எல்லா 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் அட்டகாசமான கேஷ்பேக்; ஐடியா அதிரடி.!

|

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலார், இன்று அதன் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு மெகா கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இன்று முதல் அதாவது (பிப்ரவரி 23, 2018) தொடங்கி புதிய 4ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் ஐடியா ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு அனைவருக்குமே இந்த வாய்ப்பு கிடைக்கும்.

எல்லா 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் அட்டகாசமான கேஷ்பேக்; ஐடியா அதிரடி.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கான கேஷ்பேக் ஆபரை போலல்லாமல், இந்த ஐடியா வாய்ப்பானது அனைத்து பிராண்டுகளின் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கும் பொருந்துகிறது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ரூ.2,000/- கேஷ்பேக் கிடைக்கும்.!

ரூ.2,000/- கேஷ்பேக் கிடைக்கும்.!

இந்த வாய்ப்பின் கேள் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000/- கேஷ்பேக் கிடைக்கும். இந்த வாய்ப்பின் ஒரே வரம்பு என்னவெனில் இது 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் ஒரு பகுதியாக, ஐடியா செல்லுலார் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.199/- அல்லது அதற்கு மேலான ரீசார்ஜை நிகழ்த்த வேண்டும்.

ரூ.199/- திட்டத்தின் நன்மைகள்.!

ரூ.199/- திட்டத்தின் நன்மைகள்.!

ஐடியா ரூ.199/- திட்டத்தின் நன்மைகளை பொறுத்தமட்டில், இது நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி தரவு வழங்குகிறது. உடன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் ரோமிங் உட்பட வரம்பற்ற குரல் அழைப்புகளையும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.!

ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.!

ரூ.199/- மட்டுமின்றி ரூ.398, ரூ.449, ரூ.459 மற்றும் ரூ.509 போன்ற நீண்ட காலம் செல்லுபடியாகும் ஐடியா திட்டங்களுகளுடனும் வாடிக்கையாளர்கள் செல்லலாம். இவைகளை தேர்ந்தெடுத்தல் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.

ரூ.3000/- அளவிலான ரீசார்ஜை நிகழ்த்த வேண்டும்.!

ரூ.3000/- அளவிலான ரீசார்ஜை நிகழ்த்த வேண்டும்.!

இப்படியாக, ஐடியா ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் முதல் 18 மாதங்களில் ரூ.750/- கேஷ்பேக்கை பெற ரூ.3000/- அளவிலான ரீசார்ஜை நிகழ்த்த வேண்டும். பின்னர் மீதமுள்ள ரூ.1250/-ஐ பெற அடுத்த 18 மாதங்களுக்க்குள் ரூ.3000/- அளவிலான ரீசார்ஜை நிகழ்த்த வேண்டும்.

போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்.?

போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்.?

மறுகையில் உள்ள ஐடியா போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களை பொறுத்தமட்டில், நிறுவனத்தின் அனைத்து நிர்வானா காம்போ திட்டங்களுமே இந்த வாய்ப்பிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. மேற்கண்டதை போலவே தொடர்ச்சியான 36 மாதங்களுக்கு ஐடியாவின் நிர்வானா ரூ.389/- தொடங்கி ரூ.2,999 வரை கிடைக்கும் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
ஐடியாவின் தந்திரம்.!

ஐடியாவின் தந்திரம்.!

வாடிக்கையாளர்களின் மத்தியில் 4ஜி கைபேசிகளை மேம்படுத்துவதன் மூலம் ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் 4ஜி சேவையும் மேம்படும் என்பது வெளிப்படை. மேலும் பல டெலிகாம் மற்றும் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Idea Cellular’s Mega Cashback Offer Provides Users Rs 2,000 Cashback on Every 4G Smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X