ஜியோவிற்கு டாட்டா; 600ஜிபி டேட்டா வரை வழங்கும் ஐடியாவின் மாஸ்டர் பிளான்.!

இந்த திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது.? விலை நிர்ணயம் மற்றும் நன்மைகள் என்ன.? குறிப்பாக இது ஜியோவின் எதிர்வரும் பிராட்பேண்ட் திட்டத்திற்கு சவாலாக அமையுமா.? போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் இதோ.!

|

ரிலையன்ஸ் ஜியோ எனும் புயலில் சிக்கி சின்னாபின்னமான "முன்னாள் மிகப்பெரிய" இந்திய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லுலார் ஆனது, ஜியோவிற்கு எதிராக பல வகையான திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தும் கூட பார்தி ஏர்டெல் போன்ற போட்டித்தன்மைமிக்க திட்டங்களை வழங்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

இருப்பினும் விட்டுக்கொடுக்க விரும்பாத ஐடியா செல்லுலார் அதன் பிரதான மாஸ்டர் பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது அதிவேக கம்பி இணைப்பு பிராட்பேண்ட் சேவைகளை ஐடியா செல்லுலார் வழங்க தொடங்கியுள்ளது. இந்த திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது.? விலை நிர்ணயம் மற்றும் நன்மைகள் என்ன.? குறிப்பாக இது ஜியோவின் எதிர்வரும் பிராட்பேண்ட் திட்டத்திற்கு சவாலாக அமையுமா.? போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் இதோ.!

அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபைபர் பிராட்பேண்ட்

அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபைபர் பிராட்பேண்ட்

ஐடியா பிராட்பேண்ட் (Idea Broadband) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது ஹோம் பிராட்பேண்ட் (Home Broadband a) மற்றும் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபைபர் பிராட்பேண்ட் (Ultra Fast Fiber broadband) ஆகிய இரண்டு திட்டங்களையும் வழங்குகிறது.

மொத்தம் 600 ஜிபி

மொத்தம் 600 ஜிபி

ஹோம் பிராட்பேண்ட் திட்டங்களானது ரூ.449/-ல் தொடங்கி ரூ.949/- வரை நீள்கிறது. அதிகபட்சமாக 4 எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகம் வழங்கும் இந்த திட்டங்கள் மொத்தம் 600 ஜிபி அளவிலான டேட்டா வரம்பை கொண்டுள்ளது.

500ஜிபி அளவிலான டேட்டா

500ஜிபி அளவிலான டேட்டா

மறுகையில் உள்ள ஐடியாவின் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டமானது ரூ.699/-ல் தொடங்கி மிக விலை உயர்ந்த திட்டமான ரூ.2,499/- வரை நீள்கிறது. இந்த திட்டங்களானது அதிகபட்சமாக 200எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகத்தின் கீழ் 500ஜிபி அளவிலான டேட்டா வரம்பை கொண்டுள்ளது.

ஹோம் பிராட்பேண்ட்

ஹோம் பிராட்பேண்ட்

முதல் வகை பிராட்பேண்ட் சேவையான ஹோம் பிராட்பேண்ட் ஆனது ஏற்கனவே இருக்கும் வீட்டு பயனர்களை இலக்காக கொண்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் ஆறு பிராட்பேண்ட் திட்டங்கள் உள்ளன. ரூ.449/- என்கிற அடிப்படை திட்டமானது 2 எம்பிபிஎஸ் பதிவிறக்க வேகம் மற்றும் 30ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த வரம்பு முடிந்த பின்னர் 512கேபிபிஎஸ் என்று வேகம் குறைக்கப்படும்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
ஒரு முறை கட்டணமாக ரூ.500/- வசூலிக்கப்படும்

ஒரு முறை கட்டணமாக ரூ.500/- வசூலிக்கப்படும்

இதர ஐந்து திட்டங்களான ரூ.549, ரூ.649, ரூ.749, ரூ.849 மற்றும் ரூ.949/- ஆகியவைகள் முறையே 50ஜிபி, 100ஜிபி, 200ஜிபி, 400ஜிபி மற்றும் 600ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகின்றன. இந்த திட்டங்களுக்கான ஒரு முறை கட்டணமாக ரூ.500/- வசூலிக்கப்படும் என்றும் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

40 ஜிபி மற்றும் 75 ஜிபி அளவிலான  டேட்டா

40 ஜிபி மற்றும் 75 ஜிபி அளவிலான டேட்டா

இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டரின் அதிவிரைவு பிராட்பேண்ட் சேவையை பொறுத்தமட்டில் மொத்தம் எட்டு திட்டங்கள் உள்ளது. இவை சிறிய வியாபாரங்கள் மற்றும் அலுவலகங்களை இலக்காகக் கொண்டுள்ளன. ரூ.699/- மற்றும் ரூ.899/- பிராட்பேண்ட் திட்டங்கள் 40 ஜிபி மற்றும் 75 ஜிபி அளவிலான டேட்டாவை 40 ஜிபிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் வழங்குகின்றன. வரம்பு முடிந்த பின்னர் 2 எம்பிபிஎஸ் அளவிலாம வேகத்தின் கீழ் இணைய சேவை கிடைக்கும்.

400ஜிபி அளவிலான டேட்டா

400ஜிபி அளவிலான டேட்டா

பட்டியலில் அடுத்தடுத்து, ரூ.1,999, ரூ.1,299, ரூ.1,499, ரூ.1,799 மற்றும் ரூ.2,099/- உள்ளது. இந்த ஐந்து திட்டங்களும் முறையே 120ஜிபி, 175ஜிபி, 225ஜிபி, 300ஜிபி மற்றும் 400ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும்.டேட்டா வரம்பு முடிந்த பின்னர் ரூ.1,999/- மற்றும் ரூ.1,299/- 2எம்பிபிஎஸ் வேகத்திலும், ரூ.1,499, ரூ.1,799/- மற்றும் ரூ.2,099/- ஆனது 4எம்பிபிஎஸ் வேகத்திலும் இணைய சேவையை வழங்கும்.

500 ஜிபி அளவிலான டேட்டா

500 ஜிபி அளவிலான டேட்டா

ஐடியா பிராட்பேண்ட் சேவையின் பிரீமியம் திட்டமான ரூ.2,499/- ஆனது 500 ஜிபி அளவிலான டேட்டாவை 200 எம்பிபிஎஸ் அளவிலான வேகத்தின் கீழ் கொடுக்கும். டேட்டா வரம்பு முடிந்த பின்னர் 4எம்பிபிஎஸ் வேகத்தின்கீழ் இணைய சேவையை வழங்கும். இந்த திட்டங்களுக்காக ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் ஐடியா செல்லுலார் ரூ.1500/- பாதுகாப்பு தொகையை வசூலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிசி ப்ரொடெக்ட், ஐடியா பிசி ப்ரொடெக்ட் பிளஸ்

பிசி ப்ரொடெக்ட், ஐடியா பிசி ப்ரொடெக்ட் பிளஸ்

இந்த பிராட்பேண்ட் சேவைகளுடன் ஐடியா பிசி ப்ரொடெக்ட், ஐடியா பிசி ப்ரொடெக்ட் பிளஸ் மற்றும் ஐடியா மியூசிக் டிமாண்ட் போன்ற மூன்று 'வேல்யூ ஆடட்' சேவைளும் கிடைக்கும். ஐடியாவின் இந்த நடவைக்கையானது வயர்லெஸ் பிராட்பேண்ட் பிரிவில் மிக விரைவில் நுழையும் ஜியோபைபர் சேவைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது வெளிப்படை.

புனேயில் மட்டுமே கிடைக்கின்றன

புனேயில் மட்டுமே கிடைக்கின்றன

ஐடியாவின் இந்த பிராட்பேண்ட் சேவையானது அதிகார்பூரமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட நிறுவனத்தின் வலைத்தளத்தினுள் உலாவும்போது இந்த திட்டங்களை சந்தித்திக்க முடிந்தது. துரதிருஷ்டவசமாக, இந்த திட்டங்கள் தற்போது புனேயில் மட்டுமே கிடைக்கின்றன. விரைவில் மற்ற வட்டங்களுக்கும் விஸ்தரிக்கலாம். மேலும் புனே முழுவதிலும் இந்த சேவை கிடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும், சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றது. மேலும் பல வகையான டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
Idea Cellular’s Fiber Broadband Plans Start at Rs 699. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X