூடுதல் டேட்டாவை வழங்கும். மற்ற பயனர்களுக்கு, இவைகள் ஒரு சாதாரண டேட்டா திட்டமாக தான் அணுக கிடைக்கும்.

6 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை.?

6 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை.?

ஐடியாவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.92/- ஆனது மொத்தம் 6 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். இதன் செல்லுபடி காலம் ஏழு நாட்கள் ஆகும். இருப்பினும், இந்த ஆட்-ஆன் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ஆனது, பயனர்களின் நடப்பு திட்டங்களின் படி மாறுபடும் என்பதையும் குறிப்பிடத்தக்கது. அதாவது வரம்பற்ற குரல் அல்லது காம்போ பேக் சந்தாதாரர்களுக்கு அவர்களின் திட்டம் செல்லுபடியாகும் காலம் வரை 6ஜிபி நீடிக்கும்.

3 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை.?

3 ஜிபி ஆட்-ஆன் பேக்கின் நன்மை.?

ஐடியாவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமான ரூ.53/- ஆனது மொத்தம் 3 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்கும். இதன் செல்லுபடி காலம் ஒரு நாள் மட்டுமே ஆகும். இந்த திட்டமும் ரூ.92/- போன்றே பயனர்களின் நடப்பு திட்டங்களின் படி மாறுபடும் என்பதையும் குறிப்பிடத்தக்கது. அதாவது வரம்பற்ற குரல் அல்லது காம்போ பேக் சந்தாதாரர்களுக்கு அவர்களின் திட்டம் செல்லுபடியாகும் காலம் வரை 3 ஜிபி நீடிக்கும்.

டேட்டா ரோல் ஓவர் அம்சம்.?

டேட்டா ரோல் ஓவர் அம்சம்.?

புல்லெட் ஆட்-ஆன் பேக்ஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஐடியா செல்லுலார் திட்டங்கள் ஆனது, டேட்டா நன்மையை மட்டும் வழங்கும் அன்லிமிடெட் பிளான்களுக்கு பொருந்தாது என்பதும், இந்த திட்டத்தின் கீழ் டேட்டா ரோல் ஓவர் அம்சம், அதாவது பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த ரீசார்ஜ் சுழற்சிக்கு கொண்டு ஸ்லேலும் ஆதரவு எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 நாட்களை மற்றும் 7 நாட்கள் என்கிற செல்லுபடி.!

3 நாட்களை மற்றும் 7 நாட்கள் என்கிற செல்லுபடி.!

கடந்த வாரம், பார்தி ஏர்டெல், அதன் இரண்டு ஆட் ஆன் திட்டங்களை அறிவித்ததும், அது ரூ.92 மற்றும் ரூ.49/- என்கிற விலை நிர்ணயத்தை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நன்மைகளை பொறுத்தவரை, முறையே 3ஜிபி மற்றும் 6ஜிபி டேட்டாவை வழங்குகிறது, 3 மற்றும் 7 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தை கொண்டுள்ளது.

ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101/- என்கிற விலை.!

ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101/- என்கிற விலை.!

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டங்கள், ஐடியாவின் ஆட்-ஆன் திட்டங்களை போலவே, வரம்பற்ற குரல் மற்றும் வரம்பற்ற காம்போ திட்டங்களின் செல்லுபடிக்கு ஏற்றபடி செல்லுபடியை மாற்றிக்கொள்ளும். மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவும் இதேபோன்ற ஆட்-ஆன் திட்டங்களை கொண்டுள்ளது. அவைகள் ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101/- என்கிற விலையின் கீழ் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Idea Cellular’s New Prepaid Bullet Data Packs Offer 3GB Data at Rs 53 and 6GB Data at Rs 92. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X